Skip to main content

فَبَشَّرْنَٰهُ
ஆகவே, அவருக்கு நற்செய்தி கூறினோம்
بِغُلَٰمٍ
ஒரு குழந்தையைக்கொண்டு
حَلِيمٍ
மிக சகிப்பாளரான

Fabashsharnaahu bighulaamin haleem

ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.

Tafseer

فَلَمَّا بَلَغَ
பருவத்தை அடைந்தபோது
مَعَهُ
அவருடன்
ٱلسَّعْىَ
உழைக்கின்ற
قَالَ
அவர் கூறினார்
يَٰبُنَىَّ
என் மகனே!
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَرَىٰ
பார்க்கிறேன்
فِى ٱلْمَنَامِ
கனவில்
أَنِّىٓ
நிச்சயமாக நான்
أَذْبَحُكَ
உன்னை பலியிடுவதாக
فَٱنظُرْ
ஆகவே, நீ யோசி
مَاذَا
என்ன
تَرَىٰۚ
நீ கருதுகிறாய்
قَالَ
அவர் கூறினார்
يَٰٓأَبَتِ
என் தந்தையே!
ٱفْعَلْ
நீர் செய்வீராக!
مَا تُؤْمَرُۖ
உமக்கு ஏவப்படுவதை
سَتَجِدُنِىٓ
என்னை நீர் காண்பீர்
إِن شَآءَ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنَ ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களில் (ஒருவராக)

Falamma balagha ma'a hus sa'ya qaala yaa buniya inneee araa fil manaami anneee azbahuka fanzur maazaa taraa; qaala yaaa abatif 'al maa tu'maru satajidunee in shaaa'allaahu minas saabireen

(அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்த பொழுது, அவர் (தன் மகனை நோக்கி) "என் அருமை மைந்தனே! நான் உன்னை (என்னுடைய கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என்னுடைய கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?" என்று கேட்டார். அதற்கவர், "என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதனைச் சகித்துக்கொண்டு) உறுதியாயிருப் வனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார்.

Tafseer

فَلَمَّآ أَسْلَمَا
அப்போது அவர்கள் இருவரும் முற்றிலும் பணிந்தனர்
وَتَلَّهُۥ
அவர் அவரை கீழே சாய்த்தார்
لِلْجَبِينِ
கன்னத்தின் மீது

Falammaaa aslamaa wa tallahoo liljabeen

ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார்.

Tafseer

وَنَٰدَيْنَٰهُ
நாம் அவரை அழைத்தோம்
أَن يَٰٓإِبْرَٰهِيمُ
இப்ராஹீமே! என்று

Wa naadainaahu ai yaaaa Ibraheem

அச்சமயம் நாம் "இப்ராஹீமே!" என அழைத்து,

Tafseer

قَدْ
திட்டமாக
صَدَّقْتَ
உண்மைப்படுத்தினீர்
ٱلرُّءْيَآۚ
கனவை
إِنَّا
நிச்சயமாக நாம்
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
نَجْزِى
கூலி கொடுப்போம்
ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களுக்கு

Qad saddaqtar ru'yaa; innaa kazaalika najzil muhsineen

உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்" என்றும் கூறி,

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰذَا لَهُوَ
இதுதான்
ٱلْبَلَٰٓؤُا۟
சோதனையாகும்
ٱلْمُبِينُ
தெளிவான

Inna haazaa lahuwal balaaa'ul mubeen

"நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்" (என்றும் கூறினோம்).

Tafseer

وَفَدَيْنَٰهُ
அவரை விடுதலை செய்தோம்
بِذِبْحٍ
ஒரு பலிப் பிராணியைக்கொண்டு
عَظِيمٍ
மகத்தான

Wa fadainaahu bizibhin 'azeem

ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

Tafseer

وَتَرَكْنَا عَلَيْهِ
அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்
فِى ٱلْءَاخِرِينَ
பின்னோரில்

Wa taraknaa 'alaihi fil aakhireen

அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்.

Tafseer

سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகட்டும்
عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு

Salaamun 'alaaa Ibraaheem

(ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) "இப்ராஹீமுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாகுக" (என்றும் கூறுகின்றனர்.)

Tafseer

كَذَٰلِكَ
இப்படித்தான்
نَجْزِى
நாம் கூலி கொடுப்போம்
ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களுக்கு

Kazaalika najzil muhsineen

இவ்வாறே, நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

Tafseer