Skip to main content

وَلَئِنْ
أَرْسَلْنَا
நாம் அனுப்பினால்
رِيحًا
ஒரு காற்றை
فَرَأَوْهُ
அதை அவர்கள் பார்த்தால்
مُصْفَرًّا
மஞ்சளாக
لَّظَلُّوا۟
ஆகிவிடுகின்றனர்
مِنۢ بَعْدِهِۦ
அதற்குப் பின்னர்
يَكْفُرُونَ
நிராகரிக்கின்றவர்களாக

Wa la'in arsalnaa reehan fara awhu musfarral lazalloo mim ba'dihee yakfuroon

(மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்களுடைய பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், முன்னர் நாம் அவர்களுக்குச் செய்திருந்த நன்றியையுமே அவர்கள் நிராகரித்து விடுகின்றனர்.

Tafseer

فَإِنَّكَ
ஆகவே நிச்சயமாக நீர்
لَا تُسْمِعُ
செவியுறச் செய்ய முடியாது
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களுக்கு
وَلَا تُسْمِعُ
இன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாது
ٱلصُّمَّ
செவிடர்களுக்கு
ٱلدُّعَآءَ
அழைப்பை
إِذَا وَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
مُدْبِرِينَ
புறமுதுகிட்டவர்களாக

Fa innaka laa tusmi'ul mawtaa wa laa tusmi'us summad du'aaa'a izaa wallaw mudbireen

(நபியே!) இறந்தவர்களை செவியுறும்படிச் செய்ய நிச்சயமாக உங்களால் முடியாது. உங்களைப் புறக்கணித்துச் செல்லும் செவிடர்களுக்குச் சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் உங்களால் முடியாது.

Tafseer

وَمَآ أَنتَ
நீர் அல்லர்
بِهَٰدِ
நேர்வழி செலுத்துபவர்
ٱلْعُمْىِ
குருடர்களை
عَن ضَلَٰلَتِهِمْۖ
அவர்களின் வழிகேட்டிலிருந்து
إِن تُسْمِعُ
நீர் செவியுறச் செய்ய முடியாது
إِلَّا مَن
தவிர/நம்பிக்கை கொள்கின்றவர்கள்
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
فَهُم
அவர்கள்தான்
مُّسْلِمُونَ
முற்றிலும் கீழப்படிகிறவர்கள்

Wa maa anta bihaadil 'umyi 'an dalaalatihim in tusmi'u illaa mai yuminu bi aayaatinaa fahum muslimoon

குருடர்களையும், அவர்களை வழிகேட்டிலிருந்து நேரான வழியில் திருப்பிவிடவும் உங்களால் முடியாது. முற்றிலும் வழிப்பட்டவர்களாக நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர மற்ற எவரையும் (உங்களுடைய நல்லுபதேசங்களைக்) கேட்கும்படிச் செய்ய உங்களால் முடியாது.

Tafseer

ٱللَّهُ ٱلَّذِى
அல்லாஹ்தான்
خَلَقَكُم
உங்களை படைத்தான்
مِّن ضَعْفٍ
பலவீனமான ஒன்றிலிருந்து
ثُمَّ
பிறகு
جَعَلَ
ஏற்படுத்தினான்
مِنۢ بَعْدِ
பின்னர்
ضَعْفٍ
பலவீனத்திற்கு
قُوَّةً
பலத்தை
ثُمَّ
பிறகு
جَعَلَ
ஏற்படுத்தினான்
مِنۢ بَعْدِ
பின்னர்
قُوَّةٍ
பலத்திற்கு
ضَعْفًا
பலவீனத்தையும்
وَشَيْبَةًۚ
வயோதிகத்தையும்
يَخْلُقُ
அவன் படைக்கிறான்
مَا يَشَآءُۖ
தான் நாடுவதை
وَهُوَ
அவன்தான்
ٱلْعَلِيمُ
மிக்க அறிந்தவன்
ٱلْقَدِيرُ
பேராற்றலுடையவன்

Allahul lazee khalaqa kum min du'fin summa ja'ala mim ba'di du'fin quwwatan summa ja'ala mim ba'di quwwatin du'fanw wa shaibah; yakhluqu maa yashaaa'u wa Huwal 'Aleemul Qadeer

அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَيَوْمَ
நாளில்
تَقُومُ
நிகழ்கின்ற(து)
ٱلسَّاعَةُ
மறுமை நாள்
يُقْسِمُ
சத்தியம் செய்வார்கள்
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
مَا لَبِثُوا۟
தாங்கள் தங்கவில்லை
غَيْرَ سَاعَةٍۚ
சில மணி நேரமே அன்றி
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
كَانُوا۟
இருந்தார்கள்
يُؤْفَكُونَ
அவர்கள் பொய் சொல்பவர்களாக

Wa Yawma taqoomus Saa'atu yuqsimul mujrimoona maa labisoo ghaira saa'ah; kazaalika kaanoo yu'fakoon

மறுமை நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையைத் தவிர (அதிகமாக) இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே (இவ்வுலகத்திலும்) அவர்கள் பொய்யையே பிதற்றிக் கொண்டிருந்தனர்.

Tafseer

وَقَالَ
கூறுவார்கள்
ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
ٱلْعِلْمَ
கல்வி(யும்)
وَٱلْإِيمَٰنَ
ஈமானும்
لَقَدْ
திட்டவட்டமாக
لَبِثْتُمْ
நீங்கள் தங்கினீர்கள்
فِى كِتَٰبِ
விதிப்படி
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
ٱلْبَعْثِۖ
எழுப்பப்படுகின்ற
فَهَٰذَا
இதோ
يَوْمُ
நாள்
ٱلْبَعْثِ
எழுப்பப்படுகின்ற
وَلَٰكِنَّكُمْ
என்றாலும் நீங்கள்
كُنتُمْ
இருந்தீர்கள்
لَا تَعْلَمُونَ
அறியாதவர்களாக

Wa qaalal lazeena ootul 'ilma wal eemaana laqad labistum fee kitaabil laahi ilaa yawmil ba'si fahaazaa yawmul ba'si wa laakinnakum kuntum laa ta'lamoon

எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப் பட்டவர்கள் (அதனை மறுத்து) "அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையில் (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதனை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்" என்றும்,

Tafseer

فَيَوْمَئِذٍ
அந்நாளில்
لَّا يَنفَعُ
பலனளிக்காது
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களுக்கு
مَعْذِرَتُهُمْ
அவர்களின் மன்னிப்புக் கோருதல்
وَلَا هُمْ
திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது

Fa Yawma'izil laa yanfa'ul lazeena zalamoo ma'ziratu hum wa laa hum yusta'taboon

"ஆனால், அந்நாளில் அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அன்றி, அவர்கள் இறைவனைத் திருப்தி செய்து வைக்கவும் வழியிராது" என்றும் கூறினார்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ضَرَبْنَا
விவரித்துள்ளோம்
لِلنَّاسِ
மக்களுக்கு
فِى هَٰذَا
இந்த
ٱلْقُرْءَانِ
குர்ஆனில்
مِن كُلِّ
எல்லா
مَثَلٍۚ
உதாரணங்களையும்
وَلَئِن جِئْتَهُم
நீர் அவர்களிடம் வந்தால்
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
لَّيَقُولَنَّ
திட்டமாக கூறுவார்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
إِلَّا
தவிர
مُبْطِلُونَ
பொய்யர்களே

Wa laqad darabnaa linnaasi fee haazal Quraani min kulli masal; wa la'in ji'tahum bi aayatil la yaqoolannal lazeena kafaroo in antum illaa mubtiloon

மனிதர்களுக்கு (திருப்தி அளிப்பதற்காக) வேண்டிய உதாரணங்கள் அனைத்தையும் இந்தக் குர்ஆனில் நிச்சயமாக நாம் கூறியே இருக்கின்றோம். (இதனை அங்கீகரிக்காத அவர்கள் விரும்பும்) எந்த அத்தாட்சியை நீங்கள் அவர்களிடம் கொண்டு வந்தபோதிலும் (நபியே! உங்களையும் உங்களுடன் இருப்பவர் களையும் நோக்கி) நீங்கள் பொய்யர்களேயன்றி வேறில்லை" என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.

Tafseer

كَذَٰلِكَ
இவ்வாறுதான்
يَطْبَعُ
முத்திரையிட்டு விடுகின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ قُلُوبِ
உள்ளங்களில்
ٱلَّذِينَ لَا
அறியாதவர்களின்

Kazaalika yatba'ul laahu 'alaa quloobil lazeena laa ya'lamoon

இவ்வாறே அறிவில்லாத இந்த மக்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.

Tafseer

فَٱصْبِرْ
ஆகவே, பொறுமையாக இருப்பீராக!
إِنَّ
நிச்சயமாக
وَعْدَ
வாக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
حَقٌّۖ
உண்மையானதே!
وَلَا يَسْتَخِفَّنَّكَ
உம்மை இலேசாக கருதிவிட வேண்டாம்
ٱلَّذِينَ لَا
உறுதிகொள்ளாதவர்கள்

Fasbir inna wa'dal laahi haqqunw wa laa yastakhif fannakal lazeena laa yooqinoon

ஆகவே, (நபியே!) நீங்கள் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் நபியே! நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்.) மறுமையை நம்பாத இவர்கள் நிச்சயமாக உங்களை இலேசாக எண்ணவேண்டாம்.

Tafseer