Skip to main content

وَٱصْطَنَعْتُكَ
இன்னும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
لِنَفْسِى
எனக்காகவே

Wastana' tuka linafsee

எனக்காக நான் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கின்றேன்.

Tafseer

ٱذْهَبْ
செல்வீர்களாக!
أَنتَ
நீரும்
وَأَخُوكَ
உனது சகோதரரும்
بِـَٔايَٰتِى
என் அத்தாட்சிகளைக் கொண்டு
وَلَا تَنِيَا
இன்னும் நீங்கள் இருவரும் சோர்வடையாதீர்கள்
فِى ذِكْرِى
என்னை நினைவு கூர்வதில்

Izhab anta wa akhooka bi Aayaatee wa laa taniyaa fee zikree

ஆகவே, நீங்கள் உங்களுடைய சகோதரருடன் என்னுடைய அத்தாட்சிகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நீங்கள் இருவரும் என்னை நினைவு கூர்வதில் சோர்வடைந்து விடாதீர்கள்.

Tafseer

ٱذْهَبَآ
நீங்கள் இருவரும் செல்வீர்களாக
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
طَغَىٰ
வரம்பு மீறிவிட்டான்

Izhabaaa ilaa Fir'awna innahoo taghaa

நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான்.

Tafseer

فَقُولَا
நீங்கள் இருவரும் கூறுவீர்களாக
لَهُۥ
அவனுக்கு
قَوْلًا
சொல்லை
لَّيِّنًا
மென்மையான
لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ
அவன் நல்லறிவு பெறுகிறானா
أَوْ
அல்லது
يَخْشَىٰ
பயப்படுகிறானா

Faqoolaa lahoo qawlal laiyinal la allahoo yatazakkkaru 'aw yakhshaa

நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்" என்றும் கூறினோம்.

Tafseer

قَالَا
இருவரும் கூறினர்
رَبَّنَآ
எங்கள் இறைவன்
إِنَّنَا
நிச்சயமாக நங்கள்
نَخَافُ
பயப்படுகிறோம்
أَن يَفْرُطَ
அவசரப்படுவதை
عَلَيْنَآ
எங்கள் மீது
أَوْ
அல்லது
أَن يَطْغَىٰ
வரம்பு மீறுவதை

Qaalaa Rabbanaaa innanaa nakhaafu ai yafruta 'alainaaa aw ai yatghaa

அதற்கு அவ்விருவரும் "எங்கள் இறைவனே! அவன் எங்கள் மீது (வரம்பு) மீறி கொடுமை செய்வானோ அல்லது விஷமம் செய்வானோ என்று நாங்கள் பயப்படுகிறோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினான்
لَا تَخَافَآۖ
இருவரும் பயப்படாதீர்கள்
إِنَّنِى
நிச்சயமாக நான்
مَعَكُمَآ
உங்கள் இருவருடன்
أَسْمَعُ
(நான்) கேட்பவனாக
وَأَرَىٰ
இன்னும் பார்ப்பவனாக (இருக்கிறேன்)

Qaala laa takhaafaaa innanee ma'akumaa asma'u wa araa

(அதற்கு இறைவன்) கூறினான்: "நீங்கள் பயப்படவேண்டாம். நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருப்பேன்."

Tafseer

فَأْتِيَاهُ
ஆகவே இருவரும் வாருங்கள்
فَقُولَآ
இன்னும் கூறுங்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
رَسُولَا
தூதர்கள்
رَبِّكَ
உனது இறைவனின்
فَأَرْسِلْ
ஆகவே அனுப்பி விடு
مَعَنَا
எங்களுடன்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
وَلَا تُعَذِّبْهُمْۖ
இன்னும் அவர்களை வேதனை செய்யாதே
قَدْ جِئْنَٰكَ
திட்டமாக உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியை
مِّن رَّبِّكَۖ
உமது இறைவனிடமிருந்து
وَٱلسَّلَٰمُ
ஈடேற்றம் உண்டாகுக
عَلَىٰ مَنِ
பின்பற்றியவருக்கு
ٱلْهُدَىٰٓ
நேர்வழியை

Faatiyaahu faqoolaaa innaa Rasoolaa Rabbika fa arsil ma'anaa Banee Israaa'eela wa laa tu'azzibhum qad ji'naaka bi Aayatim mir Rabbika wassa laamu 'alaa manit taba'al hudaa

நீங்கள் இருவரும் அவனிடத்தில் சென்று சொல்லுங்கள்: "நாங்கள் உன் இறைவனின் தூதர்கள். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களை வேதனை செய்யாதே! மெய்யாகவே நாங்கள் உன் இறைவனுடைய அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். நேரான வழியைப் பின்பற்றிய லிவர்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாங்கள்
قَدْ
திட்டமாக
أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது
إِلَيْنَآ
எங்களுக்கு
أَنَّ
நிச்சயமாக
ٱلْعَذَابَ
தண்டனை
عَلَىٰ
மீது
مَن كَذَّبَ
பொய்ப்பித்தவர்
وَتَوَلَّىٰ
புறக்கணித்து திரும்பினார்

Innaa qad oohiya ilainaaa annnal 'azaaba 'alaa man kaz zaba wa tawalla

(எங்களை) பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டது" (என்பதை தெரிவியுங்கள்).

Tafseer

قَالَ
அவன் கூறினான்
فَمَن
யார்
رَّبُّكُمَا
உங்கள் இருவரின் இறைவன்
يَٰمُوسَىٰ
மூஸாவே!

Qaala famar Rabbu kumaa yaa Moosa

(அதற்கு) அவன் "மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?" என்றான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبُّنَا
எங்கள் இறைவன்
ٱلَّذِىٓ أَعْطَىٰ
எவன்/கொடுத்தான்
كُلَّ
ஒவ்வொரு
شَىْءٍ
பொருளுக்கும்
خَلْقَهُۥ
அதற்குரியபடைப்பை
ثُمَّ
பிறகு
هَدَىٰ
வழிகாட்டினான்

Qaala Rabbunal lazeee a'taa kulla shai'in khalqahoo summa hadaa

அதற்கு மூஸா "எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவைகளை பயன்படுத்தும்) வழியையும் (அவைகளுக்கு) அறிவித்தானோ அவன்தான் எங்கள் இறைவன்" என்றார்.

Tafseer