Wassamaaa'i zaatil burooj
கோள்கள் நிறைந்த வானத்தின் மீதும்,
Wal yawmil maw'ood
வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாளின் மீதும்,
Wa shaahidinw wa mashhood
சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!
Qutila as haabul ukhdood
அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.)
Annaari zaatil waqood
அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.)
Iz hum 'alaihaa qu'ood
அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில்,
Wa hum 'alaa maa yaf'aloona bilmu 'mineena shuhood
நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்.
Wa maa naqamoo minhum illaaa aiyu'minoo billaahil 'azeezil Hameed
(நம்பிக்கை கொண்ட) அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்.
Allazee lahoo mulkus samaawaati wal ard; wallaahu 'alaa kulli shai 'in Shaheed
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குறியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்தையும் அறிந்தவனாகவே இருந்தான்.
Innal lazeena fatanul mu'mineena wal mu'minaati summa lam yatooboo falahum 'azaabu Jahannama wa lahum 'azaabul hareeq
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்திப் பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. அன்றி, அவர்களுக்கு (அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பொசுக்கியவாறு நெருப்பால்) பொசுக்கும் வேதனையுமுண்டு.
القرآن الكريم: | البروج |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Buruj |
ஸூரா: | 85 |
வசனம்: | 22 |
Total Words: | 109 |
Total Characters: | 465 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 27 |
Starting from verse: | 5909 |