Skip to main content

فَأَرَدْنَآ
ஆகவே, நாடினோம்
أَن
கொடுப்பதை/பகரமாக
يُبْدِلَهُمَا رَبُّهُمَا
அவ்விருவருக்கும்/அவ்விருவரின் இறைவன்
خَيْرًا مِّنْهُ
சிறந்த/அவனை விட
زَكَوٰةً
பரிசுத்தமான
وَأَقْرَبَ
இன்னும் அதிக நெருக்கமான
رُحْمًا
கருணையுடையவரை

Faradnaa any yubdila humaa Rabbuhumaa khairam minhu zakaatanw wa aqraba ruhmaa

அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனை விட மேலானவனையும், பரிசுத்தமானவனையும் (தாய் தந்தைமீது) அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம்.

Tafseer

وَأَمَّا
ஆக
ٱلْجِدَارُ
சுவரோ
فَكَانَ
இருந்தது
لِغُلَٰمَيْنِ
இரு குழந்தைகளுக்கு
يَتِيمَيْنِ
இரு அனாதைகள்
فِى ٱلْمَدِينَةِ
பட்டிணத்தில்
وَكَانَ
இன்னும் இருக்கிறது
تَحْتَهُۥ
அதற்குக் கீழ்
كَنزٌ
ஒரு புதையல்
لَّهُمَا
அவ்விருவருக்குரிய
وَكَانَ
இருந்தார்
أَبُوهُمَا
அவ்விருவரின் தந்தை
صَٰلِحًا
நல்லவராக
فَأَرَادَ
ஆகவே நாடினான்
رَبُّكَ
உம் இறைவன்
أَن يَبْلُغَآ
அவ்விருவரும் அடைந்து
أَشُدَّهُمَا
வாலிபத்தை அவ்விருவரின்
وَيَسْتَخْرِجَا
இன்னும் அவ்விருவரும் வெளியே எடுத்துக்கொள்வதற்கு
كَنزَهُمَا
தங்கள் (இருவரின்) புதையலை
رَحْمَةً
அருளினால்
مِّن رَّبِّكَۚ
உம் இறைவனின்
وَمَا فَعَلْتُهُۥ
நான் செய்யவில்லை/இவற்றை
عَنْ أَمْرِىۚ
என் இஷ்டப்படி
ذَٰلِكَ
இதுதான்
تَأْوِيلُ
விளக்கம்
مَا لَمْ
எவை/ நீர் இயலவில்லை
عَّلَيْهِ
அவற்றின் மீது
صَبْرًا
பொறு(த்திரு)ப்பதற்கு

Wa ammal jidaaru fakaana lighulaamaini yateemaini fil madeenati wa kaana tahtahoo kanzul lahumaa wa kaana aboohumaa saalihan fa araada Rabbuka any yablughaaa ashuddahumaa wa yastakhrijaa kanzahumaa rahmatam mir Rabbik; wa maa fa'altuhoo 'an amree; zaalika taaweelu maa lam tasti' 'alaihi sabra

அந்தச் சுவரோ அப்பட்டினத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உங்கள் இறைவன் அவ்விருவரும் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்களுடைய புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரையில் அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதனைச் செப்பனிட்டேன். இது) உங்கள் இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதனையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீங்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் கருத்து இதுதான்" என்று கூறினார்.

Tafseer

وَيَسْـَٔلُونَكَ
இன்னும் /கேட்கின்றனர்/உம்மிடம்
عَن ذِى
துல்கர்னைனைப்பற்றி
قُلْ
கூறுவீராக
سَأَتْلُوا۟
ஓதுவேன்
عَلَيْكُم
உங்களுக்கு
مِّنْهُ
அவரைப் பற்றி
ذِكْرًا
நல்லுபதேசத்தை

Wa yas'aloonaka 'an Zil Qarnaini qul sa atloo 'alaikum minhu zikraa

(நபியே!) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். "அவருடைய சரித்திரத்தில் சிறிது நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன்" என்று நீங்கள் கூறுங்கள்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
مَكَّنَّا
ஆதிக்கத்தைக் கொடுத்தோம்
لَهُۥ
அவருக்கு
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
مِن كُلِّ
ஒவ்வொருபொருளின்
سَبَبًا
அறிவை

Innaa makkannaa lahoo fil ardi wa aatainaahu min kulli shai'in sababaa

நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்து வளமிக்க வசதி வாய்ப்பையும் அளித்திருந்தோம். ஒவ்வொரு பொருளையும் (தமது இஷ்டப்படி) செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அளித்திருந்தோம்.

Tafseer

فَأَتْبَعَ
பின்தொடர்ந்தார்
سَبَبًا
ஒரு வழியை

Fa atba'a sababaa

அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا بَلَغَ
அவர் அடைந்தபோது
مَغْرِبَ
மறையும் இடத்தை
ٱلشَّمْسِ
சூரியன்
وَجَدَهَا
கண்டார்/அதை
تَغْرُبُ
மறைவதாக
فِى عَيْنٍ
கடலில்
حَمِئَةٍ
சேறு
وَوَجَدَ
கண்டார்
عِندَهَا
அதனிடத்தில்
قَوْمًاۗ
சில மக்களை
قُلْنَا
கூறினோம்
يَٰذَا ٱلْقَرْنَيْنِ
துல்கர்னைனே!
إِمَّآ أَن
ஒன்று வேதனை செய்வீர்
وَإِمَّآ أَن
அவர்கள் கடைப்பிடிப்பீர்
فِيهِمْ
அவர்களில்
حُسْنًا
ஓர் அழகியதை

Hattaaa izaa balagha maghribash shamsi wajadahaaa taghrubu fee 'aynin hami'a tinw wa wajada 'indahaa qawmaa; qulnaa yaa Zal Qarnaini immaaa an tu'az ziba wa immaaa an tattakhiza feehim husnaa

சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்தபொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார். அவ்விடத்தில் ஒருவகை மக்களையும் கண்டார். (நாம் அவரை நோக்கி) "துல்கர்னைனே! நீங்கள் (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்ய அல்லது அவர்களுக்கு நன்மை செய்ய (உங்களுக்கு முழு சுதந்தரம் அளித்திருக்கிறோம்)" என்று கூறினோம்.

Tafseer

قَالَ
கூறினார்
أَمَّا
ஆகவே
مَن ظَلَمَ
எவன்/அநியாயம் செய்தானோ
فَسَوْفَ نُعَذِّبُهُۥ
வேதனை செய்வோம்/அவனை
ثُمَّ
பிறகு
يُرَدُّ
திருப்பப்படுவான்
إِلَىٰ رَبِّهِۦ
தன் இறைவனிடம்
فَيُعَذِّبُهُۥ
வேதனை செய்வான்/அவனை
عَذَابًا نُّكْرًا
வேதனை/கொடியது

Qaala amaa man zalama fasawfa nu'azzibuhoo summa yuraddu ilaa Rabbihee fa yu 'azzibuhoo azaaban nukraa

ஆகவே அவர் (அவர்களை நோக்கி "உங்களில்) எவன் (என் கட்டளையை மீறி) அநியாயம் செய்கிறானோ அவனை நாம் (தண்டித்து) வேதனை செய்வோம். பின்னர், அவன் தன் இறைவனிடம் கொண்டு போகப்பட்டு அவனும் அவனை மிக்க கடினமாக வேதனை செய்வான்" என்றார்.

Tafseer

وَأَمَّا
ஆகவே
مَنْ
எவர்
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
وَعَمِلَ
இன்னும் செய்தனர்
صَٰلِحًا
நற்செயலை
فَلَهُۥ
அவருக்கு இருக்கிறது
جَزَآءً
கூலி
ٱلْحُسْنَىٰۖ
அழகிய
وَسَنَقُولُ
இன்னும் கூறுவோம்
لَهُۥ
அவருக்கு
مِنْ أَمْرِنَا
நம் காரியத்தில்
يُسْرًا
இலகுவானதை

Wa ammaa man aamana wa 'amila saalihan falahoo jazaaa'anil husnaa wa sanaqoolu lahoo min amrinaa yusraa

அன்றி, "எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நற்செயல்கள் செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம்முடைய வேலைகளில் சுலபமான வேலைகளையே (செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
أَتْبَعَ
பின்தொடர்ந்தார்
سَبَبًا
ஒரு வழி

Summa atba'a sababaa

பின்னர், அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்பற்றி நடந்தார்.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا بَلَغَ
அவர் அடைந்தபோது
مَطْلِعَ
உதிக்குமிடத்தை
ٱلشَّمْسِ
சூரியன்
وَجَدَهَا
கண்டார்/அதை
تَطْلُعُ
உதிப்பதாக
عَلَىٰ قَوْمٍ
மீது/ஒரு சமுதாயம்
لَّمْ نَجْعَل
நாம் ஆக்கவில்லை
لَّهُم
அவர்களுக்கு
مِّن دُونِهَا
அதற்கு முன்னாலிருந்து
سِتْرًا
ஒரு தடுப்பை

Hattaaa izaa balagha matli'ash shamsi wajdahaa tatlu'u alaa qawmil lam naj'al lahum min doonihaa sitraa

அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் யாதொரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக்கூடிய ஞானம் இல்லாத காட்டு மிராண்டிகளாக இருந்தனர்.)

Tafseer