Skip to main content

إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
لَتَأْتُونَ
வருகிறீர்கள்
ٱلرِّجَالَ
ஆண்களிடம்
شَهْوَةً
காமத்திற்கு
مِّن دُونِ
அன்றி
ٱلنِّسَآءِۚ
பெண்கள்
بَلْ
மாறாக
أَنتُمْ
நீங்கள்
قَوْمٌ
மக்கள்
مُّسْرِفُونَ
வரம்பு மீறியவர்கள்

Innakum lataatoonar rijaala shahwatam min doonin nisaaa'; bal antumqawmum musrifoon

நிச்சயமாக நீங்கள் பெண்களைவிட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கின்றீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள்" என்று கூறினார்.

Tafseer

وَمَا كَانَ
இருக்கவில்லை
جَوَابَ
பதிலாக
قَوْمِهِۦٓ
அவருடைய சமுதாயத்தினரின்
إِلَّآ
தவிர
أَن قَالُوٓا۟
என்று அவர்கள் கூறியது
أَخْرِجُوهُم
வெளியேற்றுங்கள்
مِّن
இவர்களை
قَرْيَتِكُمْۖ
உங்கள் ஊரிலிருந்து
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
أُنَاسٌ
மனிதர்கள்
يَتَطَهَّرُونَ
சுத்தமானவர்கள்

Wa maa kaana jawaaba qawmihee illaa an qaalooo akhrijoohum min qaryatikum innahum unaasuny yatatah haroon

அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) "இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகி விடலாமெனப் பார்க்கின்றனர்" என்றுதான் பதில் கூறினார்கள்.

Tafseer

فَأَنجَيْنَٰهُ
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
وَأَهْلَهُۥٓ
இன்னும் அவருடைய குடும்பத்தை
إِلَّا
தவிர
ٱمْرَأَتَهُۥ
அவருடைய மனைவியை
كَانَتْ
அவள் ஆகினாள்
مِنَ ٱلْغَٰبِرِينَ
தங்கியவர்களில்

Fa anjainaahu wa ahlahooo illam ra atahoo kaanat minal ghaabireen

ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள்.

Tafseer

وَأَمْطَرْنَا
பொழிவித்தோம்
عَلَيْهِم
அவர்கள் மீது
مَّطَرًاۖ
மழையை
فَٱنظُرْ
ஆகவே கவனிப்பீராக
كَيْفَ
எவ்வாறு
كَانَ
ஆகிவிட்டது
عَٰقِبَةُ
முடிவு
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளின்

Wa 'amtarnaa 'alaihim mataran fanzur kaifa kaana aaqibatul mujjrimeen

அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள்.

Tafseer

وَإِلَىٰ مَدْيَنَ
‘மத்யன்’க்கு
أَخَاهُمْ
சகோதரர்/அவர்களுடைய
شُعَيْبًاۗ
‘ஷுஐப்’ஐ
قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا لَكُم
உங்களுக்கில்லை
مِّنْ إِلَٰهٍ
வணங்கப்படும் ஒரு கடவுள்
غَيْرُهُۥۖ
அவனையன்றி
قَدْ جَآءَتْكُم
வந்துவிட்டது/உங்களுக்கு
بَيِّنَةٌ
ஓர் அத்தாட்சி
مِّن
இருந்து
رَّبِّكُمْۖ
உங்கள் இறைவன்
فَأَوْفُوا۟
ஆகவே முழுமையாக்குங்கள்
ٱلْكَيْلَ
அளவை
وَٱلْمِيزَانَ
இன்னும் நிறுவையை
وَلَا تَبْخَسُوا۟
குறைக்காதீர்கள்
ٱلنَّاسَ
மக்களுக்கு
أَشْيَآءَهُمْ
பொருள்களில் அவர்களுடைய
وَلَا تُفْسِدُوا۟
கலகம் செய்யாதீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
بَعْدَ
பின்னர்
إِصْلَٰحِهَاۚ
அது சீர்திருத்தப்பட்ட
ذَٰلِكُمْ
இவை
خَيْرٌ
சிறந்தது
لَّكُمْ
உங்களுக்கு
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களாக

Wa ilaa Madyana akhaahum Shu'aybaa; qaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuhoo qad jaaa'atkum baiyinatum mir Rabbikum fa awful kaila walmeezaana wa laa tabkhasun naasa ashyaa'ahum wa laa tufsidoo fil ardi ba'da islaahihaa; zaalikum khairul lakum in kuntum mu'mineen

"மத்யன்" (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் "ஷுஐபை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது. ஆகவே அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் யாதொன்றையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்" என்று கூறினார்.

Tafseer

وَلَا تَقْعُدُوا۟
அமராதீர்கள்
بِكُلِّ صِرَٰطٍ
எல்லாப் பாதையிலும்
تُوعِدُونَ
அச்சுறுத்தியவர்களாக
وَتَصُدُّونَ
இன்னும் தடுப்பவர்களாக
عَن سَبِيلِ
பாதையை விட்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مَنْ ءَامَنَ
எவரை/ நம்பிக்கைகொண்டார்
بِهِۦ
அவனை
وَتَبْغُونَهَا
இன்னும் அதில் தேடியவர்களாக
عِوَجًاۚ
கோணலை
وَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
إِذْ
சமயம்
كُنتُمْ
இருந்தீர்கள்
قَلِيلًا
குறைவாக
فَكَثَّرَكُمْۖ
அதிகமாக்கினான் உங்களை
وَٱنظُرُوا۟
இன்னும் கவனியுங்கள்
كَيْفَ
எவ்வாறு
كَانَ
இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلْمُفْسِدِينَ
கலகம் செய்பவர்களின்

Wa laa taq'udoo bikulli siraatin too'idoona wa tasuddoona 'an sabeelil laahi man aamana bihee wa abghoonahaa 'iwajaa; waz kurooo iz kuntum qaleelan fakassarakum wanzuroo kaifa kaana 'aaqibatul mufsideen

(அன்றி) "நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்துகொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக!" (என்றும் கூறினார்.)

Tafseer

وَإِن كَانَ
இருந்தால்
طَآئِفَةٌ
ஒரு பிரிவினர்
مِّنكُمْ
உங்களில்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களாக
بِٱلَّذِىٓ
எதைக்கொண்டு
أُرْسِلْتُ
அனுப்பப்பட்டேன்
بِهِۦ
அதைக் கொண்டு
وَطَآئِفَةٌ
இன்னும் ஒரு பிரிவினர்
لَّمْ يُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களாக
فَٱصْبِرُوا۟
பொறுங்கள்
حَتَّىٰ
வரை
يَحْكُمَ
தீர்ப்பளிக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
بَيْنَنَاۚ
நமக்கு மத்தியில்
وَهُوَ
அவன்
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلْحَٰكِمِينَ
தீர்ப்பளிப்பவர்களில்

Wa In kaana taaa'ifatum minkum aamanoo billazeee ursiltu bihee wa taaa'ifatul lam yu'minoo fasbiroo hattaa yahkumual laahu bainanaa; wa Huwa khairul haakimeen

(நம்பிக்கையாளர்களே!) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதனை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன்.

Tafseer

قَالَ
கூறினார்(கள்)
ٱلْمَلَأُ
தலைவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
ٱسْتَكْبَرُوا۟
பெருமையடித்தனர்
مِن قَوْمِهِۦ
அவருடைய சமுதாயத்தில்
لَنُخْرِجَنَّكَ
நிச்சயம் வெளியேற்றுவோம்/உம்மை
يَٰشُعَيْبُ
ஷுஐபே
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை
مَعَكَ مِن
உம்முடன்/இருந்து
قَرْيَتِنَآ
எங்கள் ஊர்
أَوْ لَتَعُودُنَّ
அல்லது/நிச்சயமாக நீங்கள் திரும்பிவிட வேண்டும்
فِى مِلَّتِنَاۚ
எங்கள் கொள்கைக்கு
قَالَ
கூறினார்
أَوَلَوْ كُنَّا
நாங்கள் இருந்தாலுமா?
كَٰرِهِينَ
வெறுப்பவர்களாக

Qaalal mala ul lazeenas takbaroo min qawmihee lanukhrijannaka yaa Shu'aibu wallazeena aamanoo ma'aka min qaryatinaaa aw lata'oo dunna fee millatinaa; qaala awa law kunnaa kaariheen

(ஷுஐப் நபியை நாம் நம்முடைய தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) "ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்களுடைய மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து துரத்தி விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி "உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?" என்று கேட்டார்.

Tafseer

قَدِ ٱفْتَرَيْنَا
நாங்கள் இட்டுக்கட்டிவிடுவோம்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
كَذِبًا
பொய்யை
إِنْ عُدْنَا
நாங்கள் திரும்பினால்
فِى مِلَّتِكُم
உங்கள் கொள்கைக்கு
بَعْدَ
பின்னர்
إِذْ
போது
نَجَّىٰنَا
பாதுகாத்தான்/ எங்களை
ٱللَّهُ
அல்லாஹ்
مِنْهَاۚ
அதிலிருந்து
وَمَا يَكُونُ
ஆகாது/எங்களுக்கு
أَن نَّعُودَ
நாங்கள் திரும்புவது
فِيهَآ
அதில்
إِلَّآ
தவிர
أَن يَشَآءَ
நாடியே
ٱللَّهُ
அல்லாஹ்
رَبُّنَاۚ
எங்கள் இறைவனாகிய
وَسِعَ
விசாலமானவன்
رَبُّنَا
எங்கள் இறைவன்
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்விட
عِلْمًاۚ
ஞானத்தால்
عَلَى
மீதே
ٱللَّهِ
அல்லாஹ்வின்
تَوَكَّلْنَاۚ
நம்பிக்கைவைத்தோம்
رَبَّنَا
எங்கள் இறைவா
ٱفْتَحْ
தீர்ப்பளி(முடிவுசெய்)
بَيْنَنَا
எங்களுக்கிடையில்
وَبَيْنَ
இன்னும் இடையில்
قَوْمِنَا
எங்கள் சமுதாயத்திற்கு
بِٱلْحَقِّ
நியாயமாக
وَأَنتَ
நீ
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلْفَٰتِحِينَ
தீர்ப்பளிப்பவர்களில்

Qadif tarainaa 'alal laahi kaziban in 'udnaa fee millatikum ba'da iz najjaanal laahu minhaa; wa maa yakoonu lanaaa an na'ooda feehaaa illaaa ai yashaaa'al laahu Rabbunaa; wasi'a Rabbunaa kulla shai'in 'ilmaa; 'alal laahi tawakkalnaa; Rabbanaf tah bainanaa wa baina qawminaa bilhaqqi wa Anta khairul faatiheen

(அன்றி) "உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்" (என்றும் கூறி, இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்" (என்றும் பிரார்த்தித்தார்.)

Tafseer

وَقَالَ
கூறினார்(கள்)
ٱلْمَلَأُ
தலைவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
مِن قَوْمِهِۦ
அவருடைய சமுதாயத்தில்
لَئِنِ ٱتَّبَعْتُمْ
நீங்கள் பின்பற்றினால்
شُعَيْبًا
ஷுஐபை
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
إِذًا لَّخَٰسِرُونَ
அப்போது/நஷ்டவாளிகள்தான்

Wa qaalal mala ul lazeena kafaroo min qawmihee la'init taba'tum Shu'aiban innakum izal lakhaasiroon

(ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்" என்று கூறினார்கள்.

Tafseer