Qul anad'oo min doonil laahi maa laa yanfa'unaa wa laa yadurrunaa wa nuraddu 'alaaa a'qaabina ba'da iz hadaanal laahu kallazis tahwat hush Shayaateenu fil ardi hairaana lahooo ashaabuny yad'oo nahooo ilal huda' tinaa; qul inna hudal laahi huwal hudaa wa umirnaa linuslima li Rabbil 'aalameen
(நபியே!) நீங்கள் கேளுங்கள்: "அல்லாஹ்வை விட்டுவிட்டு நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவைகளையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் "தம்மிடம் வா" என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்." (மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்."
Wa an aqeemus Salaata wattaqooh; wa Hual lazeee ilaihi tuhsharoon
"(அன்றி) தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும்படியும், அவனுக்கே பயப்படும்படியும் (ஏவப்பட்டுள்ளோம்.) அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்" (என்றும் கூறுங்கள்.)
Wa an Huwal lazee khalaqas samaawaati wal arda bilhaqq; wa Yawma yaqoolu kun fa yakoon; Qawluhul haqq; wa lahul mulku Yawma yunfakhu fis Soor; 'Aalimul Ghaibi wash shahaadah; wa Huwal Hakeemul Khabeer
வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் யாதொன்றை படைக்கக் கருதும்போது) "ஆகுக!" என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும். அவனுடைய சொல்தான் உண்மை. சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில், அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
Wa iz qaala Ibraaheemu li abeehi Aazara a-tattakhizu asnaaman aalihatan inneee araaka wa qawmaka fee dalaalim mmubeen
இப்ராஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி "நீங்கள் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டு "நிச்சயமாக நீங்களும் உங்களுடைய மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கிறேன்" என்று கூறினார்.
Wa kazaalika nureee Ibraaheema malakootas samaawaati wal ardi wa liyakoona minal mooqineen
இப்ராஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்.
Falammaa janna 'alaihil lailu ra aa kawkabaan qaala haaza Rabbee falammaaa afala qaala laaa uhibbul aafileen
(ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில் அவர் (மின்னிக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" என (தம் மக்களைக்) கேட்டு அது மறையவே, "மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக்கொள்ள) நான் விரும்பமாட்டேன்" எனக் கூறிவிட்டார்.
Falammmaa ra al qamara baazighan qaala haazaa Rabbee falammmmaaa afala qaala la'il lam yahdinee Rabbee la akoonanna minal qawmid daaalleen
பின்னர் உதயமான சந்திரனைக் காணவே "இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதனையும் நிராகரித்துவிட்டு) "எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்" என்று கூறினார்.
Falammmaa ra ashshamsa baazighatan qaala haazaa Rabbee haazaaa akbaru falammaaa afalat qaala yaa qawmi innee bareee'um mimmaa tushrikoon
பின்னர் உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது "இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே அவர் (தம் மக்களை நோக்கி) "என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன்" என்று கூறிவிட்டு,
Innnee wajjahtu wajhiya lillazee fataras samaawaati wal arda haneefanw wa maaa ana minal mushrikeen
"வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகிறேன். நான் (அவனுக்கு எதனையும்) இணை வைப்பவன் அல்ல" (என்று கூறினார்.)
Wa haaajjahoo qawmuh; qaala a-tuh aaajjooonnnee fillaahi wa qad hadaan; wa laaa akhaafu mmaa tushrikoona bihee illaaa ai yashaaa'a Rabbee shai'anw wasi'a Rabbee kulla shai'in 'ilman afalaa tatazakkaroon
(இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: "நீங்கள் (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கின்றீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்து விட்டான். என் இறைவன் யாதொன்றை விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே அவை)களுக்கு நான் பயப்பட மாட்டேன். என் இறைவன் அனைவரையும் விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?