Skip to main content

قُلْ
கூறுவீராக!
أَرَءَيْتُمْ
நீங்கள் அறிவியுங்கள்
إِن جَعَلَ
ஆக்கிவிட்டால்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلَّيْلَ
இரவை
سَرْمَدًا
நிரந்தரமானதாக
إِلَىٰ
வரை
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள்
مَنْ
எந்த
إِلَٰهٌ
(வேறு) ஒரு கடவுள்
غَيْرُ ٱللَّهِ
அல்லாஹ்வை அன்றி
يَأْتِيكُم
உங்களுக்கு கொண்டு வருவார்
بِضِيَآءٍۖ
ஒளியை
أَفَلَا تَسْمَعُونَ
செவிமடுக்க மாட்டீர்களா?

Qul ara'aitum in ja'alal laahu 'alaikumul laila sarmadan ilaa Yawmil Qiyaamati man ilaahun ghairul laahi yaa teekum bidiyaaa'in afalaa tasma'oon

(நபியே!) நீங்கள் கேளுங்கள்: "இரவை மறுமை நாள் வரையில் உங்கள் மீது நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கின்றானா?" (இக்கேள்வியை) நீங்கள் செவியுற வேண்டாமா?

Tafseer

قُلْ
கூறுவீராக!
أَرَءَيْتُمْ
நீங்கள் அறிவியுங்கள்
إِن جَعَلَ
ஆக்கிவிட்டால்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلنَّهَارَ
பகலை
سَرْمَدًا
நிரந்தரமாக
إِلَىٰ
வரை
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள்
مَنْ
எந்த
إِلَٰهٌ
(வேறு) ஒரு கடவுள்
غَيْرُ ٱللَّهِ
அல்லாஹ்வை அன்றி
يَأْتِيكُم
உங்களுக்கு கொண்டு வருவான்
بِلَيْلٍ
இரவை
تَسْكُنُونَ فِيهِۖ
அதில் நீங்கள் ஓய்வு எடுக்கின்றீர்கள்
أَفَلَا تُبْصِرُونَ
நீங்கள் பார்க்க மாட்டீர்களா?

Qul ara'aitum in ja'alal laahu 'alaikumun nahaara sarmadan ilaa Yawmil Qiyaamati man ilaahun ghairul laahi yaateekum bilailin taskunoona feehi afalaa tubsiroon

(பின்னும் நபியே!) நீங்கள் கேளுங்கள்: "பகலை இறுதி நாள் வரையில் உங்களுக்கு நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டால், நீங்கள் இளைப்பாறக் கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கின்றானா?" (இதனை) நீங்கள் (படிப்பினை பெறும் கண் கொண்டு) பார்க்க வேண்டாமா?

Tafseer

وَمِن رَّحْمَتِهِۦ
அவன் தனது கருணையினால்
جَعَلَ
ஆக்கினான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
இரவை/இன்னும் பகலை
لِتَسْكُنُوا۟
நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக
فِيهِ
அதில்
وَلِتَبْتَغُوا۟
இன்னும் நீங்கள் தேடுவதற்காக
مِن فَضْلِهِۦ
அவனுடைய அருளை
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Wa mir rahmatihee ja'ala lakumul laila wannahaara litaskunoo feehi wa litabtaghoo min fadlihee wa la'allakum tashkuroon

(அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டுப் பகலையும் உங்களுக்கு அவன் உற்பத்தி செய்திருப்பதற்கு அவன் கிருபைதான் காரணம். இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!

Tafseer

وَيَوْمَ
நாளில்
يُنَادِيهِمْ
அவன் அவர்களை அழைப்பான்
فَيَقُولُ
அவன் கேட்பான்
أَيْنَ
எங்கே?
شُرَكَآءِىَ
எனது இணைகள்
ٱلَّذِينَ كُنتُمْ
எவர்கள்/நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்

Wa Yawma yunaadeehim fa yaqoolu aina shurakaaa'iyal lazeena kuntum tazz'umoon

(நபியே!) அல்லாஹ் அவர்களை (விசாரணைக்காக) அழைத்து, "எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?" என்று கேட்கும் நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.

Tafseer

وَنَزَعْنَا
நாம் கொண்டு வருவோம்
مِن كُلِّ
ஒவ்வொரு
أُمَّةٍ
சமுதாயத்திலிருந்து
شَهِيدًا
ஒரு சாட்சியாளரை
فَقُلْنَا
பிறகு, கூறுவோம்
هَاتُوا۟
கொண்டு வாருங்கள்
بُرْهَٰنَكُمْ
உங்கள் ஆதாரங்களை
فَعَلِمُوٓا۟
அறிந்துகொள்வார்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱلْحَقَّ
உண்மை
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
وَضَلَّ
தவறிவிடும்
عَنْهُم
அவர்களை விட்டு
مَّا كَانُوا۟
அவர்கள் பொய்யாக கற்பனைசெய்து கொண்டிருந்தவை

Wa naza'naa min kulli ummatin shaheedan faqulnaa haatoo burhaanakum fa'alimooo annal haqqa lillaahi wa dalla 'anhum maa kaanoo yaftaroon

ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம்முடைய தூதர்களை) அவர்களுக்கு சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி "என்னை அல்லாதவர்களையும் தெய்வங்களென நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக்கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மையான இறைத் தன்மை அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
قَٰرُونَ
காரூன்
كَانَ
இருந்தான்
مِن قَوْمِ
சமுதாயத்தில்
مُوسَىٰ
மூஸாவின்
فَبَغَىٰ
அநியாயம் புரிந்தான்
عَلَيْهِمْۖ
அவர்கள் மீது
وَءَاتَيْنَٰهُ
அவனுக்கு நாம் கொடுத்தோம்
مِنَ ٱلْكُنُوزِ
பொக்கிஷங்களிலிருந்து
مَآ إِنَّ
எவை/நிச்சயமாக/அவற்றின் சாவிகள்
لَتَنُوٓأُ
சிரமத்தோடு சுமக்கும்
بِٱلْعُصْبَةِ أُو۟لِى
பலமுள்ள கூட்டம்
إِذْ
அந்த சமயத்தை (நினைவு கூறுங்கள்)
قَالَ
கூறினர்
لَهُۥ
அவனுக்கு
قَوْمُهُۥ
அவனுடைய மக்கள்
لَا تَفْرَحْۖ
பெருமிதம் கொள்ளாதே!
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْفَرِحِينَ
பெருமிதப்படுவோரை

Inna Qaaroona kaana min qawmi Moosaa fabaghaaa 'alaihim wa aatainaahu minal kunoozi maaa inna mafaati hahoo latanooo'u bil'usbati ulil quwwati iz qaala lahoo qawmuhoo laa tafrah innal laahaa laa yuhibbul fariheen

காரூன் (என்பவன்) மூஸாவுடைய மக்களிடம் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவைகளின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க கஷ்டத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் "நீ மகிழ்வடைந்துவிடாதே! (பெருமை கொண்டு) மகிழ்வடைபவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை" என்றும்,

Tafseer

وَٱبْتَغِ
தேடிக்கொள்!
فِيمَآ ءَاتَىٰكَ
உமக்கு வழங்கியவற்றில்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلدَّارَ
வீட்டை
ٱلْءَاخِرَةَۖ
மறுமை
وَلَا تَنسَ
மறந்து விடாதே!
نَصِيبَكَ
உனது பங்கை
مِنَ ٱلدُّنْيَاۖ
உலகத்திலிருந்து
وَأَحْسِن
நீ நன்மை செய்!
كَمَآ
போன்று
أَحْسَنَ
நன்மை செய்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَيْكَۖ
உனக்கு
وَلَا تَبْغِ
இன்னும் விரும்பாதே
ٱلْفَسَادَ
கலகம் செய்வதை, குழப்பத்தை
فِى ٱلْأَرْضِۖ
பூமியில்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْمُفْسِدِينَ
குழப்பம் செய்வோரை

Wabtaghi feemaaa aataakal laahud Daaral Aakhirata wa laa tansa naseebaka minad dunyaa wa ahsin kamaaa ahsanal laahu ilaika wa laa tabghil fasaada fil ardi innal laaha laa yuhibbul mufsideen

"(உன்னிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்களித்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக் கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டது தான்) உன்னுடைய பாகம் (என்பதை) நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதனை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே! ஏனென்றால், விஷமிகளை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை" என்றும் கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
إِنَّمَآ أُوتِيتُهُۥ
இதை நான் வழங்கப்பட்டதெல்லாம்
عَلَىٰ عِلْمٍ
அறிவினால்தான்
عِندِىٓۚ
என்னிடம் உள்ள
أَوَلَمْ يَعْلَمْ
அவன் அறியவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
قَدْ أَهْلَكَ
அழித்திருக்கிறான் என்பதை
مِن قَبْلِهِۦ
இவனுக்கு முன்னர்
مِنَ ٱلْقُرُونِ
பல தலைமுறையினர்களில்
مَنْ هُوَ
யார்?/அவர்
أَشَدُّ
மிக்க கடினமானவர்
مِنْهُ
இவனைவிட
قُوَّةً
பலத்தால்
وَأَكْثَرُ
மிக அதிகமானவர்
جَمْعًاۚ
சேகரிப்பதில்
وَلَا يُسْـَٔلُ
விசாரிக்கப்பட மாட்டார்கள்
عَن ذُنُوبِهِمُ
தங்கள் குற்றங்களைப் பற்றி
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்

Qaala innamaaa ootee tuhoo 'alaa 'ilmin 'indeee; awalam ya'lam annal laaha qad ahlaka min qablihee minal qurooni man huwa ashaddu minhu quwwatanw wa aksaru jam'aa; wa laa yus'alu 'an zunoobihimul mujrimoon

அதற்கவன் "(என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என்னுடைய சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)" என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறிய வில்லையா? குற்றவாளிகள் தங்கள் பாவங்களைப் பற்றி கூறும் புகல் (அங்குக் கவனித்துக்) கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.)

Tafseer

فَخَرَجَ
அவன் வெளியில் வந்தான்
عَلَىٰ قَوْمِهِۦ
தனது மக்களுக்கு முன்
فِى زِينَتِهِۦۖ
தனது அலங்காரத்தில்
قَالَ
கூறினார்கள்
ٱلَّذِينَ يُرِيدُونَ
விரும்புகின்றவர்கள்
ٱلْحَيَوٰةَ
வாழ்க்கையை
ٱلدُّنْيَا
உலக
يَٰلَيْتَ
இருக்க வேண்டுமே!
لَنَا
நமக்கு
مِثْلَ
போன்று
مَآ أُوتِىَ
வழங்கப்பட்டது
قَٰرُونُ
காரூனுக்கு
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَذُو حَظٍّ
பேருடையவன்
عَظِيمٍ
பெரும்

Fakharaja 'alaa qawmihee fee zeenatih; qaalal lazeena yureedoonal hayaatad dunyaa yaalaita lanaa misla maaa ootiya Qaaroonu innahoo lazoo hazzin 'azeem

அவன் (ஒரு நாள் மிக்க ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் மக்கள் முன் சென்றான். (அதனைக் கண்ணுற்றவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையை (பெரிதென) விரும்பியவர்களாக இருந்தார்களோ அவர்கள் "காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட வேண்டாமா? ஏனென்றால், நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான்" என்று கூறினார்கள்.

Tafseer

وَقَالَ
கூறினார்(கள்)
ٱلَّذِينَ أُوتُوا۟
வழங்கப்பட்டவர்கள்
ٱلْعِلْمَ
கல்வி
وَيْلَكُمْ
உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்
ثَوَابُ
நற்கூலி
ٱللَّهِ
அல்லாஹ்வின்
خَيْرٌ
மிகச் சிறந்ததாகும்
لِّمَنْ
யாருக்கு
ءَامَنَ
நம்பிக்கை கொண்டு
وَعَمِلَ
செய்பவருக்கு
صَٰلِحًا
நன்மை
وَلَا يُلَقَّىٰهَآ
வாய்ப்பளிக்கப்பட மாட்டார்(கள்)/இதற்கு
إِلَّا
தவிர
ٱلصَّٰبِرُونَ
பொறுமையாளர்களை

Wa qaalal lazeena ootul 'ilma wailakum sawaabul laahi khairul liman aamana wa 'amila saalihaa; wa laa yulaq qaahaaa illas saabiroon

எனினும், அவர்களில் எவர்களுக்கு மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) "உங்களுக்கு என்ன கேடு? (இவ்வாறு ஏன் கூறுகின்றீர்கள்?) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் கூலியோ (இதனைவிட) எவ்வளவோ மேலானது. அதனைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்ற எவரும்) அடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள்.

Tafseer