Skip to main content

فَٱنطَلَقَا
ஆகவே, இருவரும் சென்றனர்
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا رَكِبَا
இருவரும் பயணித்தபோது
فِى ٱلسَّفِينَةِ
கப்பலில்
خَرَقَهَاۖ
ஓட்டையாக்கினார்/அதை
قَالَ
கூறினார்
أَخَرَقْتَهَا
அதை ஓட்டையாக்கினீரா?
لِتُغْرِقَ
நீர் மூழ்கடிக்க
أَهْلَهَا
இதில் உள்ளவர்களை
لَقَدْ
திட்டவட்டமாக
جِئْتَ
செய்தீர்
شَيْـًٔا
காரியத்தை
إِمْرًا
மிக கெட்டது

Fantalaqaa hattaaa izaa rakibaa fis safeenati kharaqahaa qaala akharaqtahaa litughriqa ahlahaa laqad ji'ta shai'an imraa

(இவ்வாறு முடிவு செய்துகொண்டு) அவ்விருவரும் சென்றவழியில் குறுக்கிட்ட ஒரு கடலைக் கடக்க கப்பலில் ஏறி, அவர் அதன் (ஒரு) பலகையைப் பெயர்த்து அதனை ஓட்டையாக்கி விட்டார். அதற்கு மூஸா "இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் துவாரமிட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் மிக்க அபாயகரமானதொரு காரியத்தைச் செய்துவிட்டீர்கள்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
أَلَمْ أَقُلْ
நான் கூறவில்லையா?
إِنَّكَ
நிச்சயமாக நீர்
لَن تَسْتَطِيعَ
இயலவே மாட்டீர்
مَعِىَ
என்னுடன்
صَبْرًا
பொறுப்பதற்கு

Qaala alam aqul innaka lan tastatee'a ma'iya sabraa

அதற்கு அவர் (மூஸாவை நோக்கி) "நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உங்களால் முடியாது என்று நான் கூறவில்லையா?" என்றார்.

Tafseer

قَالَ
கூறினார்
لَا تُؤَاخِذْنِى
குற்றம் பிடிக்காதீர்/என்னை
بِمَا نَسِيتُ
நான் மறந்ததினால்
وَلَا تُرْهِقْنِى
இன்னும் என்னை கட்டாயப்படுத்தாதீர்
مِنْ أَمْرِى
என் காரியத்தில்
عُسْرًا
சிரமத்திற்கு

Qaala laa tu'aakhiznee bimaa naseetu wa laa turhiqnee min amree 'usraa

(அதற்கு) மூஸா "நான் மறந்துவிட்டதைப் பற்றி நீங்கள் என்னைக் குற்றம் பிடிக்காதீர்கள். என் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு கண்டிப்பும் செய்யாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

Tafseer

فَٱنطَلَقَا
ஆகவே, இருவரும் சென்றனர்
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا لَقِيَا
இருவரும் சந்தித்தபோது
غُلَٰمًا
ஒரு சிறுவனை
فَقَتَلَهُۥ
கொன்றார்/அவனை
قَالَ
கூறினார்
أَقَتَلْتَ
கொன்றீரா?
نَفْسًا
ஓர் உயிரை
زَكِيَّةًۢ
பரிசுத்தமானது
بِغَيْرِ نَفْسٍ
ஓர் உயிரைக் கொன்ற குற்றமின்றி
لَّقَدْ
திட்டவட்டமாக
جِئْتَ
செய்தீர்
شَيْـًٔا
செயலை
نُّكْرًا
மகா கொடியது

Fantalaqaa hattaa izaa laqiyaa ghulaaman faqatalahoo qaala aqatalta nafsan zakiy yatam bighairi nafs; laqad ji'ta shai'an nukraa

பின்னர் இருவரும் நடந்தனர். (வழியில் விளையாடிக் கொண்டிருந்த) ஒரு சிறுவனைச் சந்திக்கவே அவர் அவனைக் கொலை செய்து விட்டார். அதற்கு மூஸா "கொலை குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவை நீங்கள் கொலை செய்து விட்டீர்கள்! நிச்சயமாக நீங்கள் ஒரு தகாத காரியத்தையே செய்து விட்டீர்கள்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
أَلَمْ أَقُل
நான் கூறவில்லையா?
لَّكَ
உமக்கு
إِنَّكَ
நிச்சயமாக நீர்
لَن تَسْتَطِيعَ
இயலவே மாட்டீர்
مَعِىَ
என்னுடன்
صَبْرًا
பொறுப்பதற்கு

Qaala alam aqul laka innaka lan tastatee'a ma'iya sabraa

அதற்கவர் (மூஸாவை நோக்கி) "நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உங்களால் முடியாது" என்று நான் உங்களுக்கு (முன்னர்) கூறவில்லையா? என்று கேட்டார்.

Tafseer

قَالَ
கூறினார்
إِن سَأَلْتُكَ
கேட்டால்/உம்மிடம்
عَن شَىْءٍۭ
ஒரு விஷயத்தைப் பற்றி
بَعْدَهَا
இதன் பின்னர்
فَلَا تُصَٰحِبْنِىۖ
சேர்க்காதீர்/என்னை
قَدْ بَلَغْتَ
திட்டமாக அடைந்தீர்
مِن لَّدُنِّى
என்னிடம்
عُذْرًا
ஒரு காரணத்தை

Qaala in sa altuka 'an shai'im ba'dahaa falaa tusaahibnee qad balaghta mil ladunnee 'uzraa

அதற்கு (மூஸா) "இதன் பின்னர் நான் யாதொரு விஷயத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள்என்னை உங்களுடன் வைத்திருக்க வேண்டாம். என்னை மன்னிக்கும் எல்லையை நிச்சயமாக நீங்கள் கடந்து விட்டீர்கள்" என்று கூறினார்.

Tafseer

فَٱنطَلَقَا
ஆகவே, இருவரும் சென்றனர்
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَآ أَتَيَآ
அவ்விருவரும்வரவே
أَهْلَ قَرْيَةٍ
ஓர் ஊராரிடம்
ٱسْتَطْعَمَآ
அவ்விருவரும் உணவு கேட்டார்கள்
أَهْلَهَا
அவ்வூராரிடம்
فَأَبَوْا۟
அவர்கள் மறுத்தனர்
أَن
அவர்கள் விருந்தளிக்க
يُضَيِّفُوهُمَا
அவர்கள் விருந்தளிக்க அவ்விருவருக்கும்
فَوَجَدَا
அவ்விருவரும் கண்டனர்
فِيهَا
அங்கு
جِدَارًا
ஒரு சுவற்றை
يُرِيدُ أَن
விழ இருக்கும்
فَأَقَامَهُۥۖ
அவர் நிறுத்தினார்/அதை
قَالَ
கூறினார்
لَوْ شِئْتَ
நீ நாடியிருந்தால்
لَتَّخَذْتَ
எடுத்திருக்கலாமே
عَلَيْهِ
அதற்காக
أَجْرًا
ஒரு கூலியை

Fantalaqaa hattaaa izaaa atayaaa ahla qaryatinis tat'amaaa ahlahaa fa abaw any yudaiyifoohumaa fawajadaa feehaa jidaarany yureedu any yanqadda fa aqaamah; qaala law shi'ta lattakhazta 'alaihi ajraa

பின்னர் இருவரும் நடந்தனர். அவர்கள் ஓர் ஊராரிடம் வரவே தங்கள் இருவருக்கும் உணவளிக்கும்படி அவ்வூராரை வேண்டினார்கள். ஆனால், அவர்கள் இவ்விருவருக்கும் விருந்தளிக்காது விலகிக் கொண்டனர். பிறகு, அவர் அங்கு விழுந்து விடக்கூடிய நிலையில் இருந்த ஒரு சுவற்றைக் கண்டார். ஆகவே, அவர் (அதற்கு மண் அப்பி செப்பனிட்டு) அதனை (விழாது) நிலை நிறுத்தி வைத்தார். (அதற்கு மூஸா அவரை நோக்கி) "நீங்கள் விரும்பி (கேட்டு) இருந்தால் (இவ்வூராரிடம்) இதற்குரிய கூலியை நீங்கள் வாங்கியிருக்கலாமே" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
هَٰذَا فِرَاقُ
இதுவே/பிரிவினை
بَيْنِى
எனக்கிடையில்
وَبَيْنِكَۚ
இன்னும் உமக்கிடையில்
سَأُنَبِّئُكَ
அறிவிப்பேன்/உமக்கு
بِتَأْوِيلِ
விளக்கத்தை
مَا لَمْ
நீர் இயலாதவற்றின்
عَّلَيْهِ صَبْرًا
அதன் மீது/பொறுக்க

Qaala haazaa firaaqu bainee wa bainik; sa unabi 'uka bitaaweeli maa lam tastati' 'alaihi sabraa

அதற்கவர், "எனக்கும் உங்களுக்கும் இடையில் இதுவே பிரிவினை(க் குரிய நேரம்). நீங்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் போன விஷயங்களின் உண்மையை (இதோ) நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

Tafseer

أَمَّا
ஆக
ٱلسَّفِينَةُ
அக்கப்பல்
فَكَانَتْ
இருக்கிறது
لِمَسَٰكِينَ
ஏழைகளுக்கு
يَعْمَلُونَ
வேலை செய்கிற
فِى ٱلْبَحْرِ
கடலில்
فَأَرَدتُّ
நாடினேன்
أَنْ أَعِيبَهَا
நான் குறைபடுத்த/அதை
وَكَانَ
இருக்கிறான்
وَرَآءَهُم
அவர்களுக்கு முன்
مَّلِكٌ
ஓர் அரசன்
يَأْخُذُ
எடுத்துக்கொள்கிறான்
كُلَّ
எல்லாம்
سَفِينَةٍ
கப்பல்களை
غَصْبًا
அபகரித்து

Ammas safeenatu fakaanat limasaakeena ya'maloona fil bahri fa arattu an a'eebahaa wa kaana waraaa' ahum malikuny yaakhuzu kulla safeenatin ghasbaa

"அக்கப்பல் கடலில் (கூலி) வேலை செய்து கொண்டிருந்த ஏழைகள் சிலருடையது. அதனை குறைபடுத்தவே நான் கருதினேன். (ஏனென்றால், இது செல்லும் வழியில்) இவர்களுக்கு முன் ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கின்றான். அவன் (காணும் நல்ல) கப்பல்கள் அனைத்தையும் அநியாயமாக அபகரித்துக் கொள்கின்றான். (அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அதனை குறைப்படுத்தினேன்.)

Tafseer

وَأَمَّا ٱلْغُلَٰمُ
ஆக,அந்தச் சிறுவன்
فَكَانَ
இருக்கிறார்(கள்)
أَبَوَاهُ
அவனுடைய தாய் தந்தை
مُؤْمِنَيْنِ
நம்பிக்கையாளர்களாக
فَخَشِينَآ
பயந்தோம்
أَن يُرْهِقَهُمَا
கட்டாயப்படுத்தி விடுவான் என்று/அவ்விருவரையும்
طُغْيَٰنًا
அட்டூழியம் செய்வதற்கு
وَكُفْرًا
இன்னும் நிராகரிப்பதற்கு

Wa aammal ghulaamu fakaana abawaahu mu'minaini fakhasheenaaa any yurhiqa humaa tughyaananw wa kufraa

(கொலையுண்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்.

Tafseer