Skip to main content

كَلَّا
அவ்வாறல்ல
لَا وَزَرَ
தப்பித்து ஓட அறவே முடியாது

Kallaa laa wazar

"முடியவே முடியாது. தப்ப இடமில்லை" (என்று கூறப்படும்).

Tafseer

إِلَىٰ رَبِّكَ
உமது இறைவன் பக்கம்தான்
يَوْمَئِذٍ
அந்நாளில்
ٱلْمُسْتَقَرُّ
இறுதியாக நிலையான தங்குமிடம்

Ilaa rabbika yawma 'izinil mustaqarr

(நபியே!) அந்நாளில் உங்களது இறைவனிடமே (அனைவரும்நிற்க வேண்டியதிருக்கிறது.

Tafseer

يُنَبَّؤُا۟
அறிவிக்கப்படுவான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
يَوْمَئِذٍۭ
அந்நாளில்
بِمَا قَدَّمَ
தான் முந்தி செய்ததையும்
وَأَخَّرَ
பிந்தி செய்ததையும்

Yunabba 'ul insaanu yawma 'izim bimaa qaddama wa akhkhar

மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும்.

Tafseer

بَلِ
மாறாக
ٱلْإِنسَٰنُ
மனிதன்
عَلَىٰ نَفْسِهِۦ
அவனுக்கே
بَصِيرَةٌ
சாட்சியாக இருப்பான்

Balil insaanu 'alaa nafsihee baseerah

தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்து கொள்வான்.

Tafseer

وَلَوْ أَلْقَىٰ
அவன் கூறினாலும்
مَعَاذِيرَهُۥ
தனது காரணங்களை

Wa law alqaa ma'aazeerah

ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறியபோதிலும் (அது அங்கீகரிக்கப்படாது).

Tafseer

لَا تُحَرِّكْ
அசைக்காதீர்/இதற்கு
لِسَانَكَ
உமது நாவை
لِتَعْجَلَ
நீர் அவசரமாக செய்வதற்காக
بِهِۦٓ
இதை

Laa tuharrik bihee lisaa naka lita'jala bih

(நபியே! ஜிப்ரீல் வஹீ மூலம் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறிவிடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீங்கள் அவசரப்பட்டு அதனை ஓத உங்களுடைய நாவை அசைக்காதீர்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
عَلَيْنَا
நம்மீது கடமையாகும்
جَمْعَهُۥ
அதை ஒன்று சேர்ப்பதும்
وَقُرْءَانَهُۥ
அதை ஓதவைப்பதும்

Inna 'alainaa jam'ahoo wa qur aanah

ஏனென்றால், அதனை ஒன்று சேர்த்து (நீங்கள்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.

Tafseer

فَإِذَا قَرَأْنَٰهُ
இதை நாம் ஓதினால்
فَٱتَّبِعْ
நீர் பின்தொடர்வீராக!
قُرْءَانَهُۥ
அது ஓதப்படுவதை

Fa izaa qaraanaahu fattabi' qur aanah

ஆகவே, (ஜிப்ரீல் மூலம்) அதனை நாம் (உங்களுக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதனை நீங்கள் பின்தொடர்ந்து ஓதுங்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
إِنَّ
நிச்சயமாக
عَلَيْنَا
நம்மீது கடமையாகும்
بَيَانَهُۥ
அதை விவரிப்பது

Summa inna 'alainaa bayaanah

பின்னர், அதனை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.

Tafseer

كَلَّا
அவ்வாறல்ல
بَلْ
மாறாக
تُحِبُّونَ
நீங்கள் நேசிக்கிறீர்கள்
ٱلْعَاجِلَةَ
உலக வாழ்க்கையை

Kallaa bal tuhibboonal 'aajilah

எனினும் (மனிதர்களே!) நீங்கள் (எதிலும்) அவசரப்படவே விரும்புகின்றீர்கள்.

Tafseer