Skip to main content

وَقَالَتْ
அவள் கூறினாள்
لِأُخْتِهِۦ
அவருடைய சகோதரிக்கு
قُصِّيهِۖ
நீ அவரைப் பின்தொடர்ந்து செல்
فَبَصُرَتْ
ஆக, அவள் பார்த்துவிட்டாள்
بِهِۦ
அவரை
عَن جُنُبٍ
தூரத்திலிருந்து
وَهُمْ
எனினும், அவர்கள்
لَا يَشْعُرُونَ
உணரவில்லை

Wa qaalat li ukhtihee qusseehi fabasurat bihee 'an junubinw wahum laa yash'uroon

(அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி "(ஆற்றில் மிதந்து செல்லும்) அதனைப் பின்தொடர்ந்து நீயும் செல்" என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதனை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள்.

Tafseer

وَحَرَّمْنَا
நாம் தடுத்துவிட்டோம்
عَلَيْهِ
அவர் மீது
ٱلْمَرَاضِعَ
பால்கொடுப்பவர்களை
مِن قَبْلُ
முன்னர்
فَقَالَتْ
கூறினாள்
هَلْ أَدُلُّكُمْ
நான் உங்களுக்கு அறிவிக்கலாமா?
عَلَىٰٓ أَهْلِ
ஒரு வீட்டாரை
يَكْفُلُونَهُۥ
அவர்கள் அவரை பொறுப்பேற்பார்கள்
لَكُمْ
உங்களுக்காக
وَهُمْ
அவர்கள்
لَهُۥ
அவருக்கு
نَٰصِحُونَ
நன்மையை நாடுபவர்கள்

Wa harramnaa 'alaihil maraadi'a min qablu faqaalat hal adullukum 'alaaa ahli baitiny yakfuloonahoo lakum wa hum lahoo naasihoon

(ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை எடுத்துக் கொண்டவர்கள் அதற்குப் பாலூட்ட பல செவிலித் தாய்களை அழைத்து வந்தனர். எனினும்,) இதற்கு முன்னதாகவே அக்குழந்தை (எவளுடைய) பாலையும் அருந்தாது தடுத்துவிட்டோம். (ஆகவே, இதைப் பற்றி அவர்கள் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மூஸாவின் சகோதரி அவர்கள் முன் வந்து) "உங்களுக்காக இக்குழந்தைக்கு செவிலித்தாயாக இருந்து அதன் நன்மையைக் கவனிக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வீட்டுடையாரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறினாள்.

Tafseer

فَرَدَدْنَٰهُ
அவரை நாம் திரும்பக் கொண்டுவந்தோம்
إِلَىٰٓ أُمِّهِۦ
அவருடைய தாயாரிடம்
كَىْ تَقَرَّ
குளிர்வதற்காகவும்
عَيْنُهَا
அவளது கண்
وَلَا تَحْزَنَ
இன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும்
وَلِتَعْلَمَ
அவள் அறிவதற்காகவும்
أَنَّ وَعْدَ
நிச்சயமாக/வாக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
حَقٌّ
உண்மை
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Faradadnaahu ilaa ummihee kai taqarra 'ainuhaa wa laa tahzana wa lita'lama anna wa'dal laahi haqqunw wa laakinna aksarahum laa ya'lamoon

(அவர்கள் அனுமதிக்கவே, அவள் மூஸாவுடைய தாயை அழைத்தும் வந்து விட்டாள்.) இவ்வாறு நாம் அவரை அவருடைய தாயிடமே சேர்த்துத் தாயின் கண் குளிர்ந்திருக்கவும் அவள் கவலைப்படாதிருக்கவும் செய்து, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்று நிச்சயமாக அவள் அறிந்து கொள்ளும் படியும் செய்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறியமாட்டார்கள்.

Tafseer

وَلَمَّا
போது
بَلَغَ
அடைந்தார்
أَشُدَّهُۥ
அவர் தனது வலிமையை
وَٱسْتَوَىٰٓ
அவர் முழுமை பெற்றார்
ءَاتَيْنَٰهُ
நாம் அவருக்கு தந்தோம்
حُكْمًا
ஞானத்தையும்
وَعِلْمًاۚ
அறிவையும்
وَكَذَٰلِكَ
இவ்வாறே
نَجْزِى
நாம்கூலிதருகிறோம்
ٱلْمُحْسِنِينَ
நன்மை செய்பவர்களுக்கு

Wa lammaa balagha ashuddahoo wastawaaa aatai naahu hukmanw wa 'ilmaa; wa kazaalika najzil muhsineen

அவர் வாலிபத்தையடைந்து அவருடைய அறிவு பூரணப் பக்குவம் அடையவே, அவருக்கு ஞானக் கல்வியையும், வேதத்தையும் நாம் அளித்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.

Tafseer

وَدَخَلَ
இன்னும் நுழைந்தார்
ٱلْمَدِينَةَ
நகரத்தில்
عَلَىٰ حِينِ
நேரத்தில்
غَفْلَةٍ
கவனமற்று இருந்த
مِّنْ أَهْلِهَا
அதன் வாசிகள்
فَوَجَدَ
கண்டார்
فِيهَا
அதில்
رَجُلَيْنِ
இருவரை
يَقْتَتِلَانِ
அவ்விருவரும் சண்டை செய்தனர்
هَٰذَا
இவர்
مِن شِيعَتِهِۦ
அவருடைய பிரிவை சேர்ந்தவர்
وَهَٰذَا
இன்னும் இவர்
مِنْ عَدُوِّهِۦۖ
அவருடைய எதிரிகளில் உள்ளவர்
فَٱسْتَغَٰثَهُ
அவரிடம் உதவி கேட்டான்
ٱلَّذِى مِن
இவருடைய பிரிவைச் சேர்ந்தவன்
عَلَى ٱلَّذِى
தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக
فَوَكَزَهُۥ مُوسَىٰ
மூஸா அவனை குத்து விட்டார்
فَقَضَىٰ
கதையை முடித்து விட்டார்
عَلَيْهِۖ
அவனுடைய
قَالَ هَٰذَا
கூறினார்/இது
مِنْ عَمَلِ
செயலில் உள்ளது
ٱلشَّيْطَٰنِۖ
ஷைத்தானின்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَدُوٌّ
எதிரி ஆவான்
مُّضِلٌّ
வழி கெடுக்கின்றவன்
مُّبِينٌ
தெளிவான

Wa dakhalal madeenata 'alaa heene ghaflatim min ahlihaa fawajada feeha raju laini yaqtatilaani haazaa min shee'atihee wa haaza min 'aduwwihee fastaghaasahul lazee min shee'atihee 'alal lazee min 'aduwwihee fawakazahoo Moosaa faqadaa 'alaihi qaala haaza min 'amalish Shaitaani innahoo 'aduwwum mmudillum mubeen

(மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) "இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி" எனக் கூறினார்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா!
إِنِّى
நிச்சயமாக நான்
ظَلَمْتُ
அநீதி இழைத்தேன்
نَفْسِى
எனக்கு
فَٱغْفِرْ لِى
ஆகவே, என்னை மன்னித்துவிடு
فَغَفَرَ
ஆகவே அவன் மன்னித்தான்
لَهُۥٓۚ
அவரை
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்

Qaala Rabbi innee zalamtu nafsee faghfir lee faghafaralah; innahoo Huwal Ghafoorur Raheem

அன்றி அவர் "என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என்னுடைய குற்றத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்துவிட்டான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா!
بِمَآ أَنْعَمْتَ
சத்தியமாக/அருள் புரிந்ததின் மீது
عَلَىَّ
எனக்கு
فَلَنْ أَكُونَ
ஆகவே நான் ஆகவே மாட்டேன்
ظَهِيرًا
உதவுபவனாக
لِّلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுக்கு

Qaala Rabbi bimaaa an'amta 'alaiya falan akoona zaheeral lilmujrimeen

(பின்னும் அவர் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) ஒரு காலத்திலும் நான் குற்றவாளிகளுக்கு உதவி செய்யமாட்டேன்" என்று கூறினார்.

Tafseer

فَأَصْبَحَ
காலையில் அவர் இருந்தார்
فِى ٱلْمَدِينَةِ
நகரத்தில்
خَآئِفًا
பயந்தவராக
يَتَرَقَّبُ
எதிர்பார்த்தவராக
فَإِذَا ٱلَّذِى
அப்போது/ எவன்/உதவிதேடினான்/அவரிடத்தில்
بِٱلْأَمْسِ
நேற்று
يَسْتَصْرِخُهُۥۚ
அவரை உதவிக்கு கத்தி அழைத்தான்
قَالَ
கூறினார்
لَهُۥ
அவனுக்கு
مُوسَىٰٓ
மூசா
إِنَّكَ
நிச்சயமாக நீ
لَغَوِىٌّ
ஒரு மூடன் ஆவாய்
مُّبِينٌ
தெளிவான

Fa asbaha fil madeenati khaaa'ifany yataraqqabu fa izal lazis tansarahoo bil amsi yastasrikhuh; qaala lahoo moosaaa innaka laghawiyyum mubeen

(அன்றிரவு அவருக்கு நிம்மதியாகவே கழிந்தது. எனினும்) காலையில் எழுந்து அந்நகரத்தில் (தன்னைப் பற்றி என்ன நடந்திருக்கின்றதோ என்று) பயந்தவராகக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன் (பின்னும் தனக்கு உதவி செய்யுமாறு) கூச்சலிட்டு இவரை அழைத்தான். அதற்கு மூஸா அவனை நோக்கி "நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்" என்று நிந்தித்து,

Tafseer

فَلَمَّآ أَنْ
ஆக, அவர் நாடியபோது
أَن يَبْطِشَ
தண்டிக்க
بِٱلَّذِى
எவனை
هُوَ
அவன்
عَدُوٌّ
எதிரியாக
لَّهُمَا
அவர்கள் இருவருக்கும்
قَالَ
அவன் கூறினான்
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
أَتُرِيدُ
நீ நாடுகிறாயா?
أَن تَقْتُلَنِى
என்னை கொல்ல
كَمَا قَتَلْتَ
நீ கொன்றது போன்று
نَفْسًۢا
ஓர் உயிரை
بِٱلْأَمْسِۖ
நேற்று
إِن تُرِيدُ
நீ நாடவில்லை
إِلَّآ
தவிர
أَن تَكُونَ
நீ ஆகுவதை
جَبَّارًا
அநியாயக்காரனாக
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَمَا تُرِيدُ
நீ நாடவில்லை
أَن تَكُونَ
நீ ஆகுவதை
مِنَ ٱلْمُصْلِحِينَ
சீர்திருத்தவாதிகளில்

Falammaaa an araada ai yabtisha billazee huwa 'aduwwul lahumaa qaala yaa Moosaaa atureedu an taqtulanee kamaa qatalta nafsam bil amsi in tureedu illaaa an takoona jabbaaram fil ardi wa maa tureedu an takoona minal musliheen

பின்னும் (அவனுக்கு உதவி செய்யவே விரும்பி) அவனுக்கும் தனக்கும் விரோதமாய் இருப்பவனைப் பிடிக்க விரும்பினார். (எனினும், இவருடைய இனத்தான் இவர் தன்னையே பிடிக்க வருவதாய்த் தவறாக எண்ணிப் பயந்து) "மூஸாவே! நேற்றைய தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல் என்னையும் நீங்கள் கொலை செய்யக் கருதுகிறீர்களா? இவ்வூரில் (நீங்கள் கொலை பாதகம் செய்யும்) வம்பனாக இருக்கக் கருதுகிறீர்களே அன்றி, சீர்திருத்தும் நல்ல மனிதராக இருக்க நீங்கள் நாடவில்லை" என்று கூச்சலிட்டான்.

Tafseer

وَجَآءَ
இன்னும் வந்தார்
رَجُلٌ
ஓர் ஆடவர்
مِّنْ أَقْصَا
இறுதியிலிருந்து
ٱلْمَدِينَةِ
நகரத்தின்
يَسْعَىٰ
விரைந்தவராக
قَالَ
கூறினார்
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
إِنَّ
நிச்சயமாக
ٱلْمَلَأَ
பிரமுகர்கள்
يَأْتَمِرُونَ
ஆலோசிக்கின்றனர்
بِكَ
உமக்காக
لِيَقْتُلُوكَ
அவர்கள் உம்மைக் கொல்வதற்கு
فَٱخْرُجْ
ஆகவே, நீர் வெளியேறிவிடும்!
إِنِّى
நிச்சயமாக நான்
لَكَ
உமக்கு
مِنَ ٱلنَّٰصِحِينَ
நன்மையை நாடுபவர்களில் ஒருவன்

Wa jaaa'a rajulum min aqsal madeenati yas'aa qaala yaa Moosaaa innal mala a yaa tamiroona bika liyaqtulooka fakhruj innee laka minan naasiheen

(இக்கூச்சல் மக்களிடையே பரவி, நேற்று இறந்தவனைக் கொலை செய்தவர் மூஸாதான் என்று மக்களுக்குத் தெரிந்து இவரைப் பழிவாங்கக் கருதினார்கள்.) அச்சமயம் பட்டிணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் (விரைவாக) ஓடிவந்து மூஸாவே! "மெய்யாகவே உங்களைக் கொலை செய்துவிட வேண்டுமென்று தலைவர்கள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால், நீங்கள் (இவ்வூரைவிட்டு) வெளியேறி விடுங்கள். மெய்யாகவே நான் உங்களுடைய நன்மைக்கே (இதனைக்) கூறுகிறேன்" என்று கூறினார்.

Tafseer