Ilaa Yawmil waqtil ma'loom
குறிப்பிட்ட அந்நாள் வரையில் (உன் தவணை)" என்று கூறினான்.
Qaala fabi'izzatika la ughwiyannahum ajma'een
அதற்கவன், "உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக நான் (மனிதர்கள்) அனைவரையும் வழி கெடுத்துவிடுவேன்."
Illaa 'ibaadaka minhumul mukhlaseen
"(எனினும்,) பரிசுத்த மனதுடைய உன் அடியார்களைத் தவிர" என்றான்.
Qaala falhaqq, walhaqqa aqool
அதற்கு இறைவன், "நான் உண்மையே கூறுபவன். உண்மை என்னவென்றால்,
La amla'annna Jahannama minka wa mimman tabi'aka minhum ajma'een
உன்னையும் உன்னைப் பின்பற்றியவர்களையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்" என்றான்.
Qul maaa as'alukum 'alaihi min ajrinw wa maaa ana minal mutakallifeen
ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (மனிதர்களே! இதனை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. அன்றி, (நீங்கள் சுமக்கக்கூடாத யாதொரு சுமையை) நான் உங்கள் மீது சுமத்தவும் இல்லை. இவ்வேதத்தை நான் கற்பனையாக கட்டிக் கொள்ளவும் இல்லை.
In huwa illaa zikrul lil'aalameen
உலகத்தார் அனைவருக்குமே இது ஒரு நல்லுபதேசமே யன்றி வேறில்லை.
Wa lata'lamunna naba ahoo ba'da heen
நிச்சயமாக சிறிது காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.