Skip to main content

فَضَرَبْنَا
அமைத்தோம்
عَلَىٰٓ
மீது
ءَاذَانِهِمْ
காதுகள்/அவர்களுடைய
فِى ٱلْكَهْفِ
குகையில்
سِنِينَ
ஆண்டுகள்
عَدَدًا
எண்ணப்பட்ட

Fadarabnaa 'alaaa aazaanihim fil Kahfi seneena 'adadaa

ஆதலால், அக்குகையில் பல வருடங்கள் (நித்திரை செய்யும் படி) அவர்களுடைய காதுகளைத் தட்டிக் கொடுத்தோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
بَعَثْنَٰهُمْ
எழுப்பினோம் / அவர்களை
لِنَعْلَمَ
நாம் அறிவதற்காக
أَىُّ
எந்த, யார்?
ٱلْحِزْبَيْنِ
இரு பிரிவுகளில்
أَحْصَىٰ
மிக சரியாக கணக்கிடுபவர்
لِمَا لَبِثُوٓا۟
அவர்கள் தங்கியதை
أَمَدًا
காலத்தை,எல்லையை

Summa ba'asnaahum lina'lama ayyul hizbaini ahsaa limaa labisooo amadaa

அவர்கள் அக்குகையில் இருந்த காலத்தை (அவர்களில் உள்ள) இரு வகுப்பாரில் எவர்கள் நன்கறிகிறார்கள் என்பதை நாம் (மனிதர்களுக்கு) அறிவிக்கும் பொருட்டு (நித்திரையிலிருந்து) அவர்களை எழுப்பினோம்.

Tafseer

نَّحْنُ
நாம்
نَقُصُّ
விவரிக்கிறோம்
عَلَيْكَ
உமக்கு
نَبَأَهُم
அவர்களின்செய்தியை
بِٱلْحَقِّۚ
உண்மையுடன்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
فِتْيَةٌ
வாலிபர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனை
وَزِدْنَٰهُمْ
இன்னும் அதிகப்படுத்தினோம்/அவர்களுக்கு
هُدًى
நேர்வழியை

Nahnu naqussu 'alaika naba ahum bilhaqq; innahum fityatun aamanoo bi Rabbihim wa zidnaahum hudaa

(நபியே!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உங்களுக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கை கொண்ட வாலிபர்களாவர். (ஆகவே) மென்மேலும் நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம்.

Tafseer

وَرَبَطْنَا
இன்னும் உறுதிபடுத்தினோம்
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்களை
إِذْ قَامُوا۟
போது/நின்றனர்
فَقَالُوا۟
இன்னும் கூறினர்
رَبُّنَا
எங்கள் இறைவன்
رَبُّ
இறைவன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
لَن نَّدْعُوَا۟
அழைக்கவே மாட்டோம்
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
إِلَٰهًاۖ
(வேறு) ஒரு கடவுளை
لَّقَدْ قُلْنَآ
திட்டமாக கூறி விடுவோம்
إِذًا
அப்போது
شَطَطًا
எல்லை மீறிய பொய்யை

Wa rabatnaa 'alaa quloo bihim iz qaamoo faqaaloo Rabbunaa Rabbus samaawaati wal ardi lan nad'uwa min dooniheee ilaahal laqad qulnaaa izan shatataa

அன்றி, அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று "வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனையன்றி (வேறொருவரையும் வணக்கத்திற்குரியவன் என)நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்" என்றார்கள்.

Tafseer

هَٰٓؤُلَآءِ
இவர்கள்
قَوْمُنَا
மக்கள்/எங்கள்
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
ءَالِهَةًۖ
பல கடவுள்களை
لَّوْلَا يَأْتُونَ
அவர்கள் வரவேண்டாமா?
عَلَيْهِم
அவற்றின் மீது
بِسُلْطَٰنٍۭ
ஆதாரத்தைக் கொண்டு
بَيِّنٍۖ
தெளிவானது
فَمَنْ
ஆகவே, யார்
أَظْلَمُ
மகா தீயவன்
مِمَّنِ
எவனைவிட
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
كَذِبًا
பொய்யை

Haaa'ulaaa'i qawmunat takhazoo min dooniheee aalihatal law laa yaatoona 'alaihim bisultaanim baiyin; faman azlamu mimmaniftaraa 'alal laahi kazibaa

அன்றி, "நம்முடைய இந்த மக்கள் அவனையன்றி வேறு இறைவனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டு வரவேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட அநியாயக்காரன் யார்?" (என்றார்கள்.)

Tafseer

وَإِذِ ٱعْتَزَلْتُمُوهُمْ
நீங்கள் விலகியபோது/அவர்களை
وَمَا يَعْبُدُونَ
இன்னும் எவை/வணங்குகின்றார்கள்
إِلَّا
தவிர
ٱللَّهَ
அல்லாஹ்
فَأْوُۥٓا۟
ஒதுங்குங்கள்
إِلَى ٱلْكَهْفِ
குகையில்
يَنشُرْ
விரிப்பான்
لَكُمْ
உங்களுக்கு
رَبُّكُم
உங்கள் இறைவன்
مِّن رَّحْمَتِهِۦ
தன் அருளில்
وَيُهَيِّئْ
இன்னும் ஏற்படுத்துவான்
لَكُم
உங்களுக்கு
مِّنْ أَمْرِكُم
உங்கள் காரியத்தில்
مِّرْفَقًا
இலகுவை

Wa izi'tazal tumoohum wa maa ya'budoona illal laaha faawooo ilal kahfi yanshur lakum Rabbukum mir rahmatihee wa yuhaiyi' lakum min amrikum mirfaqa

அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவைகளிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) இக்குகைக்குள் சென்றுவிடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து, (வாழ்வதற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்து விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்.)

Tafseer

وَتَرَى
பார்ப்பீர்
ٱلشَّمْسَ
சூரியனை
إِذَا طَلَعَت
அது உதிக்கும்போது
تَّزَٰوَرُ
அது சாயும்
عَن كَهْفِهِمْ
அவர்களின் குகையை விட்டு
ذَاتَ ٱلْيَمِينِ
வலது பக்கமாக
وَإِذَا غَرَبَت
இன்னும் அது மறையும்போது
تَّقْرِضُهُمْ
வெட்டி விடுகிறது/அவர்களை
ذَاتَ ٱلشِّمَالِ
இடது பக்கமாக
وَهُمْ
அவர்கள்
فِى فَجْوَةٍ
விசாலமான பள்ளப்பகுதியில்
مِّنْهُۚ ذَٰلِكَ
அதில்/இது
مِنْ ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
مَن يَهْدِ
எவரை/நேர்வழி செலுத்துகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
فَهُوَ
அவர்
ٱلْمُهْتَدِۖ
நேர்வழி பெற்றவர்
وَمَن
இன்னும் எவரை
يُضْلِلْ
வழிகெடுப்பான்
فَلَن تَجِدَ
காணவே மாட்டீர்
لَهُۥ
அவருக்கு
وَلِيًّا
நண்பனை
مُّرْشِدًا
நல்லறிவு புகட்டுபவர்

Wa tarash shamsa izaa tala'at tazaawaru 'an kahfihim zaatal yameeni wa izaa gharabat taqriduhum zaatash shimaali wa hum fee fajwatim minh; zaalika min Aayaatillaah; mai yahdil laahu fahuwal muhtad, wa mai yudlil falan tajida lahoo waliyyam murshidaa

(நபியே! நீங்கள் அங்கு சென்று பார்ப்பீரானால்) சூரியன் உதிக்கும்போது அவர்கள் (இருக்கும் அக்)குகையின் வலது பக்கத்தில் சாய்வதையும், அது மறையும்போது, அவர்களின் இடது பக்கத்தை கடந்து செல்வதையும் நீங்கள் காண்பீர்கள்! அவர்கள் அதன் விசாலமான இடத்தில் (நிழலில் நித்திரை செய்து கொண்டு) இருக்கின்றனர். இது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன் நேரான வழியில் சென்றே விடுவான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீங்கள் காண மாட்டீர்கள்.

Tafseer

وَتَحْسَبُهُمْ
கருதுவீர்/அவர்களை
أَيْقَاظًا
விழித்தவர்களாக
وَهُمْ
அவர்களோ
رُقُودٌۚ
உறங்குபவர்களாக
وَنُقَلِّبُهُمْ
இன்னும் புரட்டுகிறோம்/அவர்களை
ذَاتَ ٱلْيَمِينِ
வலது பக்கமாக
وَذَاتَ ٱلشِّمَالِۖ
இன்னும் இடது பக்கமாக
وَكَلْبُهُم
அவர்களுடைய நாய்
بَٰسِطٌ
விரித்துள்ளது
ذِرَاعَيْهِ
தன் இரு குடங்கைகளை
بِٱلْوَصِيدِۚ
வாசலில், முற்றத்தில்
لَوِ ٱطَّلَعْتَ
நீர் எட்டிப்பார்த்தால்
عَلَيْهِمْ
அவர்களை
لَوَلَّيْتَ
திரும்பி இருப்பீர்
مِنْهُمْ
அவர்களை விட்டு
فِرَارًا
விரண்டு ஓடுதல்
وَلَمُلِئْتَ
இன்னும் நிரப்பப்பட்டுஇருப்பீர்
مِنْهُمْ
அவர்களின்
رُعْبًا
பயத்தால்

Wa tahsabuhum ayqaazanw wa hum ruqood; wa nuqallibuhum zaatal yameeni wa zaatash shimaali wa kalbuhum baasitun ziraa'ayhi bilwaseed; lawit tala'ta 'alaihim la wallaita minhum firaaranw wa lamuli'ta minhum rubaa

(நபியே! அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்தபோதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீங்கள் எண்ணுவீர்கள். அவர்களை வலப்பக்கமாகவும், இடப் பக்கமாகவும் (மாற்றி மாற்றி) நாம் திருப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது (என்பதை நீங்கள் காண்பீர்கள்). அவர்களை நீங்கள் எட்டிப் பார்த்தால் அவர்களை விட்டு வெருண்டோடுவீர்கள்; திடுக்கமும் (நடுக்கமும்) உங்களைச் சூழ்ந்து கொள்ளும்.

Tafseer

وَكَذَٰلِكَ
அவ்வாறே
بَعَثْنَٰهُمْ
எழுப்பினோம் / அவர்களை
لِيَتَسَآءَلُوا۟
அவர்கள் கேட்டுக் கொள்வதற்காக
بَيْنَهُمْۚ
தங்களுக்கு மத்தியில்
قَالَ
கூறினார்
قَآئِلٌ
கூறுபவர் ஒருவர்
مِّنْهُمْ
அவர்களில்
كَمْ
எத்தனை
لَبِثْتُمْۖ
தங்கினீர்கள்
قَالُوا۟
கூறினர்
لَبِثْنَا
தங்கினோம்
يَوْمًا
ஒரு நாள்
أَوْ
அல்லது
بَعْضَ يَوْمٍۚ
ஒரு நாளின் சில பகுதி
قَالُوا۟
கூறினர்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا لَبِثْتُمْ
நீங்கள் தங்கியதை
فَٱبْعَثُوٓا۟
ஆகவே அனுப்புங்கள்
أَحَدَكُم
உங்களில் ஒருவரை
بِوَرِقِكُمْ
உங்கள் வெள்ளி நாணயத்தைக் கொண்டு
هَٰذِهِۦٓ
இந்த
إِلَى ٱلْمَدِينَةِ
பட்டணத்திற்கு
فَلْيَنظُرْ
அவர் கவனிக்கட்டும்
أَيُّهَآ
அதில் யார்?
أَزْكَىٰ
மிக சுத்தமானவர்
طَعَامًا
உணவால்
فَلْيَأْتِكُم
வரட்டும்/உங்களுக்கு
بِرِزْقٍ
உணவைக் கொண்டு
مِّنْهُ
அவரிடமிருந்து
وَلْيَتَلَطَّفْ
இன்னும் அவர் மதிநுட்பமாக நடக்கட்டும்
وَلَا يُشْعِرَنَّ
இன்னும் உணர்த்தி விட வேண்டாம்
بِكُمْ
உங்களைப் பற்றி
أَحَدًا
ஒருவருக்கும்

Wa kazaalika ba'asnaahum liyatasaaa'aloo bainahum; qaala qaaa'ilum minhum kam labistum qaaloo labisnaa yawman aw ba'da yawm; qaaloo Rabbukum a'almu bimaa labistum fab'asooo ahadakum biwariqikum haazihee ilal madeenati falyanzur ayyuhaaa azkaa ta'aaman falyaatikum birizqim minhu walyatalattaf wa laa yush'iranna bikum ahadaa

அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)" என்று கூறினர். (மற்றவர்கள்) "நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்" என்று கூறி "உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டினத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கின்றது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டினத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும்.

Tafseer

إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
إِن يَظْهَرُوا۟
அவர்கள் அறிந்தால்
عَلَيْكُمْ
உங்களை
يَرْجُمُوكُمْ
ஏசுவார்கள்/உங்களை
أَوْ
அல்லது
يُعِيدُوكُمْ
திருப்பிவிடுவார்கள் உங்களை
فِى مِلَّتِهِمْ
தங்கள் மார்க்கத்திற்கு
وَلَن تُفْلِحُوٓا۟
வெற்றி பெறவே மாட்டீர்கள்
إِذًا
அவ்வாறு நடந்து விட்டால்
أَبَدًا
எப்போதும்

Innahum iny yazharoo 'alaikum yarjumookum aw yu'eedookum fee millatihim wa lan tuflihooo izan abadaa

ஏனென்றால் (ஊரில் வசிக்கும் மக்கள்) உங்களை (இன்னாரென) அறிந்துகொண்டால் நிச்சயமாக அவர்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவார்கள் அல்லது உங்களை தங்களுடைய மார்க்கத்தில் சேர்த்து விடுவார்கள். (சேர்ந்தாலோ) ஒரு காலத்திலும் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்" (என்றார்கள்).

Tafseer