Wa uzlifatil jannatu lil muttaqeena ghaira ba'eed
(அந்நாளில்) இறை அச்சமுடையவர்களுக்கு சுவனபதி மிக்க சமீபமாகக் கொண்டு வரப்பட்டு
Haaza maa too'adoona likulli awwaabin hafeez
"இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது" என்றும், "எப்பொழுதும் இறைவனையே நோக்கி இருந்து (இறைவனுடைய கட்டளைகளைப்) பேணி நடந்துகொண்ட அனைவருக்கும் இது கிடைக்கும்" என்றும்,
Man khashiyar Rahmaana bilghaibi wa jaaa'a biqalbim muneeb
எவர்கள், மறைவிலும் ரஹ்மானுக்குப் பயந்து நடந்து (ரஹ்மானையே முற்றிலும்) நோக்கிய மனதுடன் வருகின்றார்களோ (அவர்களை நோக்கி,)
Udkhuloohaa bisalaamin zaalika yawmul khulood
"ஈடேற்றம் பெற்று நீங்கள் இதில் நுழைந்துவிடுங்கள். இது நிரந்தரமான நாளாகும்" என்றும் (கூறப்படும்).
Lahum maa yashaaa'oona feehaa wa ladainaa mazeed
அவர்கள் விரும்பியதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். அன்றி, நம்முடைய புறத்தாலும் (அவர்கள் கேட்காததையும்) பின்னும் அதிகமாகக் கொடுக்கப்படும்.
Wa kam ahlaknaa qablahum min qarnin hum ashaddu minhum batshan fanaqqaboo fil bilaad, hal mim mahees
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் இவர்களைவிட மிக பலசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் (தப்பித்துக்கொள்ள) பல தேசங்களில் சுற்றித் திரிந்தார்கள். (அவர்களுக்கு) தப்ப இடம் கிடைத்ததா? (மாறாக கிடைக்காமல் அழிந்து போயினர்.)
Inna fee zaalika lazikraa liman kaana lahoo qalbun aw alqas sam'a wa huwa shaheed
எவருக்கு (பரிசுத்தமான) உள்ளமிருந்து, ஓர்மைப்பாடான மனதுடன் செவிசாய்க்கின்றாரோ, அவருக்கு நிச்சயமாக இதில் நல்ல படிப்பினை இருக்கின்றது.
Wa laqad khalaqnas samaawaati wal arda wa maa bainahumaa fee sittati ayyaamin wa maa massanaa mil lughoob
நிச்சயமாக நாம்தான் வானங்களையும், பூமியையும் அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறே நாள்களில் படைத்தோம். அதனால் நமக்கு யாதொரு களைப்பும் (சோர்வும்) ஏற்பட்டு விடவில்லை.
Fasbir 'alaa maa yaqooloona wa sabbih bihamdi Rabbika qabla tuloo'ish shamsi wa qablal ghuroob
(நபியே!) அவர்கள் (உங்களைக் குறை) கூறுவதைப் பற்றி (கவலைப்படாதீர்கள்;) நீங்கள் பொறுமையாக அதனைச் சகித்துக் கொண்டிருந்து, சூரிய உதயத்திற்கும், அது மறைவதற்கும் முன்னர் உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டு இருப்பீராக!
Wa minal laili fasabbih hu wa adbaaras sujood
இரவில் ஒரு பாகத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அவனைத் துதி செய்வீராக!