Kallaaa izaaa dukkatil ardu dakkan dakka
ஆகவே, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,
Wa jaaa'a Rabbuka wal malaku saffan saffaa
உங்களது இறைவனும் வருவான். மலக்குகளும் அணி அணியாக வருவார்கள்.
Wa jeee'a yawma'izim bi jahannnam; Yawma 'iziny yatazakkarul insaanu wa annaa lahuz zikraa
அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அச்சமயம் (உதயமாகும்) அறிவால் அவனுக்கு என்ன பயன்?
Yaqoolu yaa laitanee qaddamtu lihayaatee
"என்னுடைய வாழ்க்கையில் நான் (யாதொரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டாமா" என்று புலம்புவான்.
Fa Yawma izil laa yu'azzibu 'azaabahooo ahad
அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)
Wa laa yoosiqu wasaaqa hooo ahad
(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)
Yaaa ayyatuhan nafsul mutma 'innah
(எனினும், அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே!
Irji'eee ilaa Rabbiki raadiyatam mardiyyah
நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்)
Fadkhulee fee 'ibaadee
"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து,
Wadkhulee jannatee
என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).