Zaalika bi annal laaha mawlal lazeena aamanoo wa annal kaafireena laa mawlaa lahum
காரணமாவது: நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களை காப்பவனாக அல்லாஹ்வே இருக்கின்றான். நிராகரிப்பவர்களுக்கோ, நிச்சயமாக யாதொரு பாதுகாவலனுமில்லை.
Innal-laaha yudkhilul lazeena aamanoo wa 'amilus saalihaati Jannaatin tajree min tahtihal anhaaru wallazeena kafaroo yatamatta'oona wa yaakuloona kamaa taakuluian'aamu wan Naaru maswallahum
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியில் புகுத்துகின்றான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள், மிருகங்கள் தின்பதைப் போல் தின்றுகொண்டும், (மிருகங்களைப் போல்) சுகத்தை அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். (எனினும்,) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்.
Wa ka ayyim min qaryatin hiya ashaddu quwwatam min qaryatikal lateee akhrajatka ahlaknaahum falaa naasira lahum
(நபியே!) உங்களுடைய ஊரைவிட்டும் உங்களை வெளிப்படுத்திய இவர்களைவிட எத்தனையோ ஊரார்கள் மிக்க பலசாலிகளாக இருந்தனர். (அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக) அவர்கள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம். (அச்சமயம்) அவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிருக்க வில்லை. (ஆகவே, இவர்கள் எம்மாத்திரம்! இவர்களையும் நாம் அழித்தே தீருவோம்.)
Afaman kaana 'alaa baiyinatim mir Rabbihee kaman zuyyina lahoo sooo'u 'amalihee wattaba'ooo ahwaaa'ahum
எவர் தன் இறைவனின் தெளிவான (நேரான) பாதையின் மீது இருக்கின்றாரோ அத்தகையவருக்கு, எவன் தன்னுடைய தீய காரியங்களையே அழகாகக் கண்டு, தன்னுடைய சரீர இச்சை களையே பின்பற்றுகின்றானோ அவன் ஒப்பாவானா?
Masalul jannatil latee wu'idal muttaqoona feehaaa anhaarum mim maaa'in ghayri aasininw wa anhaarum mil labanil lam yataghaiyar ta'muhoo wa anhaarum min khamril lazzatil lishshaaribeena wa anhaarum min 'asalim musaffanw wa lahum feeha min kullis samaraati wa maghfiratum mir Rabbihim kaman huwa khaalidun fin naari wa suqoo maaa'an hameeman faqatta'a am'aaa'ahum
இறை அச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையாவது: அதில் தீங்கற்ற (பரிசுத்தமான) நீரருவிகள் இருக்கின்றன. பரிசுத்தமான ருசி மாறாத பாலாறுகளும் இருக்கின்றன. திராட்சை ரச ஆறுகளும் இருக்கின்றன. அது குடிப்பவர்களுக்குப் பேரின்பமளிக்கக்கூடியது. தெளிவான தேனாறுகளும் இருக்கின்றன. அன்றி, அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவர்க்கங்கள் இருப்பதுடன், இறைவனின் மன்னிப்பும் அவர்களுக்கு உண்டு. (இத்தகைய இன்பங்களை அனுபவிப் பவனுக்கு) நரகத்தில் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடக்கூடிய நரகவாசி ஒப்பாக முடியுமா?
Wa minhum mai yastami' ilaika hattaaa izaa kharajoo min 'indika qaaloo lillazeena ootul 'ilma maazaa qaala aanifaa; ulaaa'ikal lazeena taba'al laahu 'alaa quloobihim wattaba'ooo ahwaaa'ahum
(நபியே! நீங்கள் இவ்வேதத்தை ஓதிய சமயத்தில்) உங்களுக்குச் செவி சாய்ப்பவர்களைப் போல் இருந்து உங்களை விட்டு வெளிப்பட்டதும், (நம்பிக்கையாளர்களாகிய, இவ்வேத) ஞானம் கொடுக்கப்பட்டவர்களை நோக்கி(ப் பரிகாசமாக "உங்களுடைய நபி) சற்று முன் என்ன கூறினார்?" எனக் கேட்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். இத்தகைய வர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். (ஆதலால்,) இவர்கள் தங்கள் சரீர இச்சையைப் பின்பற்றி நடக்கின்றனர்.
Wallazeenah tadaw zaadahum hudanw wa aataahum taqwaahum
எவர்கள் நேரான வழியில் செல்கின்றார்களோ (அவர்கள் இந்த வேதத்தைச் செவியுறுவதன் காரணமாக) அவர்களுடைய நேர்மையை (மென்மேலும்) அதிகப்படுத்தி இறை அச்சத்தையும் அவர்களுக்கு (இறைவன்) அளிக்கின்றான்.
Fahal yanzuroona illas Saa'ata an taatiyahum baghtatan faqad jaaa'a ashraatuhaa; fa-annnaa lahum izaa jaaa'at hum zikraahum
(நபியே! அந்தப் பாவிகள்) தங்களிடம் திடீரென வரக்கூடிய மறுமை(யின் வேதனை)யை தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கின்றனரா? அதன் அடையாளங்களில் பல நிச்சயமாக வந்து விட்டன. அது அவர்களிடம் வந்ததன் பின்னர், அதனைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துவதால் என்ன பயன்?
Fa'lam annahoo laaa ilaaha illal laahu wastaghfir lizambika wa lilmu'mineena walmu'minaat; wallaahu ya'lamu mutaqallabakum wa maswaakum
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொண்டு, நீங்கள் உங்களுடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் மன்னிப்பு கோருங்கள்! (நம்பிக்கையாளர்களே!) உங்களுடைய நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.
Wa yaqoolul lazeena aamanoo law laa nuzzilat Sooratun fa izaaa unzilat Sooratum Muhkamatunw wa zukira feehal qitaalu ra aytal lazeena fee quloobihim maraduny yanzuroona ilaika nazaral maghshiyyi 'alaihi minal mawti fa'awlaa lahum
நம்பிக்கை கொண்டவர்களிலும் பலர், (போரைப் பற்றி) யாதொரு (தனி அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான அத்தியாயம் இறக்கப்பட்டு போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உங்களை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே, அவர்களுக்குக் கேடுதான்.