Skip to main content

وَتَذَرُونَ
விட்டு விடுகிறீர்கள்
ٱلْءَاخِرَةَ
மறுமையை

Wa tazaroonal Aakhirah

(ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகின்றீர்கள்.

Tafseer

وُجُوهٌ
சில முகங்கள்
يَوْمَئِذٍ
அந்நாளில்
نَّاضِرَةٌ
செழிப்பாக இருக்கும்

Wujoohuny yawma 'izin naadirah

அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க மகிழ்ச்சி யுடையவையாக இருக்கும்.

Tafseer

إِلَىٰ رَبِّهَا
தமது இறைவனை
نَاظِرَةٌ
பார்த்துக் கொண்டிருக்கும்

Ilaa rabbihaa naazirah

(அவை) தங்கள் இறைவனை நோக்கியவண்ணமாக இருக்கும்.

Tafseer

وَوُجُوهٌ
இன்னும் சில முகங்கள்
يَوْمَئِذٍۭ
அந்நாளில்
بَاسِرَةٌ
கருத்து காய்ந்துபோய் இருக்கும்

Wa wujoohuny yawma 'izim baasirah

வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.

Tafseer

تَظُنُّ
அறிந்துகொள்ளும்
أَن يُفْعَلَ
நிகழப்போகிறதுஎன்று
بِهَا
அதற்கு
فَاقِرَةٌ
கடுமையான ஒரு பிரச்சனை

Tazunnu any yuf'ala bihaa faaqirah

(பாவச் சுமையின் காரணமாகத்) தங்களுடைய இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள்.

Tafseer

كَلَّآ
அவ்வாறல்ல!
إِذَا بَلَغَتِ
உயிர் அடைந்தால்
ٱلتَّرَاقِىَ
தொண்டைக் குழியை

Kallaaa izaa balaghatit taraaqee

(எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்,

Tafseer

وَقِيلَ
கேட்கப்பட்டால்
مَنْۜ رَاقٍ
யாரும்/ஒதிப்பார்ப்பவர்

Wa qeela man raaq

(அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கின்றான்?) என்று கேட்கின்றனர்.

Tafseer

وَظَنَّ
இன்னும் அறிந்து கொண்டால்
أَنَّهُ
நிச்சயமாக இது
ٱلْفِرَاقُ
பிரிவுதான்

Wa zanna annahul firaaq

எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்னுடைய) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கின்றான்.

Tafseer

وَٱلْتَفَّتِ
பின்னிக்கொண்டால்
ٱلسَّاقُ
கெண்டைக் கால்
بِٱلسَّاقِ
கெண்டைக் காலுடன்

Waltaffatis saaqu bissaaq

(அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக்காலோடு பின்னிக்கொள்ளும்.

Tafseer

إِلَىٰ رَبِّكَ
உமது இறைவனிடமே
يَوْمَئِذٍ
அந்நாளில்
ٱلْمَسَاقُ
ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம்

Ilaa rabbika yawma'izinil masaaq

அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உங்களது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகின்றான்.

Tafseer