Alhamdu lillaahil lazeee anzala 'alaa 'abdihil kitaaba wa lam yaj'al lahoo 'iwajaa
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை.
Qaiyimal liyunzira baasan shadeedam mil ladunhu wa yubashshiral mu'mineenal lazeena ya'maloonas saalihaati anna lahum ajran hasanaa
இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ் வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர் களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதனை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சுவனபதி) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்.)
Maakiseena feehi abadaa
(அச்சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
Wa yunziral lazeena qaalut takhazal laahu waladaa
அன்றி, அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது.
Maa lahum bihee min 'ilminw wa laa li aabaaa'ihim; kaburat kalimatan takhruju min afwaahihim; iny yaqooloona illaa kazibaa
அவர்களுக்கும் சரி; அவர்களுடைய மூதாதைகளுக்கும் சரி. இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையேயன்றி (இவ்வாறு) இவர்கள் கூறவில்லை.
Fala'allaka baakhi'un nafsaka 'alaaa aasaarihim illam yu;minoo bihaazal hadeesi asafaa
(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளா விட்டால் அதற்காக நீங்கள் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உங்களது உயிரை அழித்துக் கொள்வீரோ! (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.)
Innaa ja'alnaa ma 'alal ardi zeenatal lahaa linabluwahum ayyuhum ahsanu 'amalaa
பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகவே.
Wa innaa lajaa 'iloona maa 'alaihaa sa'aeedan juruzaa
(ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்ட வெளியாக்கி விடுவோம்.
Am hasibta anna Ashaabal Kahfi war Raqeemi kaanoo min Aayaatinaa 'ajabaa
(நபியே! "அஸ்ஹாபுல் கஹ்ஃப்" என்னும் குகையுடையவர் களைப் பற்றி யூதர்கள் உங்களிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீர்களோ! (அவர்களின் சரித்திரத்தை உங்களுக்கு நாம் கூறுகிறோம்.)
Iz awal fityatu ilal Kahfi faqaaloo Rabbanaaa aatinaa mil ladunka rahmatanw wa haiyi' lanaa min amrinaa rashadaa
(அவர்கள்) ஒரு சில வாலிபர்கள் அவர்கள் குகையினுள் சென்றபொழுது "எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள்.
القرآن الكريم: | الكهف |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Kahf |
ஸூரா: | 18 |
வசனம்: | 110 |
Total Words: | 1570 |
Total Characters: | 6360 |
Number of Rukūʿs: | 12 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 69 |
Starting from verse: | 2140 |