Alif-Laaam-Meeem-Raa; tilka Aayaatul Kitaab; wallazee unzila ilaika mir Rabbikal haqqu wa laakinna aksaran naasi laa yu'minoon
அலிஃப்; லாம்; மீம்; றா. இவை இவ்வேதத்தின் சில வசனங்களாகும். (நபியே!) உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்படும் இது முற்றிலும் உண்மையானது. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) நம்புவதில்லை.
Allaahul lazee raf'as samaawaati bighairi 'amadin tarawnahaa summas tawaa 'alal 'Arshi wa sakhkharash shamsa walqamara kulluny yajree li ajalim musammaa; yudabbirul amra yufassilil Aayaati la'allakum biliqaaa'i Rabbikum tooqinoon
வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதனை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். அன்றி, அர்ஷின் மீது அவன் (தன் மகிமைக்கு தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத் திற்குள் வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சலக காரியங்களையும் அவனே திட்டமிடுகின்றான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்னுடைய) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து அறிவிக்கிறான்.
Wa Huwal lazee maddal arda wa ja'ala feehaa rawaasiya wa anhaaraa; wa min kullis samaraati ja'ala feehaa zawjainis yaini Yughshil lailan nahaar; inna fee zaalika la aayaatil liqawminy yatafakkaroon
அவன்தான் பூமியை விரித்து, அதில் உறுதியான (பெரிய பெரிய) மலைகளையும் (நீண்ட) ஆறுகளையும் அமைத்தான். ஒவ்வொரு கனிவர்க்கத்(தின் மரங்களையும் ஆண் பெண் கொண்ட ஜ)தை ஜதைகளாக்கினான். இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Wa fil ardi qita'um muta jaawiraatunw wa jannaatum min a'naabinw wa zar'unw wa nakheelun sinwaanunw wa ghairu sinwaaniny yusqaa bimaaa'inw waahid; wa nufaddilu ba'dahaa 'alaa ba'din fil-ukul; inna fee zaalika la aayaatil liqawminy ya'qiloon
பூமியில் பல தொகுதிகளை சேர்ந்தாற்போல் அமைத்து (அதில்) திராட்சை, தானியப்பயிர் நிலங்களையும், பேரீச்சந் தோப்புகளையும் ஆக்கினான்; கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான மரங்களையும் (உற்பத்தி செய்கிறான். இவை அனைத்திற்கும்) ஒரேவித நீர் புகட்டப்பட்டபோதிலும், சிலவற்றைவிட சிலவற்றை சுவையில் நாம் மேன்மையாக்கி வைத்தோம். இதில், அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Wa in ta'jab fa'ajabun qawluhm 'a-izaa kunna turaaban 'a-inna lafee khalqin jadeed; ulaaa 'ikal lazeena kafaroo bi Rabbihim wa ulaaa'ikal aghlaalu feee a'naaqihim wa ulaa'ika Ashaabun Naari hum feehaa khaalidoon
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் உங்களைப் பொய்யாக்குவது பற்றி) நீங்கள் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதனை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) "நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?" என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவனையே நிராகரிக்கின்றனர். (ஆகவே மறுமையில்) இவர்களுடைய கழுத்தில் விலங்கிடப்படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள்.
Wa yasta'jiloonaka bis saiyi'ati qablal hasanati wa qad khalat min qablihimul masulaat; wa inna Rabbaka lazoo maghfiratil linnaasi 'alaa zulmihim wa inna Rabbaka lashadeedul 'iqaab
(நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக் கொள்ள இவர்கள் உங்களிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்தபோதிலும், நிச்சயமாக உங்கள் இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவனாகவும் இருக்கின்றான்.
Wa yaqoolul lazeena kafaroo law laaa unzila 'alaihi Aayatum mir Rabbih; innamaaa anta munzirunw wa likulli qawmin haad
"(நபியே!) இந்நிராகரிப்பவர்கள் (உங்களைப் பற்றி) இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சி அருளப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (நபியே!) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே அன்றி வேறில்லை; (ஆகவே, அவர்கள் விரும்பியவாறெல்லாம் செய்யவேண்டுவது உங்களது கடமை அன்று. இவ்வாறே) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (ஒரு) வழிகாட்டி வந்திருக்கிறார்.
Allaahu ya'lamu maa tahmilu kullu unsaa wa maa tagheedul arhaamu wa maa tazdaad, wa kullu shai'in 'indahoo bimiqdaar
ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்ப(து ஆணா, பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகிறான். கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் சமயம்) சுருங்குவதையும், (பிரசவிக்கும் பொழுது) அவை விரிவதையும் அவன் அறிகிறான். (கர்ப்பங்களிலுள்ள) ஒவ்வொன்றிலும் (அக்கர்ப்பங்களில் தங்கியிருக்க வேண்டிய காலம் ஆகியவை) அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன.
'Aalimul Ghaibi wash shahaadatil Kaabeerul Muta'aal
(இது மட்டுமா! மற்ற அனைத்தின்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன்.
Sawaaa'um minkum man asarral qawla wa man jahara bihee wa man huwa mustakhfim billaili wa saaribum binnahaar
உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதனை பகிரங்கமாகக் கூறினாலும் அவருக்கு (இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அவருக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்.)
القرآن الكريم: | الرعد |
---|---|
ஸஜ்தா (سجدة): | 15 |
ஸூரா (latin): | Ar-Ra'd |
ஸூரா: | 13 |
வசனம்: | 43 |
Total Words: | 855 |
Total Characters: | 3506 |
Number of Rukūʿs: | 6 |
Classification (Revelation Location): | மதனீ |
Revelation Order: | 96 |
Starting from verse: | 1707 |