Skip to main content

أَمْ عِندَهُمُ
அவர்களிடம் இருக்கின்றதா
ٱلْغَيْبُ
மறைவானவற்றின் அறிவு
فَهُمْ
அதை அவர்கள்
يَكْتُبُونَ
எழுதுகின்றார்களா?

Am 'indahumul ghaibu fahum yaktuboon

அல்லது இவர்களிடம் மறைவான விஷய(த்தின் ஞான)ம் இருக்கின்றதா? இவர்கள் (அதனை அல்லாஹ்வைப் போல்) எழுதி வருகின்றனரா?

Tafseer

أَمْ
?
يُرِيدُونَ
நாடுகின்றனர்
كَيْدًاۖ
சூழ்ச்சியை
فَٱلَّذِينَ كَفَرُوا۟
ஆனால், நிராகரித்தவர்கள்தான்
هُمُ ٱلْمَكِيدُونَ
சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள்

Am yureedoona kaidan fallazeena kafaroo humul makeedoon

அல்லது யாதொரு சூழ்ச்சி செய்ய இவர்கள் கருது கின்றனரா? அவ்வாறாயின், இந்நிராகரிப்பவர்கள்தாம் சூழ்ச்சிக் குள்ளாவார்கள்.

Tafseer

أَمْ لَهُمْ
அவர்களுக்கு உண்டா?
إِلَٰهٌ
(வேறு) கடவுள்
غَيْرُ ٱللَّهِۚ
அல்லாஹ்வை அன்றி
سُبْحَٰنَ
மகா பரிசுத்தமானவன்
ٱللَّهِ
அல்லாஹ்
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பதை விட்டும்

Am lahum ilaahun ghairul laa; subhaanal laahi 'ammaa yushrikoon

அல்லது அல்லாஹ்வையன்றி இவர்களுக்கு வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? இவர்கள் இணை வைப்பவைகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.

Tafseer

وَإِن يَرَوْا۟
அவர்கள் பார்த்தால்
كِسْفًا
துண்டுகளை
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
سَاقِطًا
விழக்கூடிய(து)
يَقُولُوا۟
அவர்கள் கூறுவார்கள்
سَحَابٌ
மேகங்கள்
مَّرْكُومٌ
ஒன்று சேர்ந்த(வை)

Wa iny yaraw kisfam minas samaaa'i saaqitany yaqooloo sahaabum markoom

வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம் தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள்.

Tafseer

فَذَرْهُمْ
ஆகவே, அவர்களை விட்டுவிடுவீராக!
حَتَّىٰ
வரை
يُلَٰقُوا۟
அவர்கள் சந்திக்கின்ற
يَوْمَهُمُ
அவர்களுடைய நாள்
ٱلَّذِى
எது
فِيهِ
அதில்
يُصْعَقُونَ
அழிந்துவிடுகின்ற

Fazarhum hatta yulaaqoo yawmahumul lazee feehi yus'aqoon

(நபியே!) இவர்களுடைய அறிவு பறந்துவிடக் கூடிய நாளை இவர்கள் சந்திக்கும் வரையில் நீங்கள் இவர்களை விட்டுவிடுங்கள்.

Tafseer

يَوْمَ
அந்நாளில்
لَا يُغْنِى
தடுக்காது
عَنْهُمْ
அவர்களை விட்டும்
كَيْدُهُمْ
அவர்களின் சூழ்ச்சி
شَيْـًٔا
எதையும்
وَلَا هُمْ
அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்கள்

Yawma laa yughnee 'anhum kaidumhum shai'anw wa laa hum yunsaroon

அந்நாளில் இவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றுமே இவர்களுக்குப் பயனளிக்காது. எவர்களுடைய உதவியும் இவர் களுக்குக் கிடைக்காது.

Tafseer

وَإِنَّ لِلَّذِينَ
நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு
عَذَابًا
வேதனை
دُونَ ذَٰلِكَ
அதற்கு முன்னரே
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa inna lillazeena zalamoo 'azaaban doona zalika wa laakinna aksarahum laa ya'lamoon

நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையில்) வேதனையன்றி (இம்மையிலும்) வேதனையிருக்கின்றது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.

Tafseer

وَٱصْبِرْ
பொறுமையாக இருப்பீராக!
لِحُكْمِ
தீர்ப்புக்காக
رَبِّكَ
உமது இறைவனின்
فَإِنَّكَ
நிச்சயமாக நீர்
بِأَعْيُنِنَاۖ
நமது கண்களுக்கு முன்னால்
وَسَبِّحْ
நீர் துதிப்பீராக
بِحَمْدِ
புகழ்ந்து
رَبِّكَ
உமது இறைவனை
حِينَ
நேரத்தில்
تَقُومُ
எழும்

Wasbir lihukmi rabbika fa innaka bi-a'yuninaa wa sabbih bihamdi rabbika heena taqoom

(நபியே!) உங்களது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நீங்கள் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர்கள். (ஆகவே, அவர்கள் உங்களைத் தங்கள் இஷ்டப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீங்கள் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உங்களது இறைவனின் புகழைக் கூறித் துதி செய்வீராக!

Tafseer

وَمِنَ ٱلَّيْلِ
இன்னும் இரவில்
فَسَبِّحْهُ
அவனை துதிப்பீராக!
وَإِدْبَٰرَ
இன்னும் மறைந்த பின்னர்
ٱلنُّجُومِ
நட்சத்திரங்கள்

Wa minal laili fasabbihhu wa idbaaran nujoom

இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனை துதி செய்து கொண்டிருப்பீராக!

Tafseer