Skip to main content

فَٱتَّقُوا۟
ஆக, அஞ்சிக் கொள்ளுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!

Fattaqul laaha wa atee'oon

அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.

Tafseer

وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
ٱلَّذِىٓ
உதவியவனை
أَمَدَّكُم
உங்களுக்கு
بِمَا تَعْلَمُونَ
நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு

Wattaqul lazeee amad dakum bimaa ta'lamoon

உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்.

Tafseer

أَمَدَّكُم
உதவினான் உங்களுக்கு
بِأَنْعَٰمٍ
கால்நடைகளைக் கொண்டு
وَبَنِينَ
இன்னும் ஆண் பிள்ளைகளை

Amaddakum bi an'aa minw wa baneen

சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான்.

Tafseer

وَجَنَّٰتٍ
இன்னும் தோட்டங்களை
وَعُيُونٍ
இன்னும் ஊற்றுகளை

Wa jannaatinw wa 'uyoon

தோட்டந்துரவுகளையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்)

Tafseer

إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
عَذَابَ
தண்டனையை
يَوْمٍ
நாளின்
عَظِيمٍ
பெரிய

Innee akhaafu 'alaikum 'azaaba Yawmin 'azeem

(அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
سَوَآءٌ
சமம்தான்
عَلَيْنَآ
எங்களுக்கு
أَوَعَظْتَ
நீர் உபதேசிப்பதும்
أَمْ
அல்லது
لَمْ تَكُن
இல்லாததும்
مِّنَ ٱلْوَٰعِظِينَ
உபதேசிப்பவர்களில்

Qaaloo sawaaa'un 'alainaaa awa 'azta am lam takum minal waa'izeen

அதற்கவர்கள் "(ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே!

Tafseer

إِنْ هَٰذَآ
இது இல்லை
إِلَّا
தவிர
خُلُقُ
வழக்கமே
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்

In haazaaa illaa khuluqul awwaleen

(பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமேயன்றி வேறில்லை.

Tafseer

وَمَا نَحْنُ
நாங்கள் இல்லை
بِمُعَذَّبِينَ
தண்டிக்கப்படுபவர்களாக

Wa maa nahnu bimu 'azzabeen

(நீங்கள் கூறுவதைப் போல) நாங்கள் யாதொரு வேதனைக்குள்ளாக மாட்டோம்" (என்று கூறினார்கள்)

Tafseer

فَكَذَّبُوهُ
ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்
فَأَهْلَكْنَٰهُمْۗ
ஆகவே, அவர்களை நாம் அழித்தோம்.
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
وَمَا كَانَ
இல்லை
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Fakazzaboohu fa ahlaknaahum; inna fee zaalika la aayah; wa maa kaana aksaruhum mu'mineen

மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Wa inna Rabbaka la huwal 'Azeezur Raheem

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவனும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

Tafseer