Tabaarakal lazee nazzalal Furqaana 'alaa 'abdihee li yakoona lil'aalameena nazeera
(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது.
Allazee lahoo mulkus samaawaati wal ardi wa lam yattakhiz waladanw wa lam yakul lahoo shareekun filmulki wa khalaqa kulla shai'in faqaddarahoo taqdeeraa
(இவ்வேதத்தை அருளியவன் எத்தகையவனென்றால்,) வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் யாதொரு சந்ததியை எடுத்துக்கொள்ளவும் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு யாதொரு துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவைகளுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன்.
Wattakhazoo min dooniheee aahihatal laa yakhluqoona shai'anw wa hum yukhlaqoona wa laa yamlikoona li anfusihim darranw wa laa naf'anw wa laa yamlikoona mawtanw wa laa hayaatanw wa laa nushooraa
(இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை இறைவனாக எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவைகளோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. ஒன்றையும் அவை படைக்கவில்லை. யாதொரு நன்மையும் தீமையையும் தங்களுக்கே செய்துகொள்ளவும் அவை சக்தியற்றவை. அன்றி, உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ சக்தியற்றவைகளாகவும் இருக்கின்றன.
Wa qaalal lazeena kafarooo in haazaaa illaaa ifkunif taraahu wa a'aanahoo 'alaihi qawmun aakharoona faqad jaaa'oo zulmanw wa zooraa
("திருக்குர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே அன்றி வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்" என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர்.
Wa qaalooo asaateerul awwaleenak tatabahaa fahiya tumlaa 'alaihi bukratanw wa aseelaa
அன்றி "இது முன்னோர்களின் கட்டுக்கதையே! காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதனை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கின்றார்" என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர்.
Qul anzalhul lazee ya'lamus sirra fis samaawaati wal-ard; innahoo kaana Ghafoorar Raheemaa
(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(அவ்வாறன்று.) வானங்களிலும், பூமியிலுள்ள ரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே இதனை இறக்கி வைத்தான். (நீங்கள் மனம் வருந்தி அவனளவில் திரும்பினால்) நிச்சயமாக அவன் (உங்களுடைய இக்குற்றங்களை) மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்."
Wa qaaloo maa li haazar Rasooli yaakulut ta'aama wa yamshee fil aswaaq; law laaa unzila ilaihi malakun fa yakoona ma'ahoo nazeeraa
(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: "இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு மலக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்துகொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே!
Aw yulqaaa ilaihi kanzun aw takoonu lahoo jannatuny yaakulu minhaa; wa qaalaz zaalimoona in tattabi'oona illaa rajulam mas hooraa
அல்லது அவருக்கு யாதொரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய யாதொரு சோலை அவருக்கு இருக்கவேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) அன்றி, இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்று கின்றீர்கள்" என்றும் கூறுகின்றனர்.
Unzur kaifa daraboo lakal amsaala fadalloo falaa yastatee'oona sabeelaa
ஆகவே, (நபியே!) உங்களைப் பற்றி இவ்வக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகின்றார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது.
Tabaarakal lazeee in shaaa'a ja'ala laka khairam min zaalika jannaatin tajree min tahtihal anhaaru wa yaj'al laka qusooraa
(நபியே! உங்களது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவைகளைச் சொந்தமாக்கி மிக்க மேலான சுவனபதியை உங்களுக்குத் தரக்கூடியவன். அவைகளில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உங்களுக்குப் பல மாட மாளிகை களையும் அமைத்து விடுவான்.
القرآن الكريم: | الفرقان |
---|---|
ஸஜ்தா (سجدة): | 60 |
ஸூரா (latin): | Al-Furqan |
ஸூரா: | 25 |
வசனம்: | 77 |
Total Words: | 892 |
Total Characters: | 3730 |
Number of Rukūʿs: | 6 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 42 |
Starting from verse: | 2855 |