Yaaa ayyuhan nabiyyu lima tuharrimu maaa ahallal laahu laka tabtaghee mardaata azwaajik; wallaahu ghafoorur raheem
நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்த பொருள்களை (உபயோகிப்பது இல்லை என்று) நீங்கள் ஏன் (சத்தியம் செய்து அதனை ஹராம் என்று) விலக்கிக்கொண்டீர்கள்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
Qad faradal laahu lakum tahillata aymaanikum; wallaahu mawlaakum wa huwal'aleemul hakeem
ஆகவே, உங்களுடைய அந்தச் சத்தியத்திற்கு (நீங்கள் பரிகாரம் கொடுத்து) அதனை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அல்லாஹ்தான் உங்களது எஜமானன். அவன் (அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.
Wa iz asarran nabiyyu ilaa ba'di azwaajihee hadeesan falammaa nabba at bihee wa azharahul laahu 'alaihi 'arrafa ba'dahoo wa a'rada 'am ba'din falammaa nabba ahaa bihee qaalat man amba aka haaza qaala nabba aniyal 'aleemul khabeer
(நமது) நபி தன்னுடைய மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி "இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?" எனக் கேட்டார். அதற்கு அவர் "(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்" என்று கூறினார்கள்.
In tatoobaaa ilal laahi faqad saghat quloobukumaa wa in tazaaharaa 'alihi fa innal laaha huwa mawlaahu wa jibreelu wa saalihul mu'mineen; walma laaa'ikatu ba'dazaalika zaheer
(நபியுடைய அவ்விரு மனைவிகளே!) நீங்கள் இருவரும் (உங்கள் குற்றங்களைப் பற்றி) அல்லாஹ்வின் பக்கம் கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி மீண்டுவிட்டால் (அது உங்களுக்கே நன்று. ஏனென்றால்,) உங்கள் இருவரின் உள்ளங்கள் (நேரான வழியில் இருந்து) சாய்ந்துவிட்டன. ஆகவே, நீங்கள் இருவரும் அவருக்கு விரோதமாக ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக அல்லாஹ் அவரை பாதுகாப்பவனாக இருக்கின்றான். அன்றி, ஜிப்ரயீலும், நம்பிக்கை யாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) மலக்குகளும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள்.
'Asaa rabbuhooo in tallaqakunna anyyubdilahooo azwaajan khairam mnkunna muslimaatim mu'minaatin qaanitaatin taaa'ibaatin 'aabidaatin saaa'ihaatin saiyibaatinw wa abkaaraa
நபி உங்களை "தலாக்" கூறி (விலக்கி) விட்டால், உங்களைவிட மேலான பெண்கள் பலரை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். (மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ) முஸ்லிமானவர்களாகவும், நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், (இறைவனுக்குப்) பயந்து (நமது நபிக்கு கட்டுப்பட்டு) நடக்கக் கூடியவர்களாகவும், (பாவத்தைவிட்டு) விலகியவர்களாகவும், (இறைவனை) வணங்குபவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாதவர்களாகவும் இருப்பார்கள். (இதனால் உங்களுக்குத்தான் நஷ்டம்.)
Yaaa ayyuhal lazeena samanoo qooo anfusakum wa ahleekum naaranw waqoodu han naasu wal hijaaratu 'alaihaa malaaa'ikatun ghilaazun shidaadul laa ya'soonal laaha maa amarahum wa yaf'aloona maa yu'maroon
நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான மலக்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்..
Yaaa ayyuhal lazeena kafaroo la ta'tazinul yawma innamaa tujzawna maa kuntum ta'maloon
(அந்நாளில் நிராகரிப்பவர்களை நோக்கி) "நிராகரிப்பவர்களே! இன்றைய தினம் நீங்கள் (வீண்) புகல் கூறாதீர்கள். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம், நீங்கள் செய்தவைகளுக்குத்தான். (நீங்கள் செய்யாதவைகளுக்கு அன்று" என்று கூறப்படும்)
Yaaa ayyuhal lazeena aammano toobooo ilal laahi tawbatan nasoohan 'asaa rabbukum any-yukaffira 'ankum sayyi aatikum wa yudkhilakum jannaatin tajree min tahtihal anhaaru yawma laa yukhzil laahun nabiyya wallazeena aamanoo ma'ahoo nooruhum yas'aa baina aydeehim wa bi aymaanihim yaqooloona rabbanaaa atmim lanaa nooranaa waghfir lana innaka 'alaa kulli shai'in qadeer
நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்தி லிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சுவனபதியிலும் உங்களைப் புகுத்திவிடுவான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். (தன்னுடைய) நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அந்நாளில், இவர்களுடைய பிரகாசம் இவர்களுக்கு முன்னும், இவர்களுடைய வலது பக்கத்திலும் ஊடுருவிச் சென்று கொண்டிருக்கும். இவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை (அணையாது) நீ பரிபூரணமாக்கி வை. எங்களுடைய குற்றங்களையும் நீ மன்னித்து அருள்புரி. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்" என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.
yaaa ayyuuhan nabiyyu jaahidil kuffaara walmunaa-fiqeena waghluz 'alaihim; wa maawaahum jahannamu wa bi'sal maseer
நபியே! (இந்த) நிராகரிப்பவர்களுடன் (வாளைக் கொண்டும், இந்த) நயவஞ்சகர்களுடன் (தர்க்கத்தைக் கொண்டும்) போர் புரியுங்கள். அவர்களுக்கு நீங்கள் (தாட்சண்யம் காட்டாது) கடுமையாகவே இருங்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்; அது மகாகெட்ட சேரும் இடம்.
Darabal laahu masalal lillazeena kafarum ra ata Noobinw wamra ata Loot, kaanataa tahta 'abdaini min 'ibaadinaa saalihaini fakhaanataahumaa falam yughniyaa 'anhumaa minal laahi shai anw-wa qeelad khulan naara ma'ad Daakhileen
நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கின்றான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன் மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்களிருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து யாதொன்றையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) "நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுங்கள்" என்றே கூறப்பட்டது.
القرآن الكريم: | التحريم |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | At-Tahrim |
ஸூரா: | 66 |
வசனம்: | 12 |
Total Words: | 247 |
Total Characters: | 1060 |
Number of Rukūʿs: | 2 |
Classification (Revelation Location): | மதனீ |
Revelation Order: | 107 |
Starting from verse: | 5229 |