Skip to main content

عَلَىٰٓ أَن
நாங்கள் மாற்றுவதற்கு
أَمْثَٰلَكُمْ
உங்கள் உருவங்களை
وَنُنشِئَكُمْ
இன்னும் உங்களை உருவாக்கிவிடுவதற்கு
فِى مَا
நீங்கள் அறியாத ஒன்றில்

'Alaaa an nubaddila amsaalakum wa nunshi'akum fee maa laa ta'lamoon

நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
عَلِمْتُمُ
நீங்கள் அறிந்தீர்கள்.
ٱلنَّشْأَةَ
படைத்திருப்பதை
ٱلْأُولَىٰ
முதல் முறை
فَلَوْلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?

Wa laqad 'alimtumun nash atal oolaa falaw laa tazakkaroon

முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.)

Tafseer

أَفَرَءَيْتُم
நீங்கள் அறிவியுங்கள்!
مَّا تَحْرُثُونَ
எதை/உழுகின்றீர்கள்

Afara'aytum maa tahrusoon

(நீங்கள் பூமியில்) பயிரிடுபவைகளைக் கவனித்தீர்களா?

Tafseer

ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ
அதை நீங்கள் முளைக்க வைக்கின்றீர்களா?
أَمْ
அல்லது
نَحْنُ
நாம்தான்
ٱلزَّٰرِعُونَ
முளைக்க வைக்கின்றோமா?

'A-antum tazra'oonahooo am nahnuz zaari'ooon

அதனை, நீங்கள் (முளைப்பித்துப்) பயிராக்குகின்றீர்களா அல்லது நாம் பயிராக்குகின்றோமா?

Tafseer

لَوْ نَشَآءُ
நாம் நாடினால்
لَجَعَلْنَٰهُ
அதை ஆக்கிவிடுவோம்
حُطَٰمًا
குப்பையாக
فَظَلْتُمْ
நீங்கள் ஆகி இருப்பீர்கள்
تَفَكَّهُونَ
நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக

Law nashaaa'u laja'al naahu hutaaman fazaltum tafakkahoon

நாம் விரும்பினால், அதனை (விளையாத) சாவிகளாக்கி விடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்டு,

Tafseer

إِنَّا لَمُغْرَمُونَ
நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்

Innaa lamughramoon

"நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம்,

Tafseer

بَلْ نَحْنُ
மாறாக/நாங்கள்
مَحْرُومُونَ
பெரும் இழப்புக்குள்ளானவர்கள்

Bal nahnu mahroomoon

அன்றி, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

Tafseer

أَفَرَءَيْتُمُ
அறிவியுங்கள்!
ٱلْمَآءَ
தண்ணீரைப் பற்றி
ٱلَّذِى
எது
تَشْرَبُونَ
குடிக்கின்றீர்கள்

Afara'aytumul maaa'allazee tashraboon

நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா?

Tafseer

ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ
அதை நீங்கள் இறக்கினீர்களா?
مِنَ ٱلْمُزْنِ
கார்மேகத்தில் இருந்து
أَمْ نَحْنُ
அல்லது/நாம்தான்
ٱلْمُنزِلُونَ
இறக்குகின்றவர்களா?

'A-antum anzaltumoohu minal muzni am nahnul munziloon

மேகத்திலிருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா?

Tafseer

لَوْ نَشَآءُ
நாம் நாடினால்
جَعَلْنَٰهُ
அதை ஆக்கிவிடுவோம்
أُجَاجًا
உப்பு நீராக
فَلَوْلَا تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

Law nashaaa'u ja'alnaahu ujaajan falaw laa tashkuroon

நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்புநீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

Tafseer