Skip to main content

وَبَرَزُوا۟
வெளிப்படுவார்கள்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு முன்
جَمِيعًا
அனைவரும்
فَقَالَ
கூறுவார்(கள்)
ٱلضُّعَفَٰٓؤُا۟
பலவீனர்கள்
لِلَّذِينَ
எவர்களுக்கு
ٱسْتَكْبَرُوٓا۟
பெருமையடித்தனர்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
كُنَّا
இருந்தோம்
لَكُمْ
உங்களை
تَبَعًا
பின்பற்றுபவர்களாக
فَهَلْ أَنتُم
ஆகவே ?/நீங்கள்
مُّغْنُونَ
தடுப்பீர்கள்
عَنَّا
எங்களை விட்டு
مِنْ عَذَابِ
வேதனையிலிருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مِن شَىْءٍۚ
எதையும்
قَالُوا۟
கூறினர்
لَوْ هَدَىٰنَا
வழிகாட்டினால்
ٱللَّهُ
அல்லாஹ்
لَهَدَيْنَٰكُمْۖ
வழிகாட்டுவோம் உங்களுக்கு
سَوَآءٌ
சமமே
عَلَيْنَآ
நம் மீது
أَجَزِعْنَآ
நாம் பதட்டப்பட்டால் என்ன?
أَمْ
அல்லது
صَبَرْنَا
சகித்தோம்
مَا لَنَا
இல்லை/நமக்கு
مِن
அறவே
مَّحِيصٍ
தப்புமிடம்

Wa barazoo lillaahi jamee'an faqaalad du'afaaa'u lillazeenas takbarooo innaa kunnaa lakum taba'an fahal antum mughnoona 'annaa min 'azaabil laahi min shai'; qaaloo law hadaanal laahu lahadai naakum sawaaa'un 'alainaaa ajazi'naa am sabarnaa maa lanaa mim mahees

(மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீன மானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாளிகளென) பெருமை யடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி "நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?" என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு யாதொரு வழி வைத்திருந்தால் (அதனை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப் பற்றி) நாங்கள் பதைபதைத்துத் துடிதுடிப்பதும் அல்லது (அதனைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கின்றது. (இவ்வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு யாதொரு வழியும் இல்லையே!" என்று புலம்புவார்கள்.

Tafseer

وَقَالَ
கூறுவான்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
لَمَّا قُضِىَ
முடிக்கப்பட்டபோது
ٱلْأَمْرُ
காரியம்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
وَعَدَكُمْ
வாக்களித்தான் உங்களுக்கு
وَعْدَ ٱلْحَقِّ
வாக்கை/ உண்மையானது
وَوَعَدتُّكُمْ
நான் வாக்களித்தேன்/உங்களுக்கு
فَأَخْلَفْتُكُمْۖ
நான் வஞ்சித்தேன்/உங்களை
وَمَا كَانَ
இல்லை
لِىَ
எனக்கு
عَلَيْكُم مِّن
அறவே/உங்கள் மீது
سُلْطَٰنٍ
அதிகாரம்
إِلَّآ أَن
எனினும்/உங்களை அழைத்தேன்
فَٱسْتَجَبْتُمْ
பதில் தந்தீர்கள்
لِىۖ
எனக்கு
فَلَا تَلُومُونِى
ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்
وَلُومُوٓا۟
நிந்தியுங்கள்
أَنفُسَكُمۖ
உங்களையே
مَّآ أَنَا۠
நான் இல்லை
بِمُصْرِخِكُمْ
உங்களுக்கு உதவுபவனாக
وَمَآ أَنتُم
இல்லை/நீங்கள்
بِمُصْرِخِىَّۖ
உதவுபவர்களாக/எனக்கு
إِنِّى
நிச்சயமாக நான்
كَفَرْتُ
நிராகரித்தேன்
بِمَآ أَشْرَكْتُمُونِ
நீங்கள் இணை ஆக்கியதை/ என்னை
مِن قَبْلُۗ
முன்னரே
إِنَّ
நிச்சயமாக
ٱلظَّٰلِمِينَ
அணியாயக்காரர்கள்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Wa qaalash Shaitaanu lammaa qudiyal amru innal laaha wa'adakum wa'dal haqqi wa wa'attukum faakhlaftukum wa maa kaana liya 'alaikum min sultaanin illaaa an da'awtukum fastajabtum lee falaa taloomoonee wa loomooo anfusakum maaa ana bimusrikhikum wa maaa antum bimusrikhiyya innee kafartu bimaaa ashraktumooni min qabl; innaz zaalimeena lahum azaabun aleem

(இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.) நானும் உங்களுக்கு (ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; "நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்" என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களை நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணை ஆக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான்.

Tafseer

وَأُدْخِلَ
புகுத்தப்படுவார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
فِيهَا
அதில்
بِإِذْنِ
அனுமதிப்படி
رَبِّهِمْۖ
தங்கள் இறைவன்
تَحِيَّتُهُمْ
அவர்களின் முகமன்
فِيهَا
அதில்
سَلَٰمٌ
ஸலாம்

Wa udkhilal lazeena aamanoo wa 'amilus saalihaati Jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa bi izni Rabbihim tahiyyatuhum feeha salaam

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். தங்கள் இறைவனின் கட்டளைப்படி அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். அவர்களில் (ஒருவர் மற்றொருவரை நோக்கி "உங்களுக்கு தொடர்ந்து) ஈடேற்றம் உண்டாவதாகுக!" என்று முகமன் கூறுவார்கள்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
كَيْفَ
எவ்வாறு?
ضَرَبَ
விவரித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَثَلًا
ஓர் உதாரணத்தை
كَلِمَةً
ஒரு வாக்கியத்திற்கு
طَيِّبَةً
நல்லது
كَشَجَرَةٍ
ஒரு மரத்திற்கு ஒப்பாக
طَيِّبَةٍ أَصْلُهَا
நல்லது/அதன் வேர்
ثَابِتٌ
உறுதியானது
وَفَرْعُهَا
இன்னும் அதன் கிளை
فِى ٱلسَّمَآءِ
வானத்தில்

Alam tara kaifa darabal laahu masalan kalimatan taiyibatan kashajaratin taiyibatin asluhaa saabitunw wa far'uhaa fis samaaa'

(நபியே! "தவ்ஹீத் கலிமா" என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது.

Tafseer

تُؤْتِىٓ
கொடுக்கிறது
أُكُلَهَا
தன் கனிகளை
كُلَّ حِينٍۭ
எல்லாக் காலத்திலும்
بِإِذْنِ
அனுமதி கொண்டு
رَبِّهَاۗ
தன் இறைவனின்
وَيَضْرِبُ
இன்னும் விவரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْأَمْثَالَ
உதாரணங்களை
لِلنَّاسِ
மனிதர்களுக்கு
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக

Tu'teee ukulahaa kulla heenim bi izni Rabbihaa; wa yadribul laahul amsaala linnaasi la'allahum yatazak karoon

அது (பருவ காலத்தில் மட்டுமன்றி இறைவனின் அருளைக் கொண்டு எக்காலத்திலும் கனிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு, அவர்களுக்கு (இதனை) அல்லாஹ் உதாரணம் ஆக்குகிறான்.

Tafseer

وَمَثَلُ
இன்னும் உதாரணம்
كَلِمَةٍ
வாசகத்திற்கு
خَبِيثَةٍ
கெட்டது
كَشَجَرَةٍ
மரத்திற்கு ஒப்பாகும்
خَبِيثَةٍ
கெட்டது
ٱجْتُثَّتْ
அறுபட்டது
مِن
இருந்து
فَوْقِ
மேல்
ٱلْأَرْضِ
பூமியின்
مَا لَهَا
இல்லை/அதற்கு
مِن
அறவே
قَرَارٍ
எந்த உறுதி

Wa masalu kalimatin khabeesatin kashajaratin khabee satinij tussat min fawqil ardi maa lahaa min qaraar

(நிராகரிப்பவர்களின் குஃப்ரு, ஷிர்க்கான) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம்: பூமியில் இருந்த வேர்கள் அறுபட்டு (உறுதியின்றி) நிற்கும் (பட்டுப்போன ஒரு) கெட்ட மரத்திற்கு ஒப்பாகும்; அது நிலைத்திருக்காது.

Tafseer

يُثَبِّتُ
உறுதிப்படுத்துகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ
எவர்களை
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
بِٱلْقَوْلِ
சொல்லைக் கொண்டு
ٱلثَّابِتِ
உறுதியானது
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
ٱلدُّنْيَا
உலக(ம்)
وَفِى ٱلْءَاخِرَةِۖ
இன்னும் மறுமையில்
وَيُضِلُّ
வழிகெடுக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلظَّٰلِمِينَۚ
அநியாயக்காரர்கள்
وَيَفْعَلُ
இன்னும் செய்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَا يَشَآءُ
தான் நாடுவதை

Yusabbitul laahul lazeena aamanoo bilqawlis saabiti fil hayaatid dunyaa wa fil Aakhirati wa yudillul laahuz zaalimeen; wa yaf'alul laahu maa yashaaa'

மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் ("கலிமா தையிப்" என்னும்) உறுதிமிக்க இந்த வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்துகிறான். அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அல்லாஹ் விட்டு விடுகிறான்; அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (அதனைத் தடை செய்ய எவராலும் முடியாது.)

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
إِلَى
பக்கம்
ٱلَّذِينَ
எவர்கள்
بَدَّلُوا۟
மாற்றினார்கள்
نِعْمَتَ
அருளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كُفْرًا
நிராகரிப்பால்
وَأَحَلُّوا۟
இன்னும் தங்க வைத்தார்கள்
قَوْمَهُمْ
தங்கள் சமுதாயத்தை
دَارَ ٱلْبَوَارِ
அழிவு இல்லத்தில்

Alam tara ilal lazeena baddaloo ni'matal laahi kufranw wa ahalloo qawmahum daaral bawaar

(நபியே!) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பைக் கொண்டு மாற்றி, தங்கள் மக்களையும் அழிவுக்கிடங்கில் இறக்கி விட்டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா?

Tafseer

جَهَنَّمَ يَصْلَوْنَهَاۖ
நரகம்/ அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்
وَبِئْسَ
மிகக் கெட்டது
ٱلْقَرَارُ
தங்குமிடத்தால்

Jahannama yaslawnahaa wa bi'sal qaraar

அவர்கள் நரகத்தைத்தான் வந்தடைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.

Tafseer

وَجَعَلُوا۟
இன்னும் ஏற்படுத்தினர்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
أَندَادًا
இணைகளை
لِّيُضِلُّوا۟
அவர்கள் வழிகெடுப்பதற்காக
عَن سَبِيلِهِۦۗ
அவனுடைய பாதையிலிருந்து
قُلْ
கூறுவீராக
تَمَتَّعُوا۟
சுகமனுபவியுங்கள்
فَإِنَّ
நிச்சயமாக
مَصِيرَكُمْ
உங்கள் மீட்சி
إِلَى
பக்கம்
ٱلنَّارِ
நரகத்தின்

Wa ja'aloo lillaahi andaadal liyudilloo 'an sabeelih; qul tamatta'oo fa innaa maseerakum ilan Naar

அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பி விடும் பொருட்டு (பல பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "(இவ்வுலகில் சிறிது காலம்) நீங்கள் சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (முடிவில்) நிச்சயமாக நீங்கள் சேருமிடம் நரகம்தான்.

Tafseer