Innaaa arsalnaa 'alaihim saihatanw waahidatan fakaano kahasheemil muhtazir
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு (இடி முழக்கச்) சப்தத்தைத்தான் அனுப்பி வைத்தோம். அதனால், பிடுங்கி எறியப்பட்ட வேலி(க்கூளங்)களைப் போல் அவர்கள் ஆகி விட்டார்கள்.
Wa laqad yassarnal quraana liz zikri fahal mim muddakir
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்தக் குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கின்றோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
Kazzabat qawmu lootim binnuzur
லூத்துடைய மக்களும் நம்முடைய எச்சரிக்கையைப் பொய்யாக்கினார்கள்.
Innaa arsalnaa 'alaihim haasiban illaaa aala Loot najjainaahum bisahar
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் கல்மாரி பொழியச் செய்தோம். விடியற்காலை நேரத்தில் நாம் அவ(ருடைய குடும்பத்தா)ர்களை பாதுகாத்துக் கொண்டோம்.
Ni'matam min 'indinaa; kazaalika najzee man shakar
இது நம்முடைய அருளாகும். இவ்வாறே நன்றி செலுத்து பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
Wa laqad anzarahum batshatanaa fatamaaraw binnuzur
(அவர்களை) நாம் பிடித்துக் கொள்வோம் என்று நிச்சயமாக அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த எச்சரிக்கையைப் பற்றி அவர்கள் தர்க்கிக்க ஆரம்பித்தார்கள்.
Wa laqad raawadoohu 'andaifee fatamasnaaa a'yunahum fazooqoo 'azaabee wa nuzur
அன்றி, அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத் திற்காக) மயக்கி (அடித்து)க் கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டு, நம்முடைய வேதனையையும், எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் என்று கூறினோம்.
Wa laqad sabbahahum bukratan 'azaabum mustaqirr
ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது.
Fazooqoo 'azaabee wa nuzur
நம்முடைய வேதனையையும், நம்முடைய அச்ச மூட்டலையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்).
Wa laqad yassarnal Quraana liz zikri fahal mim muddakir
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனை, நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்திருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?