Fa kazzaba wa asaa.
(எனினும்) அவனோ, அதனைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான்.
Thumma adbara yas'aa.
பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான்.
Fa hashara fanada.
இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான்.
Faqala ana rabbu kumul-a'laa.
(அவர்களை நோக்கி) "நான்தான் உங்களுடைய மேலான இறைவன்" என்றும் கூறினான்.
Fa-akha zahul laahu nakalal aakhirati wal-oola.
ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக்கொண்டான்.
Inna fee zaalika la'ibratal limaiy-yaksha
பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கின்றது.
A-antum a shaddu khalqan amis samaa-u banaaha.
(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான்.
Raf'a sam kaha fasaw waaha
அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதனை ஒழுங்குபடுத்தினான்.
Wa aghtasha lailaha wa akhraja duhaaha.
அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான்.
Wal arda b'ada zaalika dahaaha.
இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான்.