Skip to main content

وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
فِى ٱلْكِتَٰبِ
இவ்வேதத்தில்
إِبْرَٰهِيمَۚ
இப்றாஹீமை
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
كَانَ
இருக்கிறார்
صِدِّيقًا
உண்மையாளராக
نَّبِيًّا
நபியாக

Wazkur fil Kitaabi Ibraaheem; innahoo kaana siddeeqan Nabiyyaa

(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமை பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராகவும் நபியாகவும் இருந்தார்.

Tafseer

إِذْ قَالَ
(அந்த) சமயத்தை கூறினார்
لِأَبِيهِ
தனது தந்தைக்கு
يَٰٓأَبَتِ
என் தந்தையே
لِمَ تَعْبُدُ
ஏன் வணங்குகிறீர்?
مَا لَا
கேட்காதவற்றை
وَلَا يُبْصِرُ
இன்னும் பார்க்காதவற்றை
وَلَا يُغْنِى
இன்னும் தடுக்காதவற்றை
عَنكَ
உம்மை விட்டு
شَيْـًٔا
எதையும்

Iz qaala li abeehi yaaa abati lima ta'budu maa laa yasma'u wa laa yubsiru wa laa yughnee 'anka shai'aa

அவர் தன் தந்தையை நோக்கி "என் தந்தையே! யாதொன்றைப் பார்க்கவும், கேட்கவும், யாதொரு தீங்கை உங்களுக்குத் தடைசெய்யவும் சக்தியற்ற தெய்வங்களை நீங்கள் ஏன் வணங்குகிறீர்கள்?" என்று கேட்டார்.

Tafseer

يَٰٓأَبَتِ
என் தந்தையே
إِنِّى
நிச்சயமாக நான்
قَدْ جَآءَنِى
எனக்கு வந்திருக்கிறது
مِنَ ٱلْعِلْمِ
கல்வியில்
مَا لَمْ
உமக்கு வரவில்லை
فَٱتَّبِعْنِىٓ
ஆகவே, என்னைப் பின்பற்றுவீராக
أَهْدِكَ
நான் உமக்கு வழிகாட்டுவேன்
صِرَٰطًا
பாதையை
سَوِيًّا
நேரான

Yaaa abati innee qad jaaa'anee minal 'ilmi maa lam yaatika fattabi'neee ahdika siraatan Sawiyyaa

(அன்றி) "என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத கல்வி ஞானத்தை நான் (என் இறைவன் அருளால்) அடைந்திருக்கிறேன். நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நேரான வழியில் நடத்துவேன்.

Tafseer

يَٰٓأَبَتِ
என் தந்தையே
لَا تَعْبُدِ
வணங்காதீர்
ٱلشَّيْطَٰنَۖ
ஷைத்தானை
إِنَّ
நிச்சயமாக
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தான்
كَانَ
இருக்கிறான்
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
عَصِيًّا
மாறுசெய்பவனாக

Yaaa abati laa ta'budish Shaitaana innash Shaitaana kaana lir Rahmaani 'asiyyaa

என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَبَتِ
என் தந்தையே
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
நான் பயப்படுகிறேன்
أَن يَمَسَّكَ
உம்மைவந்தடைந்தால்
عَذَابٌ
ஒரு வேதனை
مِّنَ
இருந்து
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளன்
فَتَكُونَ
நீர் ஆகிவிடுவீர்
لِلشَّيْطَٰنِ
ஷைத்தானுக்கு
وَلِيًّا
நண்பராக

Yaaa abati innee akhaafu ai yamssaka 'azaabum minar Rahmaani fatakoona lish Shaitaani waliyyaa

என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று மெய்யாகவே நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கே நண்பர்களாகி விடுவீர்கள்" (என்று கூறினார்).

Tafseer

قَالَ
கூறினார்
أَرَاغِبٌ
நீ வெறுக்கிறாயா?
أَنتَ
நீ
عَنْ ءَالِهَتِى
என் தெய்வங்களை
يَٰٓإِبْرَٰهِيمُۖ
இப்றாஹீமே
لَئِن لَّمْ
நீர் விலகவில்லை என்றால்
لَأَرْجُمَنَّكَۖ
நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன்
وَٱهْجُرْنِى
இன்னும் என்னை விட்டு விலகிவிடு
مَلِيًّا
பாதுகாப்புப் பெற்றவராக

Qaala araaghibun anta 'an aalihatee yaaa Ibraaheemu la 'il lam tantahi la arjumannaka wahjumee maliyyaa

அதற்கவர் "இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக்கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீங்கள் எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
سَلَٰمٌ
பாதுகாப்பு உண்டாகுக
عَلَيْكَۖ
உமக்கு
سَأَسْتَغْفِرُ
பாவமன்னிப்புக் கோருவேன்
لَكَ
உமக்காக
رَبِّىٓۖ
என் இறைவனிடம்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கின்றான்
بِى
என் மீது
حَفِيًّا
அருளுடையவனாக

Qaala salaamun 'alaika sa astaghfiru laka Rabbeee innahoo kaana bee hafiyyaa

அதற்கு (இப்ராஹீம், இதோ நான் செல்கிறேன்) "உங்களுக்குச் ஈடேற்றம் உண்டாவதாக! பின்னர் நான் உங்களுக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்" என்று கூறினார்.

Tafseer

وَأَعْتَزِلُكُمْ
இன்னும் உங்களை விட்டு விலகி விடுகின்றேன்
وَمَا تَدْعُونَ
இன்னும் நீங்கள் வணங்குகின்றவற்றை
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
وَأَدْعُوا۟
நான் பிரார்த்திப்பேன்
رَبِّى
என் இறைவனிடம்
عَسَىٰٓ أَلَّآ
ஆகாமல் இருப்பேன்
بِدُعَآءِ
பிரார்த்திப்பதில்
رَبِّى
என் இறைவனிடம்
شَقِيًّا
நம்பிக்கை அற்றவனாக

Wa a'tazilukum wa maa tad'oona min doonil laahi wa ad'o Rabbee 'asaaa allaaa akoona bidu'aaa'i Rabbee shaqiyyaa

"உங்களைவிட்டும் அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வமென) அழைப்பவைகளை விட்டும் நான் விலகிக் கொள்கிறேன். என் இறைவனையே நான் (வணங்கி) பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த் தனைகள் எனக்குத் தடுக்கப்படாதிருக்கும் என்று நான் நம்புகிறேன்" (என்றும் கூறினார்.)

Tafseer

فَلَمَّا ٱعْتَزَلَهُمْ
அவர் அவர்களை விட்டு விலகியபோது
وَمَا يَعْبُدُونَ
இன்னும் அவர்கள் வணங்கியதை
مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்வை
وَهَبْنَا
வழங்கினோம்
لَهُۥٓ
அவருக்கு
إِسْحَٰقَ
இஸ்ஹாக்கை
وَيَعْقُوبَۖ
இன்னும் யஃகூபை
وَكُلًّا
இன்னும் ஒவ்வொருவரையும்
جَعَلْنَا
ஆக்கினோம்
نَبِيًّا
நபியாக

Falamma' tazalahum wa maa ya'budoona min doonil laahi wahabnaa lahoo is-haaqa wa ya'qoob, wa kullan ja'alnaa Nabiyyaa

பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாத தெய்வங்களை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் அளித்தோம். அவர்கள் ஒவ்வொரு வரையும் நபியாகவும் ஆக்கினோம்.

Tafseer

وَوَهَبْنَا
வழங்கினோம்
لَهُم
அவர்களுக்கு
مِّن رَّحْمَتِنَا
நமது அருளிலிருந்து
وَجَعَلْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
لَهُمْ
அவர்களுக்கு
لِسَانَ
புகழை
صِدْقٍ
உண்மையான
عَلِيًّا
உயர்வான

Wa wahabnaa lahum mirrahmatinaa wa ja'alnaa lahum lisaana sidqin 'aliyyaa

அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் "அலைஹிஸ் ஸலாம்" என்று எந்நாளும் துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.)

Tafseer