Skip to main content

وَإِن كَذَّبُوكَ
அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
فَقُل
கூறுவீராக
لِّى
எனக்கு
عَمَلِى
என் செயல்
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
عَمَلُكُمْۖ
உங்கள் செயல்
أَنتُم
நீங்கள்
بَرِيٓـُٔونَ
நீங்கியவர்கள்
مِمَّآ
எதிலிருந்து
أَعْمَلُ
செய்கிறேன்
وَأَنَا۠
இன்னும் நான்
بَرِىٓءٌ
நீங்கியவன்
مِّمَّا
எதிலிருந்து
تَعْمَلُونَ
நீங்கள் செய்கிறீர்கள்

Wa in kazzabooka faqul lee 'amalee wa lakum 'amalukum antum bareee'oona mimmaaa a'malu wa ana bareee'um mimmaa ta'maloon

(நபியே!) உங்களை பொய்யரென அவர்கள் கூறினால் (நீங்கள் அவர்களை நோக்கி "நன்மையோ தீமையோ) என் செய்கை(யின் பலன்) எனக்குரியது; (அவ்வாறே) உங்கள் செய்கை(யின் பலன்) உங்களுக்குரியது. என் செய்கையி(ன் பலனி)லிருந்து நீங்கள் விடுபட்டவர்கள்; உங்கள் செய்கையி(ன் பலனி)லிருந்து நான் விடுபட்டவன்" என்று கூறுங்கள்.

Tafseer

وَمِنْهُم
அவர்களில்
مَّن
எவர்
يَسْتَمِعُونَ
செவிமடுக்கிறார்கள்
إِلَيْكَۚ
உம் பக்கம்
أَفَأَنتَ تُسْمِعُ
நீர் கேட்கவைப்பீரா?
ٱلصُّمَّ
செவிடர்களை
وَلَوْ كَانُوا۟
அவர்கள்இருந்தாலும்
لَا يَعْقِلُونَ
சிந்தித்து புரிய மாட்டார்கள்

Wa minhum mai yastami'oona iliak; afa anta tusmi'us summa wa law kaanoo la ya'qiloon

அவர்களில், உங்களுடைய வார்த்தையைக் கேட்போ(ரைப் போல் பாவனை செய்வோ)ரும் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டார்கள் என்று நீங்கள் எண்ணிவிட்டீர்களா?) ஒன்றையுமே (செவியுற்று) அறிந்துகொள்ள முடியாத முழுச் செவிடர்களை செவி கேட்கும்படிச் செய்ய உங்களால் முடியுமா?

Tafseer

وَمِنْهُم
இன்னும் அவர்களில்
مَّن يَنظُرُ
எவர்/பார்க்கிறார்
إِلَيْكَۚ
உம் பக்கம்
أَفَأَنتَ
நீர்
تَهْدِى
நேர்வழிசெலுத்துவீரா?
ٱلْعُمْىَ
குருடர்களை
وَلَوْ كَانُوا۟
அவர்கள் இருந்தாலும்/பார்க்க மாட்டார்கள்

Wa minhum mai yanzuru ilaik; afa anta tahdil 'umya wa law kaanoo laa yubsiroon

உங்களைப் பார்ப்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களை அறிந்து கொண்டார்கள் என எண்ணி விட்டீர்களா?) யாதொன்றையும் பார்க்க முடியாத பிறவிக் குருடர்களைப் பார்க்கும்படிச் செய்ய உங்களால் முடியுமா?

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَظْلِمُ
அநீதியிழைக்க மாட்டான்
ٱلنَّاسَ
மனிதர்களுக்கு
شَيْـًٔا
ஒரு சிறிதும்
وَلَٰكِنَّ
எனினும்
ٱلنَّاسَ
மனிதர்கள்
أَنفُسَهُمْ
தங்களுக்கே
يَظْلِمُونَ
அநீதியிழைக்கின்றனர்

Innal laaha laa yazlimun naasa shai'anw wa laakin nannaasa anfusahum yazlimoon

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு அறவே தீங்கிழைப்பது இல்லை. எனினும், மனிதர்கள் (தீய செயல்களைச் செய்து) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.

Tafseer

وَيَوْمَ
நாளில்
يَحْشُرُهُمْ
ஒன்று சேர்ப்பான் அவர்களை
كَأَن
போன்று
لَّمْ يَلْبَثُوٓا۟
அவர்கள் தங்கவில்லை
إِلَّا سَاعَةً
தவிர/ஒரு நேரம்
مِّنَ ٱلنَّهَارِ
பகலில்
يَتَعَارَفُونَ
அறிந்துகொள்வார்கள்
بَيْنَهُمْۚ
தங்களுக்குள்
قَدْ خَسِرَ
திட்டமாக நஷ்டமடைந்தார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
بِلِقَآءِ
சந்திப்பை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَمَا كَانُوا۟
அவர்கள் இருக்கவில்லை
مُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களாக

Wa Yawma yahshuruhum ka al lam yalbasooo illaa saa'atam minan nahaari yata'aarafoona bainahum; qad khasiral lazeena kazzaboo biliqaaa'il laahi wa maa kaanoo muhtadeen

(விசாரணைக்காக) அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் ஒரு பகலில் சொற்ப நேரத்தைத் தவிர (இவ்வுலகில்) தாங்கள் தங்கவில்லை என்று அவர்கள் எண்ணுவதுடன், தங்களுக்குள் ஒருவரையொருவர் அறிந்தும் கொள்வார்கள். (ஆனால், ஒருவருக் கொருவர் உதவி செய்ய முன்வரார்.) அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யாக்கியவர்கள் நிச்சயமாக (அந்த நாளில்) நஷ்டமடைந்தே இருப்பார்கள். (அந்நஷ்டத்திலிருந்து மீள) வழி காணாதவர்களாகவும் இருப்பார்கள்.

Tafseer

وَإِمَّا نُرِيَنَّكَ
நிச்சயம் காண்பிப்போம்/உமக்கு
بَعْضَ ٱلَّذِى
சிலவற்றை/எதை
نَعِدُهُمْ
வாக்களிக்கிறோம் அவர்களுக்கு
أَوْ
அல்லது
نَتَوَفَّيَنَّكَ
கைப்பற்றிக் கொள்வோம்/உம்மை
فَإِلَيْنَا
நம் பக்கமே
مَرْجِعُهُمْ
மீளுமிடம்/அவர்களுடைய
ثُمَّ
பிறகு
ٱللَّهُ
அல்லாஹ்
شَهِيدٌ
சாட்சியாக இருப்பான்
عَلَىٰ مَا
அவர்கள் செய்தவற்றிற்கு

Wa imma nuriyannaka ba'dal lazee na'iduhum aw natawaffayannaka fa ilainaa marji'uhum summal laahu shaheedun 'alaa maa yaf'aloon

(நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உங்களுடைய வாழ்க்கை காலத்திலேயே) நீங்கள் பார்க்கும்படிச் செய்வோம்; அல்லது அவை வருவதற்கு முன்னர்) நாம் உங்களைக் கைப்பற்றிக் கொள்வோம். எவ்வாறாயினும் அவர்கள் நம்மிடம்தான் வர வேண்டியதிருக்கிறது. அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றான்.

Tafseer

وَلِكُلِّ
ஒவ்வொருவருக்கும்
أُمَّةٍ
ஒரு சமுதாயம்
رَّسُولٌۖ
ஒரு தூதர்
فَإِذَا
போது
جَآءَ
வரும்
رَسُولُهُمْ
தூதர்/அவர்களுடைய
قُضِىَ
தீர்ப்பளிக்கப்படும்
بَيْنَهُم
அவர்களுக்கிடையில்
بِٱلْقِسْطِ
நீதமாக
وَهُمْ
இன்னும் அவர்கள்
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Wa likulli ummatir Rasoolun fa izaa jaaa'a Rasooluhum qudiya bainahum bilqisti wa hum laa yuzlamoon

ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை.

Tafseer

وَيَقُولُونَ
அவர்கள் கேட்கின்றனர்
مَتَىٰ
எப்போது
هَٰذَا
இந்த
ٱلْوَعْدُ
வாக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen

"நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (நீங்கள் பயமுறுத்தும்) வேதனை எப்பொழுது (வரும்)?" என்று அவர்கள் கேட்கின்றனர்.

Tafseer

قُل
கூறுவீராக
لَّآ أَمْلِكُ
உரிமை பெறமாட்டேன்
لِنَفْسِى
எனக்கு
ضَرًّا
தீமைக்கோ
وَلَا نَفْعًا
இன்னும் நன்மைக்கோ
إِلَّا
தவிர
مَا
எதை
شَآءَ
நாடினான்
ٱللَّهُۗ
அல்லாஹ்
لِكُلِّ
ஒவ்வொரு
أُمَّةٍ
வகுப்பார்
أَجَلٌۚ
தவணை
إِذَا جَآءَ
வந்தால்
أَجَلُهُمْ
தவணை/அவர்களுடைய
فَلَا يَسْتَـْٔخِرُونَ
பிந்தமாட்டார்கள்
سَاعَةًۖ
ஒரு சிறிது நேரம்
وَلَا يَسْتَقْدِمُونَ
இன்னும் முந்த மாட்டார்கள்

Qul laaa amliku linafsee darranw wa laa naf'an illaa maa shaaa'al laah; likulli ummatin ajalun izaa jaaa'a ajaluhum falaaa yastaakhiroona saa'a tanw wa laa yastaqdimoon

(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் நாடியதையன்றி யாதொரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள சக்தியற்றவன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு நாழிகையும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்." அத்தவணையில் அவர்கள் காரியம் முடிவு பெற்றுவிடும்.

Tafseer

قُلْ
கூறுவீராக
أَرَءَيْتُمْ
அறிவிப்பீர்களாக
إِنْ أَتَىٰكُمْ
வந்தால்/உங்களுக்கு
عَذَابُهُۥ
வேதனை/ அவனுடைய
بَيَٰتًا
இரவில்
أَوْ
அல்லது
نَهَارًا
பகலில்
مَّاذَا
எதை
يَسْتَعْجِلُ
அவசரமாக தேடுகின்றனர்
مِنْهُ
அதிலிருந்து
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்

Qul ara'aitum in ataakum 'azaabuhoo bayaatan aw nahaaram maazaa yasta'jilu minhul mujrimoon

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அவனுடைய வேதனை இரவிலோ பகலிலோ (எந்நேரத்திலாயினும்) உங்களிடம் வரும் பட்சத்தில் (அதனை நீங்கள் தடுத்துவிட முடியுமா என்பதைக்) கவனித்தீர்களா? (நபியே!) எதற்காக இக்குற்றவாளிகள் (வேதனை எப்பொழுது வரும்... எப்பொழுது வரும்... என்று கேட்டு) அவசரப்படுகின்றனர்?"

Tafseer