Skip to main content

قُلْ
கூறுவீராக!
إِنِّى
நிச்சயமாக நான்
لَآ أَمْلِكُ
உரிமை பெறமாட்டேன்
لَكُمْ
உங்களின்
ضَرًّا
கெட்டதற்கும்
وَلَا رَشَدًا
நல்லதற்கும்

Qul innee laaa amliku lakum darranw wa laa rashadaa

நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய ஒரு சிறிதும் சக்தியற்றவன்" என்றும் கூறுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنِّى
நிச்சயமாக நான்
لَن يُجِيرَنِى
என்னை அறவே காப்பாற்ற மாட்டார்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
أَحَدٌ
ஒருவரும்
وَلَنْ أَجِدَ
இன்னும் அறவே காணமாட்டேன்
مِن دُونِهِۦ
அவனையன்றி
مُلْتَحَدًا
ஒதுங்குமிடத்தை

Qul innee lany yujeeranee minal laahi ahad, wa lan ajida min doonihee multahadaa

நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன்.

Tafseer

إِلَّا بَلَٰغًا
தவிர/ எடுத்துரைப்பதற்கும்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
وَرِسَٰلَٰتِهِۦۚ
அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும்
وَمَن
எவர்
يَعْصِ
மாறு செய்வாரோ
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
فَإِنَّ
நிச்சயமாக
لَهُۥ
அவருக்கு
نَارَ
நெருப்புதான்
جَهَنَّمَ
நரக
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்
فِيهَآ
அதில்
أَبَدًا
எப்போதும்

Illaa balaagham minal laahi wa risaalaatih; wa many ya'sil laaha wa rasoolahoo fa inna lahoo naara jahannama khaalideena feehaaa abadaa

ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள்.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا رَأَوْا۟
அவர்கள் பார்த்தால்
مَا يُوعَدُونَ
தாங்கள் எச்சரிக்கப்பட்டதை
فَسَيَعْلَمُونَ
அறி(ந்து கொள்)வார்கள்
مَنْ
எவர்
أَضْعَفُ
மிக பலவீனமானவர்
نَاصِرًا
உதவியாளரால்
وَأَقَلُّ
இன்னும் மிக குறைவானவர்
عَدَدًا
எண்ணிக்கையால்

Hattaaa izaa ra aw maa yoo'adoona fasaya'lamoona man ad'afu naasiranw wa aqallu 'adadaa

பயமுறுத்தப்பட்ட வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் சமயத்தில், எவனுடைய உதவியாளர்கள், மிக்க பலவீனமானவர்கள் என்பதையும் (எவருடைய உதவியாளர்) மிக்க குறைந்த தொகையினர் என்பதையும் சந்தேகமின்றி அறிந்து கொள்வார்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنْ أَدْرِىٓ
அறியமாட்டேன்
أَقَرِيبٌ
சமீபமாக உள்ளதா
مَّا تُوعَدُونَ
நீங்கள் எச்சரிக்கப்படுவது
أَمْ يَجْعَلُ
அல்லது ஆக்கி இருக்கின்றானா?/அதற்கு
رَبِّىٓ
என் இறைவன்
أَمَدًا
ஒரு அவகாசத்தை

Qul in adreee a qareebum maa too'adoona am yaj'alu lahoo rabbeee amadaa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை சமீபத்தில் இருக்கின்றதா? அல்லது எனதிறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தி இருக்கின்றானா என்பதை நான் அறியமாட்டேன்.

Tafseer

عَٰلِمُ
நன்கறிந்தவன்
ٱلْغَيْبِ
மறைவான ஞானங்களை
فَلَا يُظْهِرُ
வெளிப்படுத்த மாட்டான்
عَلَىٰ غَيْبِهِۦٓ
அவன் தன் மறைவான ஞானங்களை
أَحَدًا
ஒருவருக்கும்

'Aalimul ghaibi falaa yuzhiru alaa ghaibiheee ahadaa

அவன்தான் மறைவான இவ்விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவன். மறைவாக உள்ள இவ்விஷயங்களை அவன் ஒருவருக்கும் வெளிப்படுத்துவதும் இல்லை.

Tafseer

إِلَّا
தவிர
مَنِ
எவர்(களை)
ٱرْتَضَىٰ
திருப்திகொண்டானோ
مِن رَّسُولٍ
தூதர்களில்
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவன்
يَسْلُكُ
அனுப்புவான்
مِنۢ بَيْنِ
அவர்களுக்கு முன்னும்
وَمِنْ خَلْفِهِۦ
அவர்களுக்குப் பின்னும்
رَصَدًا
பாதுகாவலர்களை

Illaa manir tadaa mir rasoolin fa innahoo yasluku mim baini yadihi wa min khalfihee rasadaa

ஆயினும், (தன்னுடைய) தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு (அதனை அவன் அறிவிக்கக் கூடும். அதனை அவன் அவர்களுக்கு அறிவித்த சமயத்தில்) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் பின்னும் (ஒரு மலக்கைப்) பாதுகாப்பவராக அனுப்பி வைக்கின்றான்.

Tafseer

لِّيَعْلَمَ
அவர் அறிவதற்காக
أَن قَدْ
என்று/திட்டமாக
أَبْلَغُوا۟
எடுத்துரைத்தார்கள்
رِسَٰلَٰتِ
தூதுத்துவ செய்திகளை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
وَأَحَاطَ
இன்னும் சூழ்ந்து அறிவான்
بِمَا لَدَيْهِمْ
அவர்களிடம் உள்ளவற்றை
وَأَحْصَىٰ
இன்னும் கணக்கிட்டுள்ளான்
كُلَّ شَىْءٍ
எல்லா பொருள்களையும்
عَدَدًۢا
எண்ணிக்கையால்

Liya'lama an qad ablaghoo risaalaati rabbihim wa ahaata bima ladihim wa ahsaa kulla shai'in 'adadaa

(அத்தூதர்கள்) தங்கள் இறைவனின் தூதை மெய்யாகவே எத்தி வைத்தார்கள் என்பதை, தான் அறிந்து கொள்வதற்காக (அவ்வாறு பாதுகாப்பாளரை அனுப்புகின்றான்). அவர்களிடம் உள்ளவைகளை அவன் தன் ஞானத்தால் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு பொருளின் கணக்கையும் முழுமையாக அறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer