Skip to main content

فَفَتَحْنَآ
ஆகவே, நாம் திறந்து விட்டோம்
أَبْوَٰبَ
வாசல்களை
ٱلسَّمَآءِ
மேகத்தின்
بِمَآءٍ
மழையைக் கொண்டு
مُّنْهَمِرٍ
அடை

Fafatahnaaa abwaabas sa maaa'i bimaa'im munhamir

ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்துவிட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம்.

Tafseer

وَفَجَّرْنَا
இன்னும் பீறிட்டு ஓடச்செய்தோம்
ٱلْأَرْضَ
பூமியை
عُيُونًا
ஊற்றுக் கண்களால்
فَٱلْتَقَى
சந்தித்தன
ٱلْمَآءُ
தண்ணீர்
عَلَىٰٓ أَمْرٍ
ஒரு காரியத்தின் மீது
قَدْ قُدِرَ
திட்டமாகநிர்ணயிக்கப்பட்டது

Wa fajjamal arda 'uyoonan faltaqal maaa'u 'alaaa amrin qad qudir

அன்றி, பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத் திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது.

Tafseer

وَحَمَلْنَٰهُ
அவரை பயணிக்க வைத்தோம்
عَلَىٰ ذَاتِ
மீது/உடைய (கப்பல்)
أَلْوَٰحٍ
பலகைகள்
وَدُسُرٍ
இன்னும் ஆணிகள்

Wa hamalnaahu 'alaa zaati alwaahinw wa dusur

நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம்.

Tafseer

تَجْرِى
அது செல்கிறது
بِأَعْيُنِنَا
நமது கண்களுக்கு முன்பாக
جَزَآءً
கூலி கொடுப்பதற்காக
لِّمَن كَانَ
நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு

Tajree bi a'yuninaa jazaaa 'al liman kaana kufir

அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது.

Tafseer

وَلَقَد
திட்டவட்டமாக
تَّرَكْنَٰهَآ
அதை விட்டுவைத்தோம்
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
فَهَلْ مِن
நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?

Wa laqat taraknaahaad aayatan fahal mim muddakir

நிச்சயமாக நாம் இதனை (பிற்காலத்தவருக்கு) ஒரு படிப்பினையாகச் செய்துவிட்டோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறக்கூடியவர் உண்டா?

Tafseer

فَكَيْفَ
எப்படி?
كَانَ
இருந்தன
عَذَابِى
எனது வேதனையும்
وَنُذُرِ
எனது எச்சரிக்கையும்

Fakaifa kaana 'azaabee wa nuzur

நம்முடைய வேதனையும், அச்சமூட்டி அறிவித்தலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
يَسَّرْنَا
நாம் எளிதாக்கினோம்
ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
لِلذِّكْرِ
நல்லறிவு பெறுவதற்காக
فَهَلْ مِن
நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?

Wa laqad yassamal Quraana liz zikri fahal mimmuddakir

(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?

Tafseer

كَذَّبَتْ
பொய்ப்பித்தது
عَادٌ
ஆது சமுதாயம்
فَكَيْفَ
எப்படி?
كَانَ
இருந்தன
عَذَابِى
எனது வேதனை(யும்)
وَنُذُرِ
எனது எச்சரிக்கையும்

Kazzabat 'Aadun fakaifa kaana 'azaabee wa nuzur

ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம்முடைய தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) நம்முடைய வேதனையும், நம்முடைய அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?

Tafseer

إِنَّآ
நிச்சயமாக
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
رِيحًا
காற்றை
صَرْصَرًا
குளிர்ந்த சூறாவளி
فِى يَوْمِ
நாளில்
نَحْسٍ
ஒரு தீமையுடைய
مُّسْتَمِرٍّ
நிலையான

Innaa arsalnaa 'alaihim reehan sarsaran fee Yawmi nahsim mustamirr

நிச்சயமாக நாம் அவர்கள் மீது (என்றும்) நிலையான துர்ப் பாக்கியமுடைய ஒரு நாளில் மிக்க கடினமான புயல் காற்றை அனுப்பி வைத்தோம்.

Tafseer

تَنزِعُ
அது கழட்டி எரிந்தது
ٱلنَّاسَ
மக்களை
كَأَنَّهُمْ
போல்/அவர்கள் ஆகிவிட்டார்கள்
أَعْجَازُ
பின் பகுதிகளை
نَخْلٍ
பேரீட்ச மரத்தின்
مُّنقَعِرٍ
வேரோடு சாய்ந்த

Tanzi;un naasa ka anna huma'jaazu nakhlim munqa'ir

அது வேரற்ற பேரீச்ச மரங்களைப்போல், மனிதர்களைக் களைந்து (எறிந்து) விட்டது.

Tafseer