Skip to main content

قَالَ
கூறினார்
لَهُم
அவர்களுக்கு
مُّوسَىٰ
மூஸா
وَيْلَكُمْ
உங்களுக்கு கேடுதான்
لَا تَفْتَرُوا۟
கற்பனை செய்யாதீர்கள்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
كَذِبًا
பொய்யை
فَيُسْحِتَكُم
உங்களை அழித்து விடுவான்
بِعَذَابٍۖ
வேதனையைக் கொண்டு
وَقَدْ
திட்டமாக
خَابَ مَنِ
நஷ்டமடைந்து விட்டான்/எவன்
ٱفْتَرَىٰ
கற்பனை செய்தான்

Qaala lahum Moosaa wailakum laa taftaroo 'alal laahi kaziban fa yus hitakum bi 'azaab, wa qad khaaba manif taraa

மூஸா (அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி) "உங்களுக்கென்ன கேடு? அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய்யைக் கற்பனை செய்து கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால்) அவன் (தன்) வேதனையைக்கொண்டு உங்களை அழித்துவிடுவான். பொய் சொன்னவர்களெல்லாம் அழிந்தே போனார்கள்" என்று கூறினார்.

Tafseer

فَتَنَٰزَعُوٓا۟
அவர்கள் தர்க்கித்துக் கொண்டனர்
أَمْرَهُم
காரியத்தில் தங்கள்
بَيْنَهُمْ
தங்களுக்கு மத்தியில்
وَأَسَرُّوا۟
இன்னும் அவர்கள் இரகசியமாக ஆக்கிக் கொண்டனர்
ٱلنَّجْوَىٰ
அந்த பேச்சை

Fatanaaza'ooo amrahum bainahum wa asarrun najwaa

(இதைக் கேட்ட) அவர்கள் தங்களுக்குள் இதைப் பற்றித்தர்க்கித்துக் கொண்டு இரகசியமாகவும் ஆலோசனை செய்து (ஒரு முடிவு கட்டிக்) கொண்டனர்.

Tafseer

قَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
إِنْ هَٰذَٰنِ
நிச்சயமாக இந்த இருவரும்
لَسَٰحِرَٰنِ
சூனியக்காரர்கள்
يُرِيدَانِ
அவ்விருவரும் நாடுகின்றனர்
أَن يُخْرِجَاكُم
உங்களை வெளியேற்றுவதற்கு(ம்)
مِّنْ أَرْضِكُم
உங்கள் பூமியிலிருந்து
بِسِحْرِهِمَا
தங்கள் சூனியத்தைக் கொண்டு
وَيَذْهَبَا
இன்னும் அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கு
بِطَرِيقَتِكُمُ
உங்கள்தலைவர்களை
ٱلْمُثْلَىٰ
சிறந்த

Qaalooo in haaazaani lasaahiraani yureedaani ai yukhrijaakum min ardikum bisihrihimaa wa yazhabaa bitareeqatikumul muslaa

அவர்கள் (மக்களை நோக்கி) "நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்களுடைய சூனியத்தின் மூலம் உங்களை உங்களுடைய இவ்வூரை விட்டு வெளியேற்றி விடவும், உங்களுடைய மேலான மார்க்கத்தை அழித்து விடவும் விரும்புகிறார்கள்.

Tafseer

فَأَجْمِعُوا۟
ஆகவே உறுதிப்படுத்துங்கள்
كَيْدَكُمْ
சூழ்ச்சிகளை உங்கள்
ثُمَّ
பின்பு
ٱئْتُوا۟
வாருங்கள்
صَفًّاۚ
ஓர் அணியாக
وَقَدْ
திட்டமாக
أَفْلَحَ
வெற்றி அடைந்து விட்டார்
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
مَنِ ٱسْتَعْلَىٰ
மிகைத்தவர்

Fa ajmi'oo kaidakum summma'too saffaa; wa qad aflahal yawma manis ta'laa

ஆதலால் உங்கள் சூனியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பின்பு (அவரை எதிர்க்க) அணியணியாக வாருங்கள். இன்றைய தினம் எவருடைய காரியம் மேலோங்கியதோ அவரே நிச்சயமாக வெற்றி பெறுவார்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
إِمَّآ أَن
ஒன்று நீர் எறிவீராக
وَإِمَّآ أَن
அவர்கள் நாங்கள் இருப்போம்
أَوَّلَ
முதலாவதாக
مَنْ أَلْقَىٰ
எறிபவர்களில்

Qaaloo yaa Moosaaa immaaa an tulqiya wa immaaa an nakoona awala man alqaa

பின்னர் (சூனியம் செய்ய வந்த) அவர்கள் (மூஸாவை நோக்கி) "மூஸாவே! (சூனியத்தை) நீங்கள் எறிகின்றீர்களா? அல்லது முதலாவதாக நாங்கள் எறியவா?" என்று கேட்டார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
بَلْ
மாறாக
أَلْقُوا۟ۖ
நீங்கள் எறியுங்கள்
فَإِذَا
ஆக, அப்போது
حِبَالُهُمْ
அவர்களுடைய கயிர்களும்
وَعِصِيُّهُمْ
அவர்களுடைய தடிகளும்
يُخَيَّلُ
தோற்றமளிக்கப்பட்டது
إِلَيْهِ
அவருக்கு
مِن سِحْرِهِمْ
அவர்களுடைய சூனியத்தால்
أَنَّهَا
அவை
تَسْعَىٰ
ஓடுவதாக

Qaala bal alqoo fa izaa hibaaluhum wa 'isiyyuhum yuhaiyalu ilaihi min sihrihim annahaa tas'aa

அதற்கவர் "நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்" என்று கூறினார். (அவர்கள் எறியவே எறிந்த) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவது போல் இவருக்குத் தோன்றின.

Tafseer

فَأَوْجَسَ
அவர் உணர்ந்தார்
فِى نَفْسِهِۦ
தனது உள்ளத்தில்
خِيفَةً
பயத்தை
مُّوسَىٰ
மூஸா

Fa awjasa fee nafsihee kheefatam Moosa

ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.

Tafseer

قُلْنَا
நாம் கூறினோம்
لَا تَخَفْ
பயப்படாதீர்
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ٱلْأَعْلَىٰ
மிகைத்தவர்

Qulnaa laa takhaf innaka antal a'laa

(அச்சமயம் நாம் அவரை நோக்கி) "நீங்கள் பயப்படாதீர்கள்! நிச்சயமாக நீங்கள்தான் உயர்ந்தவர்" என்று கூறினோம்.

Tafseer

وَأَلْقِ
இன்னும் எறிவீராக
مَا فِى
உமது கையில் உள்ளதை
تَلْقَفْ
விழுங்கி விடும்
مَا صَنَعُوٓا۟ۖ
அவர்கள் செய்ததை
إِنَّمَا صَنَعُوا۟
அவர்கள் செய்ததெல்லாம்
كَيْدُ
சூழ்ச்சிதான்
سَٰحِرٍۖ
ஒரு சூனியக்காரனின்
وَلَا يُفْلِحُ
வெற்றிபெற மாட்டான்
ٱلسَّاحِرُ
சூனியக்காரன்
حَيْثُ أَتَىٰ
எங்கிருந்து வந்தாலும்

Wa alqi maa fee yamee nika talqaf maa sana'oo; innamaa sana'oo kaidu saahir; wa laa yuflihus saahiru haisu ataa

அன்றி, உங்களது வலது கையில் இருப்பதை நீங்கள் எறியுங்கள்! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே(யன்றி உண்மையல்ல). சூனியக்காரர்கள் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டார்கள்" (என்றும் கூறினோம்).

Tafseer

فَأُلْقِىَ
ஆக, விழுந்தனர்
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
سُجَّدًا
சிரம்பணிந்தவர்களாக
قَالُوٓا۟
கூறினார்கள்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِرَبِّ
இறைவனைக்கொண்டு
هَٰرُونَ
ஹாரூன்
وَمُوسَىٰ
இன்னும் மூஸாவுடைய

Fa ulqiyas saharatu sujjadan qaalooo aamannaa bi Rabbi Haaroona wa Moosa

(மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதனைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு "நாங்களும் மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்கள்.

Tafseer