Sa yaqoolu lakal mukhal lafoona minal-A'raabi shaighalatnaaa amwaalunaa wa ahloonaa fastaghfir lanaa; yaqooloona bi alsinatihim maa laisa fee quloobihim; qul famany yamliku lakum minal laahi shai'an in araada bikum darran aw araada bikum naf'aa; bal kaanal laahu bimaa ta'maloona Khabeeraa
(நபியே! போர் செய்ய உங்களுடன் வராது) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகள் உங்களிடம் வந்து "நாங்கள் உங்களுடன் வர எங்களுடைய பொருள்களும் எங்களுடைய குடும்பங்களும் எங்களுக்கு அவகாசமளிக்கவில்லை" என்று (பொய்யாகக்) கூறி, "(இறைவனிடம்) நீங்கள் எங்களுக்கு மன்னிப்புக் கோருவீராக!" என்று கூறுவார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவை களைத் தங்கள் நாவுகளால் கூறுகின்றனர். ஆகவே, (நபியே!) நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீமை செய்ய நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு யாதொரு நன்மை செய்ய நாடினாலும் அதில் எதையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்குத் தடுத்து விடக்கூடியவன் யார்? நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்துகொண்டு இருக்கின்றான். (பின்னும் நீங்கள் அவர்களை நோக்கி,)
Bal zanantum al lany yanqalibar Rasoolu walmu'minoona ilaaa ahleehim abadanw wa zuyyina zaalika fee quloobikum wa zanantum zannnas saw'i wa kuntum qawmam booraa
"(அல்லாஹ்வுடைய) தூதரும், அவரை நம்பிக்கை கொண்டவர்களும் (போரிலிருந்து) தங்கள் குடும்பத்தார்களிடம் ஒரு காலத்திலும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள். (ஆதலால்தான் போருக்கு நீங்கள் வரவில்லை.) இதுவே உங்கள் மனதில் அழகாக்கப்பட்டது. ஆதலால், நீங்கள் கெட்ட எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந் தீர்கள். அதனால் நீங்கள்தான் அழிந்துபோனீர்கள்" (என்று கூறுங்கள்.)
Wa mal lam yu'mim billaahi wa Rasoolihee fainnaaa a'tadnaa lilkaafireena sa'eeraa
எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லையோ (அவன் நிராகரிப்பவன்தான். ஆகவே,) அத்தகைய நிராகரிப்பவனுக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.
Wa lillaahii mulkus samaawaati wal ard; yaghfiru limany yashaaa'u wa yu'azzibu many yashaaa'; wa kaanal laahu Ghafoorar Raheemaa
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகின்றான். அவன் நாடியவர்களை வேதனை செய்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
Sa yaqoolul mukhalla foona izan talaqtum ilaa maghaanima litaakhuzoohaa zaroonaa nattabi'kum yureedoona any yubaddiloo Kalaamallaah; qul lan tattabi'oonaa kazaalikum qaalal laahu min qablu fasa yaqooloona bal tahsudoonanna; bal kaanoo laa yafqahoona illaa qaleela
(நபியே! முன்னர் போருக்கு உங்களுடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருள்களை எடுத்துக் கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில், (உங்களை நோக்கி) "நாங்களும் உங்களைப் பின்பற்றிவர எங்களை (அனுமதித்து) விடுங்கள்" என்று கூறுவார்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றி விடவே கருதுகின்றார்கள். ஆகவே, நீங்கள் அவர்களை நோக்கி "நீங்கள் எங்களைப் பின்பற்றிவர வேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு கூறிவிட்டான்" என்றும் கூறுங்கள் அதற்கவர்கள், ("அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை;") நீங்கள்தான் நம்மீது பொறாமை கொண்டு (இவ்வாறு கூறுகின்றீர்கள்) என்று கூறுவார்கள். அன்றி, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
Qul lilmukhallafeena minal A'raabi satud'awna ilaa qawmin ulee baasin shadeedin tuqaati loonahum aw yuslimoona fa in tutee'oo yu'tikumul laahu ajran hasananw wa in tatawallaw kamaa tawallaitum min qablu yu'azzibkum 'azaaban aleemaa
(நபியே!) பின்தங்கிய நாட்டுப்புறத்து அரபிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: "மிக பலசாலிகளான மக்களுடன் (போர்புரிய) அதிசீக்கிரத்தில் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவர்கள் முற்றிலும் கட்டுப்படும் வரையில், நீங்கள் அவர்களுடன் போர்புரிய வேண்டியதிருக்கும். (இதில்) நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடப்பீர்களாயின், அல்லாஹ் உங்களுக்கு அழகான கூலியைக் கொடுப்பான். இதற்கு முன்னர் நீங்கள் (போர் செய்யாது) திரும்பி விட்டபடி (அச்சமயம் போர் புரியாது) நீங்கள் திரும்பி விடுவீர்களாயின், அவன் உங்களை மிக கடினமாகத் துன்புறுத்தி வேதனை செய்வான்."
Laisa 'alal a'maa harajunw wa laa 'alal a'raji harajunw wa laa 'alal mareedi haraj' wa many yutil'il laaha wa Rasoolahoo yudkhilhu jannaatin tajree min tahtihal anhaaru wa many yatawalla yu'azzibhu 'azaaban aleemaa
(போருக்கு வராததைப் பற்றிக்) குருடன் மீது யாதொரு குற்றமுமில்லை; நொண்டி மீதும் யாதொரு குற்றமுமில்லை; நோயாளி மீதும் யாதொரு குற்றமுமில்லை. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மெய்யாகவே வழிப்பட்டு, (போருக்கு உங்களுடன்) வருகின்றாரோ, அவரை (அல்லாஹ்) சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். எவர் (உங்களுக்கு வழிப்படாது போருக்கு உங்களுடன் வராது) புறக்கணிக்கின்றாரோ, அவரை மிக கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வான்.
Laqad radiyal laahu 'anil mu'mineena iz yubaayi 'oonaka tahtash shajarati fa'alima maa fee quloobihim fa anzalas sakeenata 'alaihim wa asaa bahum fat han qareebaa
அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்.
Wa maghaanima kaseera tany yaakhuzoonahaa; wa kaanal laahu 'Azeezan Hakeemaa
(அந்த போரில்) ஏராளமான பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படி செய்தான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.
Wa'adakumul laahu ma ghaanima kaseeratan taakhuzoo nahaa fa'ajjala lakum haazihee wa kaffa aydiyan naasi 'ankum wa litakoona aayatal lilmu'mineena wa yahdiyakum siraatam mustaqeema
ஏராளமான பொருள்களை (போரில்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் திருந்தான். இதனை உங்களுக்கு அதிசீக்கிரத்திலும் கொடுத்து விட்டான். (உங்களுக்கு எதிரான) மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டுத் தடுத்துவிட்டான். இது நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஏற்பட்டது. அவனே உங்களை நேரான பாதையில் நடத்துவான்.