Alhamdu lillaahi faatiris samaawaati wal ardi jaa'ilil malaaa'ikati rusulan uleee ajnihatim masnaa wa sulaasa wa rubaa'; yazeedu fil khalqi maa yashaaa'; innal laaha 'alaa kulli shai'in Qadeer
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான். மலக்குகளைத் தன்னுடைய தூதைக் கொண்டு போகிறவர்களாகவும் ஆக்கினான். அவர்கள் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றனர். அவன் விரும்பியதைத் தன் படைப்பில் பின்னும் அதிகரிப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.
Maa yaftahil laahu linnaaasi mir rahmatin falaa mumsika lahaa wa maa yumsik falaa mursila lahoo mimb'dih; wa Huwal 'Azeezul Hakeem
அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதனைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக்கொண்டால் அதனை அனுப்பக் கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
Yaaa ayyuhan naasuzkuroo ni'matal laahi 'alaikum; hal min khaaliqin ghairul laahi yarzuqukum minas samaaa'i wal ard; laaa ilaaha illaa Huwa fa annaa tu'fakoon
மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கின்றானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் (இல்லவே) இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகின்றீர்கள்?
Wa iny yukazzibooka faqad kuzzibat Rusulum min qablik; wa ilal laahi turja'ul umoor
(நபியே!) அவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும்.
Yaaa ayyuhan naasu inna wa'dal laahi haqqun falaa taghurrannakumul hayaatud dunyaa; wa laa yaghurran nakum billaahil gharoor
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.
Innash shaitaana lakum 'aduwwun fattakhizoohu 'aduwwaa; innamaa yad'oo hizbahoo liyakoonoo min ashaabis sa'eer
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கின்றான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தனக்கு வழிப்பட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே.
Allazeena kafaroo lahum 'azaabun shadeed; wallazeena aamanoo wa 'amilus saalihaati lahum maghfiratunw wa ajrun kabeer
எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரிய கூலியும் உண்டு.
Afaman zuyyina lahoo sooo'u 'amalihee fara aahu hasanaa; fa innal laaha yudillu mai yashaaa'u wa yahdee mai yahaaa'u falaa tazhab nafsuka 'alaihim hasaraat; innal laaha 'aleemun bimaa yasna'oon
எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒருபோதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Wallaahul lazeee arsalar riyaaha fatuseeru shaaban fasuqnaahu ilaa baladim maiyitin fa ahyaynaa bihil arda ba'da mawtihaa; kazaalikan nushoor
அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகின்றது. பின்னர், அவைகளை இறந்து (பட்டுப்) போன பூமியளவில் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கின்றான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே.
Man kaana yureedul 'izzata falillaahil 'izzatu jamee'aa; ilaihi yas'adul kalimut taiyibu wal'amalus saalihu yarfa'uh; wallazeena yamkuroonas sayyiaati lahum 'azaabun shadeed; wa makru ulaaa'ika huwa yaboor
எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் அளவில் செல்கின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்து கின்றான். (நபியே!) எவர்கள் (உங்களுக்குத்) தீங்கிழைக்க சதி செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும்.
القرآن الكريم: | فاطر |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Fatir |
ஸூரா: | 35 |
வசனம்: | 45 |
Total Words: | 970 |
Total Characters: | 3130 |
Number of Rukūʿs: | 5 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 43 |
Starting from verse: | 3660 |