Skip to main content

وَٱلَّذِىٓ
எது
أَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
إِلَيْكَ
உமக்கு
مِنَ ٱلْكِتَٰبِ
அதாவது, இந்தவேதம்
هُوَ
அதுதான்
ٱلْحَقُّ
சத்தியமானது
مُصَدِّقًا
உண்மைப்படுத்துகிறது
لِّمَا بَيْنَ
தனக்கு முன்னுள்ளதை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بِعِبَادِهِۦ
தனது அடியார்களை
لَخَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Wallaeee awhainaaa ilaika minal Kitaabi huwal haqqu musaddiqal limaa baina yadayh; innal laaha bi'ibaadihee la khabeerum Baseer

(நபியே!) நாம் உங்களுக்கு வஹீ மூலம் கொடுத்திருக்கும் வேதம் முற்றிலும் உண்மையானது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தி வைப்பதாகவும் இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்கறிந்தவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ثُمَّ
பிறகு
أَوْرَثْنَا
நாம் கொடுத்தோம்
ٱلْكِتَٰبَ
இந்த வேதத்தை
ٱلَّذِينَ ٱصْطَفَيْنَا
நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு
مِنْ عِبَادِنَاۖ
நமது அடியார்களில்
فَمِنْهُمْ
அவர்களில்
ظَالِمٌ
தீமை செய்தவரும்
لِّنَفْسِهِۦ
தனக்குத் தானே
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
مُّقْتَصِدٌ
நடுநிலையானவரும்
وَمِنْهُمْ
இன்னும் அவர்களில்
سَابِقٌۢ
முந்துகின்றவரும்
بِٱلْخَيْرَٰتِ
நன்மைகளில்
بِإِذْنِ
அனுமதிப்படி
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
ذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلْفَضْلُ
சிறப்பாகும்
ٱلْكَبِيرُ
மாபெரும்

Summa awrasnal Kitaaballazeenas tafainaa min 'ibaadinaa faminhum zaalimul linafsihee wa minhum muqtasid, wa minhum saabiqum bilkhairaati bi iznil laah; zaalika huwal fadlul kabeer

பின்னர், நம்முடைய அடியார்களில் நாம் தேர்ந்தெடுத் தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும்.

Tafseer

جَنَّٰتُ
சொர்க்கங்கள்
عَدْنٍ
அத்ன்
يَدْخُلُونَهَا
அவர்கள் அவற்றில் நுழைவார்கள்
يُحَلَّوْنَ فِيهَا
அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்/அவற்றில்
مِنْ أَسَاوِرَ
கை காப்புகளிலிருந்து
مِن ذَهَبٍ
தங்கத்தினாலான
وَلُؤْلُؤًاۖ
முத்தும்
وَلِبَاسُهُمْ
அவர்களின் ஆடைகள்
فِيهَا
அவற்றில்
حَرِيرٌ
பட்டுத்துணி

jannaatu 'adniny yad khuloonahaa yuhallawna feeha min asaawira min zahabinw wa lu'lu'anw wa libaa suhum feehaa hareer

(அவர்கள்) நிலையான சுவனபதிக்குச் சென்று விடுவார்கள். முத்துப் பதிந்த பொற்காப்புக்கள் அவர்களுக்கு (விருதாக) அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளெல்லாம் மிருதுவான பட்டுக்களாக இருக்கும்.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلَّذِىٓ أَذْهَبَ
எவன்/போக்கினான்
عَنَّا
எங்களை விட்டு
ٱلْحَزَنَۖ
கவலையை
إِنَّ
நிச்சயமாக
رَبَّنَا
எங்கள் இறைவன்
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
شَكُورٌ
நன்றியுடையவன்

Wa qaalul hamdu lillaahil lazeee azhaba 'annal hazan; inna Rabbanaa la Ghafoorun Shakoor

அன்றி (அவர்கள்) "தங்களை விட்டும் எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரியன. நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவனும் நன்றி செலுத்துவதை அறிபவனுமாக இருக்கிறான்" என்று புகழ்ந்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள்.

Tafseer

ٱلَّذِىٓ
எவன்
أَحَلَّنَا
எங்களை தங்க வைத்தான்
دَارَ
இல்லத்தில்
ٱلْمُقَامَةِ
நிரந்தர
مِن فَضْلِهِۦ
தனது அருளினால்
لَا يَمَسُّنَا
எங்களுக்கு ஏற்படாது
فِيهَا
அதில்
نَصَبٌ
சோர்வு(ம்)
وَلَا يَمَسُّنَا
எங்களுக்கு ஏற்படாது
فِيهَا
அதில்
لُغُوبٌ
களைப்பும்

Allazeee ahallanaa daaral muqaamati min fadlihee laa yamassunaa feehaa nasabunw wa laa yamassunaa feehaa lughoob

"அவனே தன்னுடைய அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் யாதொரு கஷ்டமும் எங்களை அணுகுவதில்லை. யாதொரு சடைவும் எங்களுக்கு ஏற்படுவதில்லை" (என்றும் துதி செய்வார்கள்).

Tafseer

وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
لَهُمْ
அவர்களுக்கு
نَارُ
நெருப்புதான்
جَهَنَّمَ
நரக
لَا يُقْضَىٰ
தீர்ப்பளிக்கப்படாது
عَلَيْهِمْ
அவர்களுக்கு
فَيَمُوتُوا۟
ஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள்
وَلَا يُخَفَّفُ
இன்னும் இலேசாக்கப்படாது
عَنْهُم
அவர்களை விட்டு
مِّنْ عَذَابِهَاۚ
அதன் தண்டனை
كَذَٰلِكَ
இப்படித்தான்
نَجْزِى
கூலிகொடுப்போம்
كُلَّ كَفُورٍ
எல்லா நிராகரிப்பாளர்களுக்கு(ம்)

Wallazeena kafaroo lahum naaru Jahannama laa yuqdaa 'alaihim fa yamootoo wa laa yukhaffafu 'anhum min 'azaabihaa; kazaalika najzee kulla kafoor

எவர்கள் (நம்முடைய வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) அன்றி, அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம்.

Tafseer

وَهُمْ
அவர்கள்
يَصْطَرِخُونَ
கதறுவார்கள்
فِيهَا
அதில்
رَبَّنَآ
எங்கள் இறைவா
أَخْرِجْنَا
எங்களை வெளியேற்று
نَعْمَلْ صَٰلِحًا
நல்ல அமல்களை செய்வோம்
غَيْرَ
வேறு
ٱلَّذِى
எது
كُنَّا نَعْمَلُۚ
நாங்கள் செய்து கொண்டிருந்தோம்
أَوَلَمْ نُعَمِّرْكُم
உங்களுக்கு நாம் வாழ்க்கையளிக்கவில்லையா?
مَّا يَتَذَكَّرُ
எது (-காலம்)/அறிவுரை பெறுகின்றார்
فِيهِ
அதில்
مَن تَذَكَّرَ
அறிவுரை பெறுபவர்
وَجَآءَكُمُ
இன்னும் உங்களிடம் வந்தார்
ٱلنَّذِيرُۖ
அச்சமூட்டி எச்சரிப்பவர்
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
فَمَا لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு இல்லை
مِن نَّصِيرٍ
உதவியாளர் எவரும்

Wa hum yastarikhoona feehaa Rabbanaa akhrijnaa na'mal saalihan ghairal lazee kunnaa na'mal; awa lamnu 'ammirkum maa yatazak karu feehi man tazakkara wa jaaa'akumun nazeeru fazooqoo famaa lizzaalimeena min naseer

அதில் அவர்கள் பெரும் சப்தமிட்டு "எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றிவிடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்" என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) "நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரையில் நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள். ஆதலால், நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை" (என்று கூறுவான்).

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَٰلِمُ
நன்கறிந்தவன்
غَيْبِ
மறைவானவற்றை
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۚ
மற்றும் பூமி(யில் உள்ள)
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை

Innal laaha 'aalimu ghaibis samaawaati wal ard; innahoo 'aleemum bizaatis sudoor

வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நிச்சயமாக அவன் உள்ளங்களில் இருப்பவைகளையும் நன்கறிந்தவன்.

Tafseer

هُوَ ٱلَّذِى
அவன்தான்
جَعَلَكُمْ
உங்களை ஆக்கினான்
خَلَٰٓئِفَ
பிரதிநிதிகளாக
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
فَمَن كَفَرَ
எவர்/நிராகரிப்பாரோ
فَعَلَيْهِ
அவருக்குத்தான் தீங்காகும்
كُفْرُهُۥۖ
அவருடைய நிராகரிப்பு
وَلَا يَزِيدُ
அதிகப்படுத்தாது
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
كُفْرُهُمْ
நிராகரிப்பு அவர்களின்
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
إِلَّا
தவிர
مَقْتًاۖ
கோபத்தை
وَلَا يَزِيدُ
அதிகப்படுத்தாது
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
كُفْرُهُمْ
நிராகரிப்பு அவர்களின்
إِلَّا
தவிர
خَسَارًا
நஷ்டத்தை

Huwal lazee ja'alakum khalaaa'ifa fil ard; faman kafara fa'alaihi kufruhoo; wa laa yazeedul kaafireena kufruhum 'inda Rabbihim illaa maqtanw wa la yazeedul kaafireena kufruhum illaa khasaaraa

அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதே சாரும். இந்த நிராகரிப்ப வர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தை யன்றி (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை. இந்த நிராகரிப் பவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை.

Tafseer

قُلْ
கூறுவீராக!
أَرَءَيْتُمْ
நீங்கள் அறிவியுங்கள்
شُرَكَآءَكُمُ
இணை தெய்வங்களை உங்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
تَدْعُونَ
நீங்கள் அழைக்கின்றீர்கள்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
أَرُونِى
எனக்கு காண்பியுங்கள்
مَاذَا
எதை
خَلَقُوا۟
படைத்தார்கள்
مِنَ ٱلْأَرْضِ
பூமியில்
أَمْ
அல்லது
لَهُمْ
அவர்களுக்கு
شِرْكٌ
பங்கு
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
أَمْ
அல்லது
ءَاتَيْنَٰهُمْ
அவர்களுக்கு நாம் கொடுத்தோம்
كِتَٰبًا
ஒரு வேதத்தை
فَهُمْ
ஆகவே, அவர்கள்
عَلَىٰ بَيِّنَتٍ
தெளிவான சான்றின் மீது
مِّنْهُۚ
அது விஷயத்தில்
بَلْ
மாறாக
إِن يَعِدُ
வாக்களிப்பதில்லை
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
بَعْضُهُم
அவர்களில் சிலர்
بَعْضًا
சிலருக்கு
إِلَّا غُرُورًا
ஏமாற்றத்தைத் தவிர

Qul ara'aytum shurakaaa'a kumul lazeena tad'oona min doonil laah; aroonee maazaa khalaqoo minal ardi am lahum shirkun fis samaawaati am aatainaahum Kitaaban fahum 'alaa baiyinatim minh; bal iny ya'iiduz zaalimoona ba 'duhum ba'dan illaa ghurooraa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) அழைப்பவைகளைப் பற்றி நீங்கள் கவனித் தீர்களா? அவை பூமியில் எதனையும் படைத்திருக்கின்றனவா? அதனை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவைகளுக்குப் பங்குண்டா? அல்லது (அவைகளைத் தெய்வங்களெனக் கூறுவதற்குத்) தெளிவான ஆதாரமாக இருக்கக்கூடிய யாதொரு வேதத்தையும் நாம் அவைகளுக்குக் கொடுத்திருக்கின்றோமா? (இவை ஒன்றுமே) இல்லை. (இந்தத் தெய்வங்கள் பாதுகாத்துக் கொள்ளுமென்று) இந்த அநியாயக் காரர்கள் சிலர் சிலருக்குச் செய்யும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலே அன்றி வேறில்லை.

Tafseer