Skip to main content

قَالَ
கூறினார்
قَدْ وَقَعَ
நிகழ்ந்து விட்டது
عَلَيْكُم
உங்கள் மீது
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
رِجْسٌ
வேதனை
وَغَضَبٌۖ
இன்னும் கோபம்
أَتُجَٰدِلُونَنِى
தர்க்கிக்கிறீர்களா?/என்னுடன்
فِىٓ أَسْمَآءٍ
பெயர்களில்
سَمَّيْتُمُوهَآ
பெயர் வைத்தீர்கள்/அவற்றை
أَنتُمْ
நீங்களும்
وَءَابَآؤُكُم
இன்னும் மூதாதைகள் உங்கள்
مَّا نَزَّلَ
இறக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
بِهَا
அதற்கு
مِن سُلْطَٰنٍۚ
ஓர் ஆதாரத்தை
فَٱنتَظِرُوٓا۟
ஆகவே, எதிர்பாருங்கள்
إِنِّى
நிச்சயமாக நான்
مَعَكُم
உங்களுடன்
مِّنَ ٱلْمُنتَظِرِينَ
எதிர்பார்ப்பவர்களில்

Qaala qad waqa'a alaikum mir Rabbikum rijsunw wa ghadab, atujaadiloonanee feee asmaaa'in sammaitumoohaaa antum wa aabaaa'ukum maa nazzalal laahu bihaa min sultaan; fantazirooo innee ma'akum minal muntazireen

அதற்கவர் "உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் (உங்களுக்கு விதிக்கப்பட்டுவிட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் உங்கள் முன்னோர்களும் (கடவுள்களென) வைத்துக் கொண்டவற்றின் (வெறும்) பெயர்களைப் பற்றியா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கின்றீர்கள்? அதற்கு யாதொரு ஆதாரத்தையும் அல்லாஹ் (உங்களுக்கு) இறக்கி வைக்கவில்லை. ஆகவே, (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்" என்று கூறினார்.

Tafseer

فَأَنجَيْنَٰهُ
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
مَعَهُۥ
அவருடன்
بِرَحْمَةٍ
கருணையினால்
مِّنَّا
நமது
وَقَطَعْنَا
இன்னும் அறுத்தோம்
دَابِرَ
வேரை
ٱلَّذِينَ
எவர்களின்
كَذَّبُوا۟
பொய்ப்பித்த
بِـَٔايَٰتِنَاۖ
நம் வசனங்களை
وَمَا كَانُوا۟
இன்னும் அவர்கள் இருக்கவில்லை
مُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Fa anjainaahu wallazeena ma'ahoo birahmatim minnaa wa qata'naa daabiral lazeena kazzaboo bi Aayaatinaa wa maa kaanoo mu'mineen

ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டு நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, நம்பிக்கை கொள்ளாதிருந்த வர்களை வேரறுத்து விட்டோம்.

Tafseer

وَإِلَىٰ ثَمُودَ
‘ஸமூது’க்கு
أَخَاهُمْ
அவர்களுடைய சகோதரர்
صَٰلِحًاۗ
ஸாலிஹை
قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا لَكُم
உங்களுக்கில்லை
مِّنْ إِلَٰهٍ
வணங்கப்படும் ஒரு கடவுள்
غَيْرُهُۥۖ
அவனையன்றி
قَدْ جَآءَتْكُم
வந்து விட்டது/உங்களிடம்
بَيِّنَةٌ
ஓர் அத்தாட்சி
مِّن
இருந்து
رَّبِّكُمْۖ
உங்கள் இறைவன்
هَٰذِهِۦ
இது
نَاقَةُ
ஒட்டகம்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
لَكُمْ
உங்களுக்கு
ءَايَةًۖ
ஓர் அத்தாட்சியாக
فَذَرُوهَا
ஆகவே, விட்டு விடுங்கள்/அதை
تَأْكُلْ
அது மேயும்
فِىٓ أَرْضِ
பூமியில்
ٱللَّهِۖ
அல்லாஹ்வுடைய
وَلَا تَمَسُّوهَا
அதை தொடாதீர்கள்
بِسُوٓءٍ
தீமையைக் கொண்டு
فَيَأْخُذَكُمْ
பிடிக்கும்/உங்களை
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தும்

Wa ilaa Samooda akhaahum Saalihaa; qaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuhoo qad jaaa'atkum baiyinatum mir Rabbikum haazihee naaqatul laahi lakum Aayatan fazaroohaa taakul feee ardil laahi wa laa tamassoohaa bisooo'in fa yaakhuzakum 'azaabun aleem

"ஸமூத்" (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் "ஸாலிஹை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத் தவிர வேறு இறைவனில்லை. (இதற்காக) உங்கள் இறைவனிடம் இருந்து தெளிவான ஓர் அத்தாட்சியும் உங்களிடம் வந்திருக்கின்றது. இது அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். (இது) உங்களுக்கோர் அத்தாட்சியாகவும் இருக்கின்றது. ஆகவே, அதனை அல்லாஹ் வுடைய பூமியில் (எங்கும் தடையின்றி தாராளமாக) மேய விடுங்கள். அதற்கு எத்தகைய தீங்கும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்.

Tafseer

وَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
إِذْ جَعَلَكُمْ
சமயம்/ஆக்கினான்/உங்களை
خُلَفَآءَ
பிரதிநிதிகளாக
مِنۢ بَعْدِ
பின்னர்
عَادٍ
‘ஆது’க்கு
وَبَوَّأَكُمْ
இன்னும் தங்கவைத்தான்/உங்களை
فِى ٱلْأَرْضِ
பூமியில்
تَتَّخِذُونَ
ஆக்கிகொள்கிறீர்கள்
مِن سُهُولِهَا
அதன் சமவெளிகளில்
قُصُورًا
மாளிகைகளை
وَتَنْحِتُونَ
இன்னும் குடைந்து கொள்கிறீர்கள்
ٱلْجِبَالَ
மலைகளில்
بُيُوتًاۖ
வீடுகளை
فَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
ءَالَآءَ
அருட்கொடைகளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَا تَعْثَوْا۟
அளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مُفْسِدِينَ
விஷமிகளாக

Wazkkurooo iz ja'alakum khulafaaa'a mim ba'di 'Aadinw wa bawwa akum fil ardi tattakhizoona min suhoolihaa qusooranw wa tanhitoonal jibaala buyootan fazkurooo aalaaa'al laahi wa laa ta'saw fil ardi mufsideen

"(அன்றி) "ஆத்" (என்னும்) மக்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் உங்களைக் குடியேறச் செய்து (அதற்கு) உங்களை அதிபதிகளாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்தும் வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள்; அன்றி பூமியில் விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்" (என்றும் கூறினார்.)

Tafseer

قَالَ
கூறினார்(கள்)
ٱلْمَلَأُ
தலைவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
ٱسْتَكْبَرُوا۟
பெருமையடித்தனர்
مِن قَوْمِهِۦ
அவருடைய சமுதாயத்தில்
لِلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
எவர்களுக்கு/பலவீனர்களாக கருதப்பட்டனர்
لِمَنْ
எவருக்கு
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
مِنْهُمْ
அவர்களில்
أَتَعْلَمُونَ
அறிவீர்களா?
أَنَّ صَٰلِحًا
நிச்சயமாக ஸாலிஹ்
مُّرْسَلٌ
அனுப்பப்பட்டவர்
مِّن رَّبِّهِۦۚ
தன் இறைவனிடமிருந்து
قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
بِمَآ
எதைக் கொண்டு
أُرْسِلَ
அனுப்பப்பட்டார்
بِهِۦ
அதைக் கொண்டு
مُؤْمِنُونَ
நம்பிக்கை கொண்டவர்கள்

Qaalal mala ul lazeenas takbaroo min qawmihee lillazeenas tud'ifoo liman aamana minhum ata'almoona anna Saaliham mursalum mir Rabbih; qaalooo innaa bimaaa ursila bihee mu'minoon

அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி "நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள் "நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கின்றோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
ٱسْتَكْبَرُوٓا۟
பெருமையடித்தனர்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
بِٱلَّذِىٓ
எதைக்கொண்டு
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டீர்கள்
بِهِۦ
அதைக் கொண்டு
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்

Qaalal lazeenas takbarooo innaa billazeee aamanntum bihee kaafiroon

அதற்கு கர்வம்கொண்ட அவர்கள் (அந்த நம்பிக்கை யாளர்களை நோக்கி) "நீங்கள் நம்பியவைகளை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறியதுடன்,

Tafseer

فَعَقَرُوا۟
ஆகவே அறுத்தனர்
ٱلنَّاقَةَ
பெண் ஒட்டகத்தை
وَعَتَوْا۟
இன்னும் மீறினர்
عَنْ أَمْرِ
கட்டளையை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
وَقَالُوا۟
இன்னும் கூறினர்
يَٰصَٰلِحُ
ஸாலிஹே
ٱئْتِنَا
வருவீராக/எங்களிடம்
بِمَا
எதைக் கொண்டு
تَعِدُنَآ
அச்சுறுத்துகிறீர்/எங்களை
إِن كُنتَ
நீர் இருந்தால்
مِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில்

Fa'aqarun naaqata wa'ataw 'an amri Rabbihim wa qaaloo yaa Saalihu' tinaa bimaa ta'idunaaa in kunta minal mursaleen

தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ்) நபியை நோக்கி) "ஸாலிஹே! மெய்யாகவே நீங்கள் இறைவனுடைய தூதர்களில் ஒருவராக இருந்தால் நீங்கள் அச்சமூட்டும் அ(ந்)த (வேத)னை(யை) எங்களிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

فَأَخَذَتْهُمُ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
ٱلرَّجْفَةُ
பயங்கர சப்தம்
فَأَصْبَحُوا۟
காலையை அடைந்தனர்
فِى دَارِهِمْ
தங்கள் பூமியில்
جَٰثِمِينَ
இறந்தவர்களாக

Fa akhazat humur rajftu fa asbahoo fee daarihim jaasimmeen

ஆகவே (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர்.

Tafseer

فَتَوَلَّىٰ
திரும்பினார்
عَنْهُمْ
அவர்களை விட்டு
وَقَالَ
இன்னும் கூறினார்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
لَقَدْ أَبْلَغْتُكُمْ
திட்டவட்டமாக/ எடுத்துரைத்தேன்/உங்களுக்கு
رِسَالَةَ
தூதை
رَبِّى
என் இறைவனின்
وَنَصَحْتُ
உபதேசித்தேன்
لَكُمْ وَلَٰكِن
உங்களுக்கு/எனினும்
لَّا تُحِبُّونَ
நீங்கள் நேசிப்பதில்லை
ٱلنَّٰصِحِينَ
உபதேசிப்பவர்களை

Fa tawalla 'anhum wa qaala yaa qawmi laqad ablaghtukum Risaalata Rabbee wa nasahtu lakum wa laakil laa tuhibboonan naasiheen

(அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக் கொண்டு (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை" என்று கூறினார்.

Tafseer

وَلُوطًا
இன்னும் லூத்தை
إِذْ
சமயம்
قَالَ
கூறினார்
لِقَوْمِهِۦٓ
தம் சமுதாயத்திற்கு
أَتَأْتُونَ
வருகிறீர்களா?
ٱلْفَٰحِشَةَ
மானக்கேடானதிற்கு
مَا سَبَقَكُم
முந்தவில்லை/உங்களை
بِهَا
இதற்கு
مِنْ أَحَدٍ
ஒருவருமே
مِّنَ ٱلْعَٰلَمِينَ
உலகத்தாரில்

Wa Lootan iz qaala liqawmiheee ataatoonal faahishata maa sabaqakum bihaa min ahadim minal 'aalameen

லூத்தையும் (நம்முடைய தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பி வைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி "உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கின்றீர்கள்?

Tafseer