Iz qaala lahoo Rabbuhooo aslim qaala aslamtu li Rabbil 'aalameen
இப்ராஹீமை (நோக்கி) அவருடைய இறைவன் "நீ (எனக்கு) வழிப்படு!" எனக் கூறிய சமயத்தில் அவர் (எவ்வித தயக்கமுமின்றி) "அகிலத்தாரின் இறைவனுக்கு (இதோ) நான் வழிப்பட்டேன்" எனக் கூறினார்.
Wa wassaa bihaaa Ibraaheemu baneehi wa Ya'qoob, yaa baniyya innal laahas tafaa lakumud deena falaa tamootunna illaa wa antum muslimoon
அவ்வாறே இப்ராஹீம் தன்னுடைய சந்ததிகளுக்கும் உபதேசித்தார். யஃகூபும் (தன்னுடைய சந்ததிகளை நோக்கி) "என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். ஆதலால் நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக அன்றி இறந்துவிட வேண்டாம்" (என்றே கூறினார்).
Am kuntum shuhadaaa'a iz hadara Ya'qoobal mawtu iz qaala libaneehi maa ta'budoona mim ba'dee qaaloo na'budu ilaahaka wa ilaaha aabaaa'ika Ibraaheema wa Ismaa'eela wa Ishaaqa Ilaahanw waahidanw wa nahnu lahoo muslimoon
(யூதர்களே!) யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி "எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு "உங்களுடைய இறைவனும், உங்களுடைய மூதாதைகளான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்" என்றே கூறினார்கள்.
Tilka ummatun qad khalat lahaa maa kasabat wa lakum maa kasabtum wa laa tus'aloona 'ammaa kaano ya'maloon
(மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்.) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உங்களிடம் கேட்கப்படமாட்டாது.
Wa qaaloo koonoo Hoodan aw Nasaaraa tahtadoo; qul bal Millata Ibraaheema Haneefanw wa maa kaana minal mushrikeen
(நம்பிக்கையாளர்களை நோக்கி) அவர்கள் "நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரான வழியை அடைந்து விடுவீர்கள்" எனக் கூறுகிறார்கள். அதற்கு "அவ்வாறன்று! நேரான வழியைச் சார்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணை வைத்து வணங்கியவரல்ல" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
Qoolooo aamannaa billaahi wa maaa unzila ilainaa wa maaa unzila ilaaa Ibraaheema wa Ismaa'eela wa Ishaaqa wa Ya'qooba wal Asbaati wa maaootiya Moosa wa 'Eesaa wa maaa ootiyan Nabiyyoona mir Rabbihim laa nufaariq baina ahadim minhum wa nahnu lahoo muslimoon
(நம்பிக்கையாளர்களே!) நீங்களும் கூறுங்கள்: "அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பட்ட அனைத்தையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம்."
Fa in aamanoo bimisli maaa aamantum bihee faqadih tadaw wa in tawallaw fa innamaa hum fee shiqaaq; fasayakfeekahumul laah; wa Huwas Samee'ul Aleem
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
Sibghatal laahi wa man ahsanu minal laahi sibghatanw wa nahnu lahoo 'aabidoon
"அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வைவிட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? (யாருமில்லை) நாம் அவனையே வணங்குவோம்" (என்றும் கூறுவீர்களாக!)
Qul atuhaaajjoonanaa fil laahi wa Huwa Rabbunaa wa Rabbukum wa lanaa a'maalunaa wa lakum a'maalukum wa nahnu lahoo mukhlisson
"நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? எங்களுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அவனே! எங்கள் செயல்கள் (அதன் பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (அதன் பலன்) உங்களுக்கே. நாங்கள் அவனுக்கு இணைவைக்காது, வணக்கங்களை முற்றிலும் அவனுக்கே களப்பற்றதாக ஆக்குவோம்" (என்றும் கூறுவீர்களாக!)
Am taqooloona inna Ibraaheema wa Ismaa'eela wa Ishaaq wa Ya'qooba wal asbaata kaanoo Hoodan aw Nasaaraa; qul 'a-antum a'lamu amil laah; wa man azlamu mimman katama shahaadatan 'indahoo minallaah; wa mallaahu bighaafilin 'ammaa ta'maloon
"நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இவர்களும், இவர்களுடைய சந்ததிகளும் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்களென கூறுவீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா? அல்லாஹ்வா? என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அன்றி, (இதைப்பற்றி) தன்னிடமிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைப்பவனைவிடப் பெரிய அநியாயக்காரன் யார்? உங்களின் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இல்லை" (என்றும் கூறுங்கள்.)