Wallaahu ja'ala lakum mimmaa khalaqa zilaalanw wa ja'ala lakum minal jibaali aknaananw wa ja'ala lakum saraabeela taqeekumul harra wa saraabeela taqeekum baasakum; kazaalika yutimmu ni'matahoo alaikum la'allakum tuslimoon
அவன் படைத்திருப்பவைகளில் நிழல் தரக்கூடியவற்றையும் உங்களுக்காக அமைத்திருக்கின்றான். மலை(க் குகை)களில் உங்களுக்குத் தங்குமிடங்களையும் அமைத்தான். வெப்பத்தையும் (குளிரையும்) உங்களுக்குத் தடுக்கக் கூடிய சட்டைகளையும், (கத்தி, அம்பு போன்ற) ஆயுதங்களைத் தடுக்கக்கூடிய கேடயங்(கள் செய்யக்கூடிய பொருள்)களையும் அவனே உங்களுக்காக அமைத்தான். அவன் தன்னுடைய அருளை இவ்வாறு உங்கள் மீது முழுமையாக்குகிறான். (இதற்காக) நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக!
Fa in tawallaw fa innamaa 'alaikal balaaghul mubeen
(இவ்வளவெல்லாம் இருந்தும் நபியே!) அவர்கள் (உங்களைப்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள். ஏனென்றால் நம்முடைய) தூதை (அவர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பதுதான் உங்கள்மீது கடமை.
Ya'rifoona ni'matal laahi summa yunkiroonahaa wa aksaruhumul kaafiroon
அல்லாஹ்வின் (இத்தகைய) அருட்கொடையை அவர்கள் நன்கறிந்த பின்னரும் அவனை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர்.
Wa yawma nab'asu min kulli ummatin shaheedan summa laa yu'zanu lillazeena kafaroo wa laa hum yusta'taboon
ஒவ்வொரு வகுப்பாரிடமும் (நாம் அனுப்பிய நம்முடைய தூதரை, அவர்களுக்குச்) சாட்சியாக நாம் அழைக்கும் (நாளை நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். அந்)நாளில் (அத்தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசுவதற்கு) அனுமதி கொடுக்கப்பட மாட்டாது. அன்றி அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லவும் வழியிராது.
Wa izaa ra al lazeena zalamul 'azaaba falaa yukhaf fafu 'anhum wa laa hum yunzaroon
இவ்வக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்ட பிறகு (அவர்கள் என்ன புகல் கூறியபோதிலும்) அவர்களுக்கு (வேதனை) குறைக்கப்பட மாட்டாது. அன்றி, அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படவும் மாட்டாது.
Wa izaa ra al lazeena ashrakoo shurakaaa'ahum qaaloo Rabbana haaa'ulaaa'i shurakaaa'unal lazeena kunnaa nad'oo min doonika fa alqaw ilaihimul qawla innakum lakaaziboon
இணைவைத்து வணங்கும் இவர்கள் தாங்கள் இணையாக்கிய (பொய்) தெய்வங்களை (மறுமையில்) கண்டால் (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! உன்னையன்றி தெய்வங்கள் என்று நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்களுடைய தெய்வங்கள் இவைதாம்" என்று கூறுவார்கள். அதற்கு அவை இவர்களை நோக்கி "நிச்சயமாக நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்; (நாங்கள் தெய்வங்களல்ல)" என்று கூறும்.
Wa alqaw ilal laahi yawma'izinis salama wa dalla 'anhum maa kaanoo yaftaroon
பின்னர், இவர்கள் பொய்யாக (தெய்வங்களென்று) கூறிக் கொண்டு இருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து விடும். அந்நாளில் இவர்கள் அல்லாஹ்வை நோக்கி (உனக்கு) முற்றிலும் வழிப்படுவோம் என்று கூறுவார்கள்.
Allazeena kafaroo wa saddoo 'an sabeelil laahi zidnaahum 'azaaban fawqal 'azaabi bimaa kaanoo yufsidoon
(எனினும், மறுமையையும்) நிராகரித்து அல்லாஹ்வுடைய பாதையையும் தடுத்து (விஷமம் செய்து) கொண்டிருந்த இவர்களுக்கு, இவர்களுடைய விஷமத்தின் காரணமாக வேதனைக்குமேல் வேதனையை அதிகப்படுத்திக் கொண்டேயிருப்போம்.
Wa yawma nab'asu fee kulli ummmatin shaheedan 'alaihim min anfusihim wa ji'naa bika shaheedan 'alaa haaa'ulaaa'; wa nazzalnaa 'alaikal Kitaaba tibyaanal likulli shai'inw wa hudanw wa rahmatanw wa bushraa lilmuslimeen
(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்களிலிருந்தே (அவர்களிடம் வந்த நபியை) சாட்சியாக நாம் அழைக்கும் நாளில், உங்களை (உங்கள் முன் இருக்கும்) இவர்களுக்குச் சாட்சியாகக் கொண்டு வருவோம். (நபியே!) ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக்கூடிய இவ்வேதத்தை நாம்தாம் உங்கள்மீது இறக்கி இருக்கின்றோம். இது நேரான வழியாகவும், அருளாகவும் இருப்பதுடன் (எனக்கு) முற்றிலும் கட்டுப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இருக்கின்றது.
Innal laaha yaamaru bil 'adli wal ihsaani wa eetaaa'i zil qurbaa wa yanhaa 'anil fahshaaa'i wal munkari walbagh-i' ya'izukum la'allakum tazakkkaroon
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், அநியாயம், பாவம் ஆகியவைகளிலிருந்து (உங்களை) அவன் தடை செய்கிறான். (இவைகளை) நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறும் அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.