Zaalika al lam yakkur Rabbuka muhlikal quraa bizulminw wa ahluhaa ghaafiloon
(நபியே! இவ்வாறு நபிமார்களை அனுப்புவதன் காரணமெல்லாம்) அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உங்களது இறைவன் இருக்கவில்லை என்பதுதான்.
Wa likullin darajaatum mimmaa 'amiloo; wa maa Rabbuka bighaafilin 'ammaa ya'maloon
(நபியே! அவர்கள்) அனைவருக்கும் அவர்களின் செயல்களுக்குத் தக்க பதவிகள் உண்டு. அவர்கள் செயல்களைப் பற்றி உங்களுடைய இறைவன் பராமுகமாயில்லை.
Wa Rabbukal ghaniyyu zur rahmah; iny yashaaa yuz hibkum wa yastakhlif mim ba'dikum wa yastakhlif mim ba'dikum maa yashaaa'u kamaaa ansha akum min zurriyyati qawmin aakhareen
(நபியே!) உங்களது இறைவன் (எத்தகைய) தேவையற்றவனாகவும் அன்புடையவனாகவும் இருக்கின்றான். (மனிதர்களே!) அவன் விரும்பினால் உங்களைப் போக்கி தான் நாடிய எவரையும் உங்களுடைய இடத்தில் அமர்த்தி விடுவான். இவ்வாறே (சென்று போன) மற்ற மக்களின் சந்ததிகளிலிருந்து உங்களை உற்பத்தி செய்திருக்கிறான்.
Inna maa too'adoona la aatinw wa maaa antum bimu'jizeen
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (அந்த இறுதி) நாள் நிச்சயமாக வந்தே தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது.
Qul yaa qawmi' maloo 'alaa makaanatikum innee 'aamilun fasawfa ta'lamoona man takoonu lahoo 'aaqibatud daar; innahoo laa yuflihuz zaalimoon
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள்) காரியங்களைச் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக நானும் (என் போக்கில் என்) காரியங்களைச் செய்து கொண்டிருப்பேன். இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாக இருக்கின்றது என்பதை பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்."
Wa ja'aloo lillaahi mimmaa zara-a minal harsi walan'aami naseeban faqaaloo haazaa lillaahi biza'mihim wa haaza lishurakaa'inaa famaa kaana lishurakaaa'ihim falaa yasilu ilal laahi wa maa kaana lillaahi fahuwa yasilu ilaa shurakaaa'ihim; saaa'a maa yahkumoon
விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு "இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய தெய்வங்களுக்கு" என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாயிருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது.
Wa kazaalika zaiyana likaseerim minal mushrikeena qatla awlaadihim shurakaaa'uhum liyurdoohum wa liyalbisoo 'alaihim deenahum wa law shaaa'al laahu maa fa'aloohu fazarhum wa maa yaftaroon
இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுங்கள்.
Wa qaaloo haaziheee an'aamunw wa harsun hijrun laa yat'amuhaaa illaa man nashaaa'u biza'mihim wa an'aamun hurrimat zuhooruhaa wa an'aamul laa yazkuroonas mal laahi 'alaihaf tiraaa'an 'alaih; sa yajzeehim bimaa kaanoo yaftaroon
(அன்றி அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) "இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர் ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக்கூடாது" என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத் தக்க கூலியை (இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான்.
Wa qaaloo maa fee butooni haazihil an'aami khaalisatul lizukoorinaa wa muharramun 'alaaa azwaajinaa wa iny yakum maitatan fahum feehi shurakaaa'; sa yajzeehim wasfahum; innahoo Hakeemun 'Aleem
அன்றி, அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) "இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்களுடைய ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்களுடைய பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு" (அப்போது பெண்களும் புசிக்கலாம்.) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர் களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
Qad khasiral lazeena qatalooo awlaadahum safaham bighairi 'ilminw wa harramoo maa razaqahumul laahuf tiraaa'an 'alal laah; qad dalloo wa maa kaanoo muhtadeen
எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் மக்களைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய்கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர் களன்று; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர்.