Skip to main content
bismillah

طسٓمٓ
தா சீம் மீம்

Taa-Seeen-Meeem

தா; ஸீம்; மீம்.

Tafseer

تِلْكَ
இவை
ءَايَٰتُ
வசனங்களாகும்
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
ٱلْمُبِينِ
தெளிவான

Tilka Aayaatul Kitaabil mubeen

(நபியே!) இவை(களும்) தெளிவான இவ்வேதத்திலுள்ள சில வசனங்களாகும்.

Tafseer

نَتْلُوا۟
நாம் ஓதுகிறோம்
عَلَيْكَ
உம்மீது
مِن نَّبَإِ
செய்தியை
مُوسَىٰ
மூசா
وَفِرْعَوْنَ
மற்றும் ஃபிர்அவ்னின்
بِٱلْحَقِّ
உண்மையாக
لِقَوْمٍ
மக்களுக்காக
يُؤْمِنُونَ
நம்பிக்கைகொள்கின்ற

Natloo 'alaika min naba-i Moosaa wa Fi'awna bilhaqqi liqawminy yu'miinoon

(நபியே!) நம்பிக்கை கொண்ட மக்களுக்காக மூஸா, ஃபிர்அவ்னைப் பற்றிய சில உண்மை விஷயங்களை நாம் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறோம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
عَلَا
பலவந்தப்படுத்தினான்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
أَهْلَهَا
அங்குள்ளவர்களை
شِيَعًا
பல பிரிவுகளாக
يَسْتَضْعِفُ
பலவீனப்படுத்தினான்
طَآئِفَةً
ஒரு வகுப்பாரை
مِّنْهُمْ
அவர்களில்
يُذَبِّحُ
கொன்றான்
أَبْنَآءَهُمْ
ஆண் பிள்ளைகளை அவர்களின்
وَيَسْتَحْىِۦ
வாழவிட்டான்
نِسَآءَهُمْۚ
அவர்களின் பெண்களை
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருந்தான்
مِنَ ٱلْمُفْسِدِينَ
கெட்டவர்களில் ஒருவனாக

Inna Fir'awna 'alaa fil ardi wa ja'ala ahlahaa shiya'ai yastad'ifu taaa'ifatam minhum yuzabbihu abnaaa'ahum wa yastahyee nisaaa'ahum; innahoo kaana minal mufsideen

நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ வைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமம் செய்பவனாக இருந்தான்.

Tafseer

وَنُرِيدُ
இன்னும் நாடினோம்
أَن نَّمُنَّ
?/நாம் அருள்புரிவதற்கு
عَلَى ٱلَّذِينَ
பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَنَجْعَلَهُمْ
இன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்கு
أَئِمَّةً
அரசர்களாக
وَنَجْعَلَهُمُ
இன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்கு
ٱلْوَٰرِثِينَ
வாரிசுகளாக

Wa nureedu an namunna 'alal lazeenas tud'ifoo fil ardi wa naj'alahum a'immatanw wa naj'alahumul waariseen

எனினும், பூமியில் அவன் பலவீனப்படுத்தியவர்கள் மீது நாம் அருள் புரிந்து அவர்களைத் தலைவர்களாக்கி (அங்கு இருந்தவர்களுடைய பொருள்களுக்கும்,) இவர்களையே வாரிசுகளாக்கி வைக்க விரும்பினோம்.

Tafseer

وَنُمَكِّنَ
இன்னும் நாம் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு
لَهُمْ
அவர்களுக்கு
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَنُرِىَ
நாம் காண்பிப்பதற்கு
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
وَهَٰمَٰنَ
இன்னும் ஹாமான்
وَجُنُودَهُمَا
இன்னும் இராணுவங்களுக்கு அவ்விருவரின்
مِنْهُم
அவர்கள் மூலமாக
مَّا كَانُوا۟
எதை/இருந்தனர்
يَحْذَرُونَ
அச்சப்படுகின்றனர்

Wa numakkina lahum fil ardi wa nuriya Fir'awna wa Haamaana wa junoodahumaa minhum maa kaanoo yahzaroon

அப்பூமியில் நாம் (பலவீனமான) அவர்களை மேன்மையாக்கி வைத்து ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் எந்த வேதனைக்குப் பயந்து கொண்டிருந்தார்களோ, அதனை அவர்களுக்குக் காண்பிக்கவும் நாம் கருதினோம்.

Tafseer

وَأَوْحَيْنَآ
நாம் உள்ளத்தில் போட்டோம்
إِلَىٰٓ أُمِّ
தாயாருக்கு
مُوسَىٰٓ
மூஸாவின்
أَنْ أَرْضِعِيهِۖ
நீ அவருக்கு பாலூட்டு!
فَإِذَا خِفْتِ
நீ பயந்தால்
عَلَيْهِ
அவரை
فَأَلْقِيهِ
அவரை எரிந்து விடு
فِى ٱلْيَمِّ
கடலில்
وَلَا تَخَافِى
நீ பயப்படாதே!
وَلَا تَحْزَنِىٓۖ
இன்னும் நீ கவலைப்படாதே!
إِنَّا
நிச்சயமாக நாம்
رَآدُّوهُ
அவரை திரும்பக் கொண்டு வருவோம்
إِلَيْكِ
உம்மிடம்
وَجَاعِلُوهُ
இன்னும் , அவரை ஆக்குவோம்
مِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில்

Wa awhainaaa ilaaa ummi Moosaaa an ardi'eehi faizaa khifti 'alaihi fa alqeehi filyammi wa laa takhaafee wa laa tahzaneee innaa raaaddoohu ilaiki wa jaa'iloohu minal mursaleen

(ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன்னுடைய இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹீ மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக்கொண்டு) "அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை நம்முடைய தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்" (என்று அறிவித்தோம்.)

Tafseer

فَٱلْتَقَطَهُۥٓ
அவரைக் கண்டெடுத்தனர்
ءَالُ
குடும்பத்தினர்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின்
لِيَكُونَ
முடிவில் அவர் ஆகுவதற்காக
لَهُمْ
அவர்களுக்கு
عَدُوًّا
எதிரியாகவும்
وَحَزَنًاۗ
கவலையாகவும்
إِنَّ
நிச்சயமாக
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
وَهَٰمَٰنَ
ஹாமான்
وَجُنُودَهُمَا
இன்னும் ராணுவங்கள் அவ்விருவரின்
كَانُوا۟
இருந்தனர்
خَٰطِـِٔينَ
பாவிகளாகவே

Faltaqatahooo Aalu Fir'awna li yakoona lahum 'aduwwanw wa hazanaa; inna Fir'awna wa Haamaana wa junooda humaa kaanoo khaati'een

(ஆகவே, மூஸாவுடைய தாய் அவரை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள்.) அக்குழந்தையை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினரில் ஒருவர் எடுத்துக்கொண்டார். (அவர்களுக்கு) எதிரியாகி துக்கத்தைத் தரக்கூடிய (அக்குழந்)தை (யை அவர்களே எடுத்துக்கொண்டதினால்) ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் நிச்சயமாகத் தவறிழைத்தவர்களாவே ஆயினர்.

Tafseer

وَقَالَتِ
கூறினாள்
ٱمْرَأَتُ
மனைவி
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின்
قُرَّتُ
குளிர்ச்சியாகும்
عَيْنٍ
கண்
لِّى وَلَكَۖ
எனக்கும் உனக்கும்
لَا تَقْتُلُوهُ
அதைக் கொல்லாதீர்கள்!
عَسَىٰٓ أَن
அது நமக்கு நன்மை தரலாம்
أَوْ نَتَّخِذَهُۥ
அல்லது அதை நாம் வைத்துக்கொள்ளலாம்
وَلَدًا
பிள்ளையாக
وَهُمْ
இன்னும் அவர்கள்
لَا يَشْعُرُونَ
உணரவில்லை

Wa qaalatim ra atu Fir'awna qurratu 'aynil lee wa lak; laa taqtuloohu 'asaaa aiyanfa'anaa aw nattakhizahoo waladanw wa hum laa yash'uroon

(அக்குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மனைவி (தன் கணவனை நோக்கி) "நீ இதனை கொலை செய்துவிடாதே! எனக்கும், உனக்கும் இது ஒரு கண் குளிர்ச்சியாக இருக்கின்றது. இதனால் நாம் நன்மை அடையலாம் அல்லது இதனை நாம் நம்முடைய குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினாள். எனினும், (இவராலேயே தங்களுக்கும் அழிவு ஏற்படும் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.

Tafseer

وَأَصْبَحَ
ஆகிவிட்டது
فُؤَادُ
உள்ளம்
أُمِّ
தாயாருடைய
مُوسَىٰ
மூஸாவின்
فَٰرِغًاۖ
வெறுமையாக
إِن كَادَتْ
நிச்சயமாக அவள் வெளிப்படுத்தி இருக்கக்கூடும்
بِهِۦ
அவரை
لَوْلَآ أَن
நாம் உறுதிப்படுத்தவில்லையெனில்
عَلَىٰ قَلْبِهَا
அவளுடைய உள்ளத்தை
لِتَكُونَ
அவள் ஆகவேண்டும் என்பதற்காக
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்

Wa asbaha fu'aadu ummi Moosaa faarighan in kaadat latubdee bihee law laaa arrabatnaa 'alaa qalbihaa litakoona minal mu'mineen

மூஸாவுடைய தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் என்னுடைய வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப் படுத்தியிருக்காவிடில், (மூஸா பிறந்திருக்கும் விஷயத்தை அனைவருக்கும்) அவள் வெளிப்படுத்தியே இருப்பாள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் கஸஸ்
القرآن الكريم:القصص
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Qasas
ஸூரா:28
வசனம்:88
Total Words:441
Total Characters:5800
Number of Rukūʿs:8
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:49
Starting from verse:3252