Wa im minkum illaa waa riduhaa; kaana 'alaa Rabbika hatmam maqdiyyaa
அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.
Summa nunajjil lazeenat taqaw wa nazaruz zaalimeena feehaa jisiyyaa
ஆனால், நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்.
Wa izaa tutlaa 'alaihim Aayaatunaa baiyinaatin qaalal lazeena kafaroo lillazeena aamanooo aiyul fareeqaini khairum maqaamanw wa ahsanu nadiyyaa
நிராகரிப்பவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஓரிறை நம்பிக்கையாளர்களை நோக்கி "நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?" என்று கேட்கின்றனர்.
Wa kam ahlaknaa qablahum min qarnin hum ahsanu asaasanw wa ri'yaa
இவர்களைவிட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கின்றோம்.
Qul man kaana fidda laalati falyamdud lahur Rahmaanu maddaa; hattaaa izaa ra aw maa yoo'adoona immal 'azaaba wa immas Saa'ata fasa ya'lamoona man huwa sharrum makaananw wa ad'afu jundaa
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரையில் ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும் அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Wa yazeedul laahul lazeenah tadaw hudaa; wal baaqiyaatus saalihaatu khairun 'inda Rabbika sawaabanw wa khairum maraddaa
நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தாம் உங்கள் இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன.
Afara'aytal lazee kafara bi Aayaatinaa wa qaala la oota yanna maalanw wa waladaa
(நபியே!) நம்முடைய வசனங்களை நிராகரித்தவனை நீங்கள் பார்த்தீர்களா? அவன் ("மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்" என்று கூறுகிறான்.
Attala'al ghaiba amitta khaza'indar Rahmaani 'ahdaa
இவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்துகொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா?
Kallaa; sanaktubu maa yaqoolu wa namuddu lahoo minal 'azaabi maddaa
(இவன் கூறுகிறபடி) அன்று! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக்கொண்டே வருகின்றோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்தி விடுவோம்.
Wa narisuhoo maa yaqoolu wa yaateenaa fardaa
அவன் (தன்னுடையதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவைகளை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான்.