Kuloo min taiyibaati maa razaqnaakum wa laa tatghaw feehi fa yahilla 'alaikum ghadabee wa mai yahlil 'alaihi ghadabee faqad hawaa
நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதைப் புசித்து வாருங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள். (மீறினால்) உங்க மீது என் கோபம் இறங்கிவிடும். எவன்மீது என்னுடைய கோபம் இறங்குகின்றதோ அவன் நிச்சயமாக அழிந்தே விடுவான்.
Wa innee la Ghaffaarul liman taaba wa aamana wa 'amila saalihan summah tadaa
எவர் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து நேரான வழியில் நிலைத்தும் இருக்கின்றாரோ அவருடைய குற்றங்களை நான் மிக மிக மன்னிப்பவனாகவே இருக்கின்றேன்.
Wa maaa a'jalaka 'an qawmika yaa Moosa
(மூஸா தூர் ஸீனாய் மலைக்கு வந்த சமயத்தில் அவரை நோக்கி இறைவன்) "மூஸாவே! நீங்கள் உங்களுடைய மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்கள்?" (என்று கேட்டான்).
Qaala hum ulaaa'i 'alaaa asaree wa 'ajiltu ilaika Rabbi litardaa
அதற்கவர் "அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்" என்று கூறினார்.
Qaala fa innaa qad fatannaa qawmaka mim ba'dika wa adallahumus Saamiriyy
அதற்கு (இறைவன்) "நீங்கள் வந்த பின்னர் நாம் உங்களுடைய மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். "ஸாமிரீ" என்பவன் அவர்களை வழிகெடுத்துவிட்டான்" என்று கூறினான்.
Faraja's Moosaaa ilaa qawmihee ghadbaana asifaa; qaala yaa qawmi alam ya'idkum Rabbukum wa'dan hasanaa; afataala 'alaikumul 'ahdu am arattum ai yahilla 'alaikum ghadabum mir Rabbikum fa akhlaftum maw'idee
(உடனே) மூஸா பெரும் துக்கத்துடன் கோபம் கொண்டவராகத் தன்னுடைய மக்களிடம் திரும்பி வந்து "என்னுடைய மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு(த் தவ்றாத் என்னும் வேதத்தைத் தருவதாக) அழகான வாக்குறுதி அளிக்க வில்லையா? அவன் வாக்குறுதி அளித்து அதிக நாள்களாகி விட்டனவா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனின் கோபம் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியே எனக்குச் செய்த வாக்குறுதிக்கு நீங்கள் மாறு செய்தீர்களா?" என்று கேட்டார்.
Qaaloo maaa akhlafnaa maw'idaka bimalkinna wa laakinna hummilnaaa awzaaram min zeenatil qawmi faqazafnaahaa fakazaalika alqas Saamiriyy
அதற்கவர்கள் "நாங்கள் உங்களுக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் இஷ்டப்படி மாறு செய்யவில்லை. ஆனால், நாங்கள் சுமந்துகொண்டு வந்த (ஃபிர்அவ்னுடைய) மக்களின் நகைகளை (நெருப்பில் எறியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதில் அவைகளை) நாங்கள் எறிந்தோம். அவ்வாறே ஸாமிரீயும் (தன்னிடமிருந்த நகைகளை) எறிந்தான்.
Fa akhraja lahum 'ijlan jasadal lahoo khuwaarun faqaaloo haazaaa ilaahukum wa ilaahu Moosaa fanasee
பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். (இதனை) மறந்து விட்டு (மூஸா மலைக்குச் சென்று) விட்டார்" என்று கூறினார்கள்.
Afalaa yarawna allaa yarji'u ilaihim qawlanw wa laa yamliku lahum darranw wa laa naf'aa
(என்ன ஆச்சரியம்!) அவர்களு(டைய கேள்விகளு)க்கு அச்சிலை யாதொரு பதில் கூறாமலிருப்பதையும், நன்மையோ தீமையோ (யாதொன்றையும்) அவர்களுக்குச் செய்ய சக்தியற்று இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா?
Wa laqad qaala lahum Haaroonu min qablu yaa qawmi innamaa futintum bihee wa inna Rabbakumur Rahmaanu fattabi'oonee wa atee'ooo amree
இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி "என்னுடைய மக்களே! (இச்சிலையை வணங்கி) நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலையன்று!) என்னைப் பின்பற்றுங்கள்; என்னுடைய கட்டளைக்கு கட்டுப்படுங்கள்" என்று கூறினார்.