Skip to main content

ٱللَّهُ
அல்லாஹ்தான்
يَبْدَؤُا۟
தொடக்கமாக படைக்கிறான்
ٱلْخَلْقَ
படைப்புகளை
ثُمَّ
பிறகு
يُعِيدُهُۥ
அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்
ثُمَّ
பிறகு
إِلَيْهِ
அவனிடமே
تُرْجَعُونَ
நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்

Allaahu yabda'ul khalqa summa yu'eeduhoo summa ilaihi turja'oon

(மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புப் பொருள்களை முதலாவதாக உற்பத்தி செய்கின்றான். அவனே (அவைகள் இறந்த பின்னரும்) அவைகளை மீள வைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer

وَيَوْمَ
இன்னும் நாளில்
تَقُومُ
நிகழ்கின்ற
ٱلسَّاعَةُ
மறுமை
يُبْلِسُ
பெரும் சிரமப்படுவார்கள்
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்

Wa yawma taqoomus Saa'atu yublisul mujrimoon

விசாரணைக் காலம் வரும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

Tafseer

وَلَمْ يَكُن
இருக்க மாட்டார்கள்
لَّهُم
அவர்களுக்கு
مِّن شُرَكَآئِهِمْ
அவர்களுடைய நண்பர்களில்
شُفَعَٰٓؤُا۟
பரிந்துரையாளர்கள்
وَكَانُوا۟
அவர்கள் ஆகிவிடுவார்கள்
بِشُرَكَآئِهِمْ
தங்கள் நண்பர்களை
كَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக

Wa lam yakul lahum min shurakaaa'ihim shufa'aaa'u wa kaanoo bishurakaaa'ihim kaafireen

(ஏனென்றால்) அவர்கள் இணைவைத்து வணங்கியவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பரிந்து பேசாது. (இணைவைத்த) அவர்களும் தாங்கள் இணை வைத்தவைகளைப் புறக்கணித்து விடுவார்கள்.

Tafseer

وَيَوْمَ
நாளில்
تَقُومُ
நிகழ்கின்ற
ٱلسَّاعَةُ
மறுமை
يَوْمَئِذٍ
அந்நாளில்
يَتَفَرَّقُونَ
அவர்கள் பிரிந்து விடுவார்கள்

Wa Yawma taqoomus Saa'atu Yawma'iziny yatafarraqoon

விசாரணையின் அந்நாள் வரும் சமயத்தில் (நல்லவர்களும் தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்துவிடுவார்கள்.

Tafseer

فَأَمَّا
ஆக
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/ நம்பிக்கைகொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்களோ
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
فَهُمْ
அவர்கள்
فِى رَوْضَةٍ
தோட்டத்தில்
يُحْبَرُونَ
மகிழ்விக்கப்படுவார்கள்

Fa ammal lazeena aamanoo wa 'amilus saalihaati fahum fee rawdatiny yuhbaroon

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் (மறுமையில் சுவனபதியிலுள்ள) உன்னதமாகச் சிங்காரிக்கப்பட்ட பூங்காவனத்தில் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள்.

Tafseer

وَأَمَّا
ஆக
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்கள்
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
وَلِقَآئِ
இன்னும் சந்திப்பை
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
فِى ٱلْعَذَابِ
தண்டனைக்கு
مُحْضَرُونَ
கொண்டு வரப்படுவார்கள்

Wa ammal lazeena kafaroo wa kazzaboo bi-Aayaatinaa wa liqaaa'il Aakhirati faulaaa'ika fil'azaabi muhdaroon

எவர்கள் (என்னை) நிராகரித்து என்னுடைய வசனங்களையும், மறுமை(யில் எனது) சந்திப்பையும் பொய்யாக்குகின்றார்களோ அவர்கள் வேதனையில் சிக்கிக் கிடப்பார்கள்.

Tafseer

فَسُبْحَٰنَ
ஆகவே, நீங்கள் துதியுங்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வை
حِينَ تُمْسُونَ
நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போது(ம்)
وَحِينَ تُصْبِحُونَ
நீங்கள் காலைப் பொழுதை அடையும்போதும்

Fa Subhaanal laahi heena tumsoona wa heena tusbihoon

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்கள் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருங்கள்.

Tafseer

وَلَهُ
அவனுக்கே உரியன
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
وَٱلْأَرْضِ
பூமியிலும்
وَعَشِيًّا
மாலையிலும்
وَحِينَ تُظْهِرُونَ
நீங்கள் மதியத்தை அடையும் நேரத்திலும்

Wa lahul hamdu fis samaawaati wal ardi wa 'ashiyyanw wa heena tuzhiroon

இரவிலோ, பகலிலோ, வானங்களிலும் பூமியிலுமுள்ளவை அனைத்தும் (போற்றி) புகழும் புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியன. (ஆகவே, அந்த நேரங்களில் நீங்களும் அவனைப் போற்றி புகழ்ந்து கொண்டிருங்கள்.)

Tafseer

يُخْرِجُ
வெளியாக்குகின்றான்
ٱلْحَىَّ
உயிருள்ளவற்றை
مِنَ ٱلْمَيِّتِ
இறந்ததிலிருந்து
وَيُخْرِجُ
இன்னும் வெளியாக்குகின்றான்
ٱلْمَيِّتَ
இறந்தவற்றை
مِنَ ٱلْحَىِّ
உயிருள்ளதிலிருந்து
وَيُحْىِ
இன்னும் உயிர்ப்பிக்கின்றான்
ٱلْأَرْضَ
பூமியை
بَعْدَ
பின்னர்
مَوْتِهَاۚ
அது இறந்த
وَكَذَٰلِكَ
இன்னும் இவ்வாறே
تُخْرَجُونَ
நீங்களும் வெளியேற்றப்படுவீர்கள்

Yukhrijul haiya minal maiyiti wa yukhrijul maiyita minal haiyi wa yuhyil arda ba'da mawtihaa; wa kazaalika tukhrajoon

அவனே இறந்தவைகளிலிருந்து உயிருள்ளவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே உயிருள்ளவைகளிலிருந்து மரணித்தவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே இறந்த பூமிகளையும் செழிப்பாக்குகின்றான். இவ்வாறே (மரணித்த பின்னர்) மறுமையில் நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.

Tafseer

وَمِنْ ءَايَٰتِهِۦٓ
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
أَنْ خَلَقَكُم
அவன் உங்களை படைத்தது
مِّن تُرَابٍ
மண்ணிலிருந்து
ثُمَّ
பிறகு
إِذَآ أَنتُم
நீங்களோ
بَشَرٌ
மனிதர்களாக
تَنتَشِرُونَ
பிரிந்து செல்கிறீர்கள்

Wa min Aayaatiheee an khalaqakum min turaabin summa izaaa antum basharun tantashiroon

மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதராக ஆனதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும்.

Tafseer