Wa izaa baddalnaaa Aayatam makaana Aayatinw wal laahu a'lamu bimaa yunazzilu qaalooo innamaa anta muftar; bal aksaruhum laa ya'lamoon
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உங்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் பொய்யர்" என்று கூறுகின்றனர். எ(ந்ததெந்த நேரத்தில் எந்தெந்தக் கட்டளைகளை எந்தெந்த வசனத்)தை அருள வேண்டுமென்பதை அல்லாஹ் நன்கறிவான்; இவர்களில் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையை) அறியமாட்டார்கள்.
Qul nazzalahoo Roohul Qudusi mir Rabbika bilhaqqi liyusabbital lazeena aamanoo wa hudanw wa bushraa lilmuslimeen
மெய்யாகவே இதை உங்கள் இறைவனிடமிருந்து "ரூஹுல் குத்ஸ்" (என்னும் ஜிப்ரீல்) தான் இறக்கி வைத்தார் என்று நீங்கள் கூறுங்கள். (இந்தக் குர்ஆன் இறைவனுக்கு) நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முற்றிலும் கட்டுப் பட்டவர்களுக்கு நேரான வழியாகவும் நற்செய்தியாகவும் இருக்கிறது.
Wa laqad na'lamu annahum yaqooloona innamaa yu'allimuhoo bashar; lisaanul lazee yulhidoona ilaihi a'ja miyyunw wa haaza lisaanun 'Arabiyyum mubeen
(நபியே! "இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறான்; (இறைவன் கற்றுக்கொடுக்க வில்லை)" என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். எவன் (உங்களுக்குக்) கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அ(ந்தக் கிறிஸ்த)வன் (அரபி மொழியை ஒரு சிறிதும் அறியாத) அஜமி. இவ்வேதமோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. (ஆகவே, அவர்கள் கூறுவது சரியன்று.)
Innal lazeena laa yu'minoona bi Aayaatil laahi laa yahdehimul laahu wa lahum 'azaabun aleem
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வினுடைய வசனங்களை (மனமுரண்டாக) நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். அன்றி, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைதான் உண்டு.
Innamaa yaftaril kazibal lazeena laa yu'minoona bi Aayaatil laahi wa ulaaa'ika humul kaaziboon
(இது) பொய் என்று கற்பனை செய்பவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பாதவர்கள்தாம். (உண்மையில்) இவர்கள்தாம் பொய்யர்கள். (நபியே! நீங்கள் பொய்யரல்ல.)
man kafara billaahi mim ba'di eemaanihee illaa man ukriha wa qalbuhoo mutmma'innum bil eemaani wa laakim man sharaha bilkufri sadran fa'alaihim ghadabum minal laahi wa lahum 'azaabun 'azeem
(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அவன் அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
Zaalika bi annahumus tahabbul hayaatad dunyaa 'alal Aakhirati wa annal laaha laa yahdil qawmal kaafireen
ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையின் மீதுதான் நேசம் கொண்டார்கள். நிச்சயமாக, நிராகரிக்கும் இத்தகைய மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான்.
Ulaaa'ikal lazeena taba'al laahu 'alaa quloobihim wa sam'ihim wa absaarihim wa ulaaa'ika humul ghaafiloon
இத்தகையவர்களின் இதயங்களின் மீதும், காதுகள் மீதும், கண்கள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். இவர்கள்தாம் (தங்கள் தீய முடிவை) உணர்ந்து கொள்ளாதவர்கள்.
Laa jarama annnahum fil Aakhirati humul khassiroon
மறுமையில் முற்றிலும் நஷ்டமடைபவர்கள் இவர்கள்தாம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.
Summa inna Rabbaka lillazeena haajaroo mim ba'dimaa futinoo summma jaahadoo wa sabaroo inna Rabbaka mim ba'dihaa la Ghafoorur Raheem
(நபியே!) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு, பின்னர் (தங்கள் இல்லத்திலிருந்து) வெளிப்பட்டு, போரும் புரிந்து (பல கஷ்டங்களையும்) சகித்துக்கொண்டு உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்(கு அருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உங்களுடைய இறைவன் இருக்கிறான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் இதற்குப் பின்னரும் (அவர்களை) மன்னிப்பவனும் (அவர்கள் மீது) கிருபையுடையவனுமாக இருக்கின்றான்.