Skip to main content

مُنِيبِينَ
முற்றிலும் திரும்பியவர்களாக
إِلَيْهِ
அவன் பக்கம்
وَٱتَّقُوهُ
இன்னும் அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்
وَأَقِيمُوا۟
இன்னும் நிறைவேற்றுங்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَلَا تَكُونُوا۟
நீங்கள் ஆகிவிடாதீர்கள்
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Muneebeena ilaihi wattaqoohu wa aqeemus Salaata wa laa takoonoo minal mushrikeen

(நம்பிக்கையாளர்களே! நீங்களும் அந்த) ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மார்க்கத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே பயந்து தொழுகையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள். இணைவைத்து வணங்குபவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.

Tafseer

مِنَ ٱلَّذِينَ
எவர்களில்
فَرَّقُوا۟
பிரித்தார்கள்
دِينَهُمْ
தங்களது மார்க்கத்தை
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிட்டனர்
شِيَعًاۖ
பல பிரிவுகளாக
كُلُّ
ஒவ்வொரு
حِزْبٍۭ
கட்சியும்
بِمَا
உள்ளதைக் கொண்டு
لَدَيْهِمْ
தங்களிடம்
فَرِحُونَ
மகிழ்ச்சியடைகின்றனர்

Minal lazeena farraqoo deenahum wa kaanoo shiya'an kullu hizbim bimaa ladaihim farihoon

(தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வைகளைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ (அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்.)

Tafseer

وَإِذَا مَسَّ
நேர்ந்தால்
ٱلنَّاسَ
மக்களுக்கு
ضُرٌّ
ஒரு தீங்கு
دَعَوْا۟
அழைக்கின்றனர்
رَبَّهُم
தங்கள் இறைவனை
مُّنِيبِينَ
முற்றிலும் திரும்பியவர்களாக
إِلَيْهِ
அவன் பக்கம்
ثُمَّ إِذَآ
பிறகு/அவன் சுவைக்க வைத்தால்/அவர்களுக்கு
مِّنْهُ
தன்புறத்திலிருந்து
رَحْمَةً
அருளை
إِذَا فَرِيقٌ
அப்போது ஒரு சாரார்
مِّنْهُم
அவர்களில்
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
يُشْرِكُونَ
இணைவைக்கின்றனர்

Wa izaa massan naasa durrun da'aw Rabbahum muneebeena ilaihi summa izaaa azaqahum minhu rahmatan izaa fareequm minhum be Rabbihim yushrikoon

மனிதர்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் முகம் நோக்கி அவனிடம் பிரார்த்திக்கிறார்கள். பின்னர் அவன் (அதனை நீக்கி) அவர்களைத் தன்னுடைய அருளைச் சுவைக்கும்படிச் செய்தால் அவர்களில் ஒரு பிரிவினர் தங்களுடைய இறைவனுக்கே இணை வைக்கின்றனர்.

Tafseer

لِيَكْفُرُوا۟
நிராகரிப்பதற்காக
بِمَآ ءَاتَيْنَٰهُمْۚ
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
فَتَمَتَّعُوا۟
ஆகவே சுகமனுபவியுங்கள்
فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் அறிவீர்கள்

Li yakfuroo bimaaa aatainaahum; fatamatta'oo fasawfa ta'lamoon

அன்றி, நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப் லிபவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். (உங்கள் செயலின் பயனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

Tafseer

أَمْ
அல்லது
أَنزَلْنَا
நாம் இறக்கினோம்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
سُلْطَٰنًا
ஓர் ஆதாரத்தை
فَهُوَ
அது
يَتَكَلَّمُ
பேசுகிறதா
بِمَا
எதைப் பற்றி
كَانُوا۟
இருந்தனர்
بِهِۦ
அவனுக்கு
يُشْرِكُونَ
இணை வைப்பவர்களாக

Am anzalnaa 'alaihim sultaanan fahuwa yatakallamu bimaa kaanoo bihee yushrikoon

அவர்கள் இணைவைத்து வணங்குவதற்கு ஆதாரமாகக் கூறக்கூடிய யாதொரு அத்தாட்சியையும் நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? (அவ்வாறு ஒன்றும் இல்லை.)

Tafseer

وَإِذَآ أَذَقْنَا
நாம் சுவைக்க வைத்தால்
ٱلنَّاسَ
மக்களுக்கு
رَحْمَةً
அருளை
فَرِحُوا۟
மகிழ்ச்சியடைகின்றனர்
بِهَاۖ
அதனால்
وَإِن تُصِبْهُمْ
அவர்களை அடைந்தால்
سَيِّئَةٌۢ
ஒரு தீமை
بِمَا قَدَّمَتْ
முற்படுத்தியவற்றினால்
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
يَقْنَطُونَ
நிராசையடைந்து விடுகின்றனர்

Wa izaaa azaqnan naasa rahmatan farihoo bihaa wa in tusibhum sayyi'atum bimaa qaddamat aydeehim izaa hum yaqnatoon

மனிதர்கள் நம்முடைய அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய கைகளே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு யாதொரு தீங்கேற்படும் பட்சத்தில் உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர்.

Tafseer

أَوَلَمْ يَرَوْا۟
இவர்கள் பார்க்க வேண்டாமா?
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَبْسُطُ
விசாலமாக்குகின்றான்
ٱلرِّزْقَ
உணவை
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
وَيَقْدِرُۚ
இன்னும் சுருக்குகின்றான்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றன
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்

Awalam yaraw annal laaha yabsutur rizqa limai yashaaa'u wa yaqdir; inna fee zaalika la Aayaatil liqawminy yu'minoon

நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்து விடுகின்றான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

فَـَٔاتِ
ஆகவே கொடுப்பீராக!
ذَا ٱلْقُرْبَىٰ
உறவினருக்கு
حَقَّهُۥ
அவருடைய உரிமையை
وَٱلْمِسْكِينَ
இன்னும் வறியவருக்கு
وَٱبْنَ ٱلسَّبِيلِۚ
இன்னும் வழிப்போக்கருக்கு
ذَٰلِكَ
இதுதான்
خَيْرٌ
சிறந்ததாகும்.
لِّلَّذِينَ يُرِيدُونَ
நாடுவோருக்கு
وَجْهَ
முகத்தை
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்

Fa aati zal qurbaa haqqahoo walmiskeena wabnassabeel; zaalika khairul lil lazeena yureedoona Wajhal laahi wa ulaaa'ika humul muflihoon

(நபியே! உங்களது பொருளில்) உறவினருக்கு அவரின் உரிமையை கொடுத்து வாருங்கள். அவ்வாறே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவர்களுடைய உரிமையைக் கொடுத்து வாருங்கள்). எவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு இதுவே மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

Tafseer

وَمَآ ءَاتَيْتُم
எதை/நீங்கள்கொடுத்தீர்கள்
مِّن رِّبًا
அன்பளிப்புகளிலிருந்து
لِّيَرْبُوَا۟
வளர்ச்சி காணுவதற்காக
فِىٓ أَمْوَٰلِ
செல்வங்களில்
ٱلنَّاسِ
மக்களின்
فَلَا يَرْبُوا۟
அது வளர்ச்சி காணாது
عِندَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
وَمَآ ءَاتَيْتُم
எதை/நீங்கள்கொடுத்தீர்கள்
مِّن زَكَوٰةٍ
தர்மங்களிலிருந்து
تُرِيدُونَ
நீங்கள் நாடியவர்களாக
وَجْهَ
முகத்தை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْمُضْعِفُونَ
பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்

Wa maaa aataitum mir ribal li yarbuwa feee amwaalin naasi falaa yarboo 'indal laahi wa maaa aataitum min zaakaatin tureedoona wajhal laahi fa ulaaa'ika humul mud'ifoon

(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்.

Tafseer

ٱللَّهُ ٱلَّذِى
அல்லாஹ்தான்
خَلَقَكُمْ
உங்களைப் படைத்தான்
ثُمَّ رَزَقَكُمْ
பிறகு/அவன் உங்களுக்கு உணவளித்தான்
ثُمَّ يُمِيتُكُمْ
பிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை
ثُمَّ يُحْيِيكُمْۖ
பிறகு/அவன் உங்களை உயிர்ப்பிப்பான்
هَلْ
?
مِن شُرَكَآئِكُم
உங்கள் தெய்வங்களில் (இருக்கின்றாரா)
مَّن يَفْعَلُ
செய்கின்றவர்
مِن ذَٰلِكُم
இவற்றில்
مِّن شَىْءٍۚ
எதையும்
سُبْحَٰنَهُۥ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
وَتَعَٰلَىٰ
இன்னும் அவன் மிக உயர்ந்தவன்
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்

Allaahul lazee khalaqa kum summa razaqakm summa yumeetukum summa yuhyeekum hal min shurakaaa'ikum mai yaf'alu min zaalikum min shai'; Sub haanahoo wa Ta'aalaa 'ammaa yushrikoon

அல்லாஹ்தான் உங்களை படைத்தவன். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அவனே. பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையும் செய்யக்கூடிய சக்தி உங்கள் தெய்வங்களில் எதற்கும் உண்டோ? இவர்கள் செய்யும் (இத்தகைய) இணைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்; பரிசுத்தமானவன்.

Tafseer