Skip to main content

فَخَرَجَ
ஆக, அவர் வெளியேறினார்
مِنْهَا
அதிலிருந்து
خَآئِفًا
பயந்தவராக
يَتَرَقَّبُۖ
எதிர்பார்த்தவராக
قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா!
نَجِّنِى
என்னைப் பாதுகாத்துக்கொள்!
مِنَ ٱلْقَوْمِ
மக்களிடமிருந்து
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார

Fakharaja minhaa khaaa 'ifany-yataraqqab; qaala Rabbi najjinee minal qawmiz zaalimeen

ஆகவே, அவர் (தன்னை மக்கள் என்ன செய்யப் போகின்றனரோ என்று) கவலைப்பட்டுப் பயந்தவராக அவ்வூரை விட்டு வெளியேறி, "என் இறைவனே! இவ்வக்கிரமக்கார மக்களிடமிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.

Tafseer

وَلَمَّا تَوَجَّهَ
மேலும், அவர் முன்னோக்கிச் சென்றபோது
تِلْقَآءَ
பக்கம்
مَدْيَنَ
மத்யன் நகரத்தின்
قَالَ
கூறினார்
عَسَىٰ رَبِّىٓ
என் இறைவன்
أَن يَهْدِيَنِى
எனக்கு வழி காட்டுவான்
سَوَآءَ ٱلسَّبِيلِ
நேரான பாதையை

Wa lammaa tawajjaha tilqaaa'a Madyana qaala 'asaa Rabbeee ai yahdiyanee Sawaaa'as Sabeel

அவர் "மத்யன்" பக்கம் செல்லக் கருதிய சமயத்தில் (அதன் வழியை அறியாததனால்) "என் இறைவன் அதற்குரிய நேரான வழியை எனக்கு அறிவிக்கக்கூடும்" (என்று தமக்குள்ளாகவே கூறிக்கொண்டு சென்றார்.)

Tafseer

وَلَمَّا وَرَدَ
அவர் வந்தபோது
مَآءَ
நீர்நிலைக்கு
مَدْيَنَ
மத்யனுடைய
وَجَدَ
கண்டார்
عَلَيْهِ
அதனருகில்
أُمَّةً
ஒரு கூட்டம்
مِّنَ ٱلنَّاسِ
மக்களில்
يَسْقُونَ
அவர்கள் நீர் புகட்டுகின்றனர்
وَوَجَدَ
கண்டார்
مِن دُونِهِمُ
அவர்கள் அன்றி
ٱمْرَأَتَيْنِ
இரண்டு பெண்களையும்
تَذُودَانِۖ
தடுத்துக் கொண்டிருந்தனர்
قَالَ
அவர் கேட்டார்
مَا خَطْبُكُمَاۖ
உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?
قَالَتَا
அவ்விருவரும்கூறினர்
لَا نَسْقِى
நாங்கள் நீர் புகட்ட மாட்டோம்
حَتَّىٰ
வரை
يُصْدِرَ
வெளியேற்றாத
ٱلرِّعَآءُۖ
மேய்ப்பவர்கள்
وَأَبُونَا
எங்கள் தந்தையோ
شَيْخٌ
வயதான
كَبِيرٌ
பெரியவர்

Wa lammaa warada maaa'a Madyana wajada 'alaihi ummatam minannaasi yasqoona wa wajada min doonihimum ra ataini tazoodaani qaala maa khatubkumaa qaalataa laa nasqee hataa yusdirar ri'aaa'u wa aboonaa shaikhun kabeer

(அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி) லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) "உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்?)" என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் "இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயதடைந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவைகளை ஓட்டி வந்திருக்கிறோம்)" என்றார்கள்.

Tafseer

فَسَقَىٰ
ஆகவே, அவர் நீர் புகட்டினார்
لَهُمَا
அவ்விருவருக்காக
ثُمَّ
பிறகு
تَوَلَّىٰٓ
திரும்பிச் சென்றார்
إِلَى
பக்கம்
ٱلظِّلِّ
நிழலின்
فَقَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா!
إِنِّى
நிச்சயமாக நான்
لِمَآ أَنزَلْتَ
நீ எதன் பக்கம் இறக்கினாய்
إِلَىَّ
எனக்கு
مِنْ خَيْرٍ
நன்மையின்
فَقِيرٌ
தேவை உள்ளவன்

Fasaqaa lahumaa summa tawallaaa ilaz zilli faqaala Rabbi innee limaaa anzalta ilaiya min khairin faqeer

(இதைச் செவியுற்ற மூஸா) அவ்விரு பெண்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டிவிட்டு(ச் சிறிது) விலகி ஒரு (மரத்தின்) நிழலில் அமர்ந்துகொண்டு "என் இறைவனே! எதை நீ எனக்குத் தந்தபோதிலும் நிச்சயமாக நான் அதனை விரும்பக்கூடியவனாகவே இருக்கிறேன்" என்று பிரார்த்தித்தார்.

Tafseer

فَجَآءَتْهُ
அவரிடம் வந்தாள்
إِحْدَىٰهُمَا
அவ்விருவரில் ஒருத்தி
تَمْشِى
நடந்தவளாக
عَلَى ٱسْتِحْيَآءٍ
வெட்கத்துடன்
قَالَتْ
அவள் கூறினாள்
إِنَّ
நிச்சயமாக
أَبِى
என் தந்தை
يَدْعُوكَ
உம்மை அழைக்கிறார்
لِيَجْزِيَكَ
உமக்கு தருவதற்காக
أَجْرَ
கூலியை
مَا سَقَيْتَ
நீநீர்புகட்டியதற்குரிய
لَنَاۚ
எங்களுக்காக
فَلَمَّا جَآءَهُۥ
போது/அவரிடம்/வந்தார்
وَقَصَّ
இன்னும் விவரித்தார்
عَلَيْهِ
அவரிடம்
ٱلْقَصَصَ
வரலாற்றை
قَالَ
அவர் கூறினார்
لَا تَخَفْۖ
பயப்படாதே!
نَجَوْتَ
நீ தப்பித்து விட்டாய்
مِنَ ٱلْقَوْمِ
மக்களிடமிருந்து
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்(கள்)

Fajaaa'at hu ihdaahumaa tamshee 'alas tihyaaa'in qaalat inna abee yad'ooka li yajziyaka ajra maa saqaita lanaa; falammaa jaaa'ahoo wa qassa 'alaihil qasasa qaala laa takhaf najawta minal qawmiz zaalimeen

அச்சமயம் (அவ்விரு பெண்களில்) ஒருத்தி மிக்க நாணத்துடன் இவர் முன் வந்து "நீங்கள் எங்க(ள் கால்நடைக)ளுக்குத் தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உங்களுக்குக் கொடுக்கும் பொருட்டு மெய்யாகவே என் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறி அழைத்துச் சென்றாள். மூஸா அவரிடம் சென்று தன் சரித்திரத்தைக் கூறவே அவர் (இனி) "நீங்கள் பயப்படவேண்டாம். அநியாயக்கார மக்களைவிட்டு நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்" என்று கூறினார்.

Tafseer

قَالَتْ
கூறினாள்
إِحْدَىٰهُمَا
அவ்விருவரில் ஒருத்தி
يَٰٓأَبَتِ
என் தந்தையே
ٱسْتَـْٔجِرْهُۖ
அவரை பணியில் அமர்த்துவீராக!
إِنَّ
நிச்சயமாக
خَيْرَ
சிறந்தவர்
مَنِ ٱسْتَـْٔجَرْتَ
எவர்கள்/பணியில் அமர்த்தினீர்
ٱلْقَوِىُّ
பலசாலி
ٱلْأَمِينُ
நம்பிக்கையளரான

Qaalat ihdaahumaa yaaa abatis taajirhu inna khaira manistaajartal qawiyyul ameen

(அத்தருணத்தில், அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் கூலிக்கு அமர்த்தியவர் களிலேயே மிகச் சிறந்தவர் நம்பிக்கைக்குரிய (இந்த) பலசாலியே ஆவார்" என்று கூறினாள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أُرِيدُ
நான் விரும்புகிறேன்
أَنْ أُنكِحَكَ
உனக்கு நான் மணமுடித்துத்தர
إِحْدَى
ஒருத்தியை
ٱبْنَتَىَّ
என் இரு பெண் பிள்ளைகளில்
هَٰتَيْنِ
இந்த இரண்டு
عَلَىٰٓ
மீது
أَن تَأْجُرَنِى
எனக்கு கூலியாக (-மஹராக)த் தரவேண்டும்
ثَمَٰنِىَ حِجَجٍۖ
எட்டு ஆண்டுகள்
فَإِنْ أَتْمَمْتَ
நீ பூர்த்திசெய்தால்
عَشْرًا
பத்து ஆண்டுகளை
فَمِنْ عِندِكَۖ
உன் புறத்திலிருந்து
وَمَآ أُرِيدُ
நான் விரும்பவில்லை
أَنْ أَشُقَّ
நான் சிரமம் ஏற்படுத்த
عَلَيْكَۚ
உம்மீது
سَتَجِدُنِىٓ
நீ காண்பாய்/என்னை
إِن شَآءَ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنَ ٱلصَّٰلِحِينَ
என்னை நல்லோரில்

Qaala innee ureedu an unkihaka ihdab nataiya haataini 'alaaa an taajuranee samaaniya hijaj; fa in atmamta 'ashran famin 'indika wa maaa ureedu an ashuqqa 'alaik; satajiduneee in shaaa'al laahu minas saaliheen

அதற்கு அவர் (மூஸாவிடம்) கூறினார்: "நீங்கள் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அது நீங்கள் எனக்கு செய்யும் நன்றிதான். நான் உங்களுக்கு (அதிகமான) சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால், நீங்கள் என்னை உங்களுக்கு உபகாரியாகவே காண்பீர்கள்" (என்றார்).

Tafseer

قَالَ
அவர் கூறினார்
ذَٰلِكَ
இது
بَيْنِى
எனக்கு மத்தியிலும்
وَبَيْنَكَۖ
உமக்கு மத்தியிலும்
أَيَّمَا
எதை
ٱلْأَجَلَيْنِ
இரண்டு தவணையில்
قَضَيْتُ
நான் நிறைவேற்றினாலும்
فَلَا عُدْوَٰنَ
வரம்பு மீறுதல் கூடாது
عَلَىَّۖ
என் மீது
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ مَا
நாம் கூறுவதற்கு
وَكِيلٌ
பொறுப்பாளன்

Qaala zaalika bainee wa bainaka aiyamal ajalaini qadaitu falaa 'udwaana 'alaiya wallaahu 'alaa ma naqoolu Wakeel

அதற்கு மூஸா "உங்களுக்கும் நமக்குமிடையே இதுவே (உடன் படிக்கையாகும்). இவ்விரு நிபந்தனைகளில் எதனையும் நான் நிறைவேற்றலாம். (இன்னதைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று) என்மீது கட்டாயமில்லை. நாம் பேசிக்கொண்ட இவ்வுடன் படிக்கைக்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்" என்று கூறினார்.

Tafseer

فَلَمَّا
போது
قَضَىٰ
முடித்தார்
مُوسَى
மூசா
ٱلْأَجَلَ
தவணையை
وَسَارَ
இன்னும் சென்றார்
بِأَهْلِهِۦٓ
தனது குடும்பத்தினரோடு
ءَانَسَ
பார்த்தார்
مِن جَانِبِ
அருகில்
ٱلطُّورِ
மலையின்
نَارًا
நெருப்பை
قَالَ
கூறினார்
لِأَهْلِهِ
தனது குடும்பத்தினரிடம்
ٱمْكُثُوٓا۟
நீங்கள் தாமதியுங்கள்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
ءَانَسْتُ
நான் பார்த்தேன்
نَارًا
ஒரு நெருப்பை
لَّعَلِّىٓ ءَاتِيكُم
உங்களிடம் (கொண்டு) வருகிறேன்
مِّنْهَا
அதிலிருந்து
بِخَبَرٍ
ஒரு செய்தியை
أَوْ
அல்லது
جَذْوَةٍ
கங்கை
مِّنَ ٱلنَّارِ
நெருப்பின்
لَعَلَّكُمْ تَصْطَلُونَ
நீங்கள் குளிர்காய்வதற்காக

Falammmaa qadaa Moosal ajala wa saara bi ahliheee aanasa min jaanibit Toori naaran qaala li ahlihim kusooo inneee aanastu naaral la 'alleee aateekum minhaa bikhabarin aw jazwatim minan naari la 'allakum tastaloon

மூஸா தன்னுடைய தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்வியை திருமணம் செய்துகொண்டு) தன்னுடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்றபொழுது (ஓர் இரவு வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் ("ஸீனாய்" என்னும்) மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டு, தன் குடும்பத்தினரை நோக்கி "நீங்கள் (சிறிது) தாமதித்து இருங்கள். நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். நான் (அங்குச் சென்று நாம் செல்லவேண்டிய) பாதையைப் பற்றி யாதொரு தகவலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடும். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கேனும் ஒரு எரி கொள்ளியைக் கொண்டு வருகிறேன்" என்று கூறினார்.

Tafseer

فَلَمَّآ أَتَىٰهَا
அவர் அதனிடம் வந்தபோது
نُودِىَ
சப்தமிட்டு அழைக்கப்பட்டார்
مِن شَٰطِئِ
பக்கத்திலிருந்து
ٱلْوَادِ
பள்ளத்தாக்கின்
ٱلْأَيْمَنِ
வலது
فِى ٱلْبُقْعَةِ
இடத்தில்
ٱلْمُبَٰرَكَةِ
புனிதமான
مِنَ ٱلشَّجَرَةِ
மரத்திலிருந்து
أَن يَٰمُوسَىٰٓ
மூசாவே!
إِنِّىٓ أَنَا
நிச்சயமாக நான்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
رَبُّ
இறைவனாகிய
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Falammaaa ataahaa noodiya min shaati'il waadil aimani fil buq'atil muubaarakati minash shajarati ai yaa Moosaaa inneee Anal laahu Rabbul 'aalameen

அவர் அதனிடம் வந்தபொழுது, மிக்க பாக்கியம் பெற்ற அந்த மைதானத்தின் ஓடையின் வலது பக்கத்திலுள்ள ஒரு மரத்தில் இருந்து "மூஸாவே! நிச்சயமாக உலகத்தாரை படைத்து வளர்த்து காக்கும் அல்லாஹ் நான்தான்" என்ற சப்தத்தைக் கேட்டார்.

Tafseer