Skip to main content

وَلَوْ يُؤَاخِذُ
தண்டித்தால்
ٱللَّهُ ٱلنَّاسَ
அல்லாஹ்/மக்களை
بِظُلْمِهِم
குற்றத்தின் காரணமாக/அவர்களுடைய
مَّا تَرَكَ
விட்டிருக்க மாட்டான்
عَلَيْهَا
அதன் மீது
مِن دَآبَّةٍ
ஓர் உயிரினத்தை
وَلَٰكِن
எனினும்
يُؤَخِّرُهُمْ
பிற்படுத்துகிறான் அவர்களை
إِلَىٰٓ
வரை
أَجَلٍ
ஒரு தவணை
مُّسَمًّىۖ
குறிப்பிடப்பட்டது
فَإِذَا جَآءَ
வந்தால்
أَجَلُهُمْ
தவணை/அவர்களுடைய
لَا يَسْتَـْٔخِرُونَ
பிந்த மாட்டார்கள்
سَاعَةًۖ
ஒரு விநாடி
وَلَا يَسْتَقْدِمُونَ
இன்னும் முந்த மாட்டார்கள்

Wa law yu'aakhizul laahun naasa bizulminhim maa taraka 'alaihaa min daaabbatinw wa laakiny yu'akhkhiruhum ilaaa ajalim musamman fa izaa jaaa'a ajaluhum laa yastaakhiroona saa'atanw wa laa yastaqdimoon

மனிதர்கள் செய்யும் குற்றங்குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினைத்தையுமே அவன் விட்டுவைக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் (பிடிக்காது) அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வரும் பட்சத்தில் ஒரு விநாடியும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.

Tafseer

وَيَجْعَلُونَ
இன்னும் ஆக்குகின்றனர்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
مَا يَكْرَهُونَ
எதை/வெறுக்கின்றனர்
وَتَصِفُ
இன்னும் வர்ணிக்கின்றன
أَلْسِنَتُهُمُ
நாவுகள்/அவர்களின்
ٱلْكَذِبَ
பொய்யை
أَنَّ
நிச்சயமாக
لَهُمُ
தங்களுக்கு
ٱلْحُسْنَىٰۖ
சொர்க்கம், மிக அழகியது
لَا جَرَمَ
கண்டிப்பாக
أَنَّ
நிச்சயம்
لَهُمُ
இவர்களுக்கு
ٱلنَّارَ
நரகம்தான்
وَأَنَّهُم
இன்னும் நிச்சயம் இவர்கள்
مُّفْرَطُونَ
விடப்படுபவர்கள்

Wa yaj'aloona lillaahi maa yakrahoona wa tasifu alsinatuhumul kaziba anna lahumul husnaa laa jarama anna lahumun Naara wa annahum mufratoon

தாங்கள் விரும்பாதவை(களாகிய பெண் மக்)களை அல்லாஹ்வுக்குக் கற்பிக்கும் இவர்கள் (மறுமையில்) நிச்சயமாக தங்களுக்கு நன்மைதான் கிடைக்குமென்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. நிச்சயமாக இவர்களுக்கு நரகம்தான் என்பதிலும் நரகத்திற்கு முதலாவதாக இவர்கள்தாம் செல்வார்கள் என்பதிலும் சந்தேகமேயில்லை.

Tafseer

تَٱللَّهِ لَقَدْ
அல்லாஹ் மீது சத்தியமாக/திட்டவட்டமாக
أَرْسَلْنَآ
அனுப்பினோம்
إِلَىٰٓ أُمَمٍ
சமுதாயங்களுக்கு
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
فَزَيَّنَ
அழகாக்கினான்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
أَعْمَٰلَهُمْ
அவர்களுடைய செயல்களை
فَهُوَ
ஆகவே அவன்
وَلِيُّهُمُ
அவர்களுக்குநண்பன்
ٱلْيَوْمَ
இன்று
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Tallaahi laqad arsalnaaa ilaaa umamim min qablika fazayyana lahumush Shaitaanu a'maalahum fahuwa waliyyuhumul yawma wa lahum 'azaabun aleem

(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்முடைய) தூதர்களை அனுப்பி வைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக்கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாக இருக்கின்றான். ஆகவே, இவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

وَمَآ أَنزَلْنَا
நாம் இறக்கவில்லை
عَلَيْكَ
உம்மீது
ٱلْكِتَٰبَ
இவ்வேதத்தை
إِلَّا
தவிர
لِتُبَيِّنَ
நீர் தெளிவு படுத்துவதற்காக
لَهُمُ
இவர்களுக்கு
ٱلَّذِى ٱخْتَلَفُوا۟
எது/தர்க்கித்தார்கள்
فِيهِۙ
அதில்
وَهُدًى
இன்னும் நேர்வழி
وَرَحْمَةً
இன்னும் அருளாக
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்

Wa maaa anzalnaa 'alaikal Kitaaba illaa litubaiyina lahumul lazikh talafoo feehi wa hudanw wa rahmatal liqawminy yu'minoon

அன்றி, (நபியே!) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதனை நீங்கள் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உங்கள்மீது நாம் இறக்கி வைத்தோம். அன்றி, நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது.

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
أَنزَلَ
இறக்குகின்றான்
مِنَ
இருந்து
ٱلسَّمَآءِ
மேகம்
مَآءً
மழையை
فَأَحْيَا
இன்னும் உயிர்ப்பிக்கின்றான்
بِهِ
அதன் மூலம்
ٱلْأَرْضَ
பூமியை
بَعْدَ مَوْتِهَآۚ
அது இறந்த பின்னர்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَسْمَعُونَ
செவி சாய்க்கின்றார்கள்

Wallaahu anzala minas samaaa'i maaa'an fa ahyaa bihil arda ba'da mawtihaa; inna fee zaalika la aayatal liqaw miny yasma'oon

அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
لَكُمْ
உங்களுக்கு
فِى ٱلْأَنْعَٰمِ
கால்நடைகளில்
لَعِبْرَةًۖ
ஒரு படிப்பினை
نُّسْقِيكُم
புகட்டுகிறோம்/உங்களுக்கு
مِّمَّا
எதிலிருந்து
فِى بُطُونِهِۦ
அதன் வயிறுகளில்
مِنۢ بَيْنِ
இடையில்
فَرْثٍ
சானம்
وَدَمٍ
இன்னும் இரத்தம்
لَّبَنًا
பாலை
خَالِصًا
கலப்பற்றது
سَآئِغًا
மதுரமானது, இலகுவாக இறங்கக்கூடியது
لِّلشَّٰرِبِينَ
அருந்துபவர்களுக்கு

Wa inna lakum fil an'aami la'ibrah; nusqeekum mimmmaa fee butoonihee mim baini farsinw wa damil labanann khaalisan saaa'ighallish shaaribeen

(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்து பவர்களுக்கு மிக்க இன்பகரமானது.

Tafseer

وَمِن ثَمَرَٰتِ
கனிகளிலிருந்து
ٱلنَّخِيلِ
பேரீச்சை மரத்தின்
وَٱلْأَعْنَٰبِ
இன்னும் திராட்சைகள்
تَتَّخِذُونَ
செய்கிறீர்கள்
مِنْهُ
அதிலிருந்து
سَكَرًا
போதையூட்டக் கூடியது
وَرِزْقًا
இன்னும் உணவு
حَسَنًاۗ
நல்லது
إِنَّ فِى
நிச்சயமாக/இதில்
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றார்கள்

Wa min samaraatin nakheeli wal a'nnaabi tattakhizoona minhu sakaranw wa rizqann hasanaa; inna fee zaalika la Aayatal liqawminy ya'qiloon

பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கின்றீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

Tafseer

وَأَوْحَىٰ
செய்தியளித்தான்
رَبُّكَ
உம் இறைவன்
إِلَى ٱلنَّحْلِ
தேனீக்கு
أَنِ ٱتَّخِذِى
என்று/ அமைத்துக்கொள்
مِنَ ٱلْجِبَالِ
மலைகளில்
بُيُوتًا
வீடுகளை
وَمِنَ ٱلشَّجَرِ
இன்னும் மரங்களில்
وَمِمَّا يَعْرِشُونَ
இன்னும் அவர்கள் கட்டுகிறவற்றில்

Wa awhaa Rabbuka ilannnabli anit takhizee minal jabaali buyootanw wa minash shajari wa mimmaa ya'rishoon

உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான்.

Tafseer

ثُمَّ
பிறகு
كُلِى
புசி
مِن
இருந்து
كُلِّ
ஒவ்வொரு
ٱلثَّمَرَٰتِ
பூக்கள்
فَٱسْلُكِى
இன்னும் செல்
سُبُلَ
வழிகளில்
رَبِّكِ
உனது இறைவனின்
ذُلُلًاۚ
சுலபமாக
يَخْرُجُ
வெளியேறுகிறது
مِنۢ
இருந்து
بُطُونِهَا
அதன் வயிறுகள்
شَرَابٌ
ஒரு பானம்
مُّخْتَلِفٌ
மாறுபட்டது
أَلْوَٰنُهُۥ
அதன் நிறங்கள்
فِيهِ
அதில்
شِفَآءٌ
நிவாரணம்
لِّلنَّاسِۗ
மக்களுக்கு
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்

Summma kulee min kullis samaraati faslukee subula Rabbiki zululaa; yakhruju mim butoonihaa sharaabum mukh talifun alwaanuhoo feehi shifaaa'ul linnaas, innna fee zaalika la Aayatal liqawminy yatafakkaroon

அன்றி "நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
خَلَقَكُمْ
உங்களைப் படைத்தான்
ثُمَّ يَتَوَفَّىٰكُمْۚ
பிறகு/உயிர் கைப்பற்றுகிறான்/உங்களை
وَمِنكُم
இன்னும் உங்களில்
مَّن
எவர்
يُرَدُّ
திருப்பப்படுபவர்
إِلَىٰٓ أَرْذَلِ
வரை/அற்பமானது
ٱلْعُمُرِ
வயது
لِكَىْ
ஆவதற்காக
لَا يَعْلَمَ
அறியமாட்டான்
بَعْدَ
பின்பு
عِلْمٍ شَيْـًٔاۚ
அறிதல்/ஒன்றை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wallaahu khalaqakum suma tatawaffaakum; wa minkum many-yuradu ilaaa arzalil 'umuri likai laa ya'lama ba'da 'ilmin shai'aa; innal laaha 'Aleemun Qadeer

உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனம் தரும் முதுமை வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டுமென்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்.

Tafseer