Skip to main content

قَالَ
அவர் கூறினார்
كَذَٰلِكِ
அப்படித்தான் நடக்கும்
قَالَ
கூறுகிறான்
رَبُّكِ
உமது இறைவன்
هُوَ
அது
عَلَىَّ
தனக்கு
هَيِّنٌۖ
எளிதாகும்
وَلِنَجْعَلَهُۥٓ
அவரை நாம் ஆக்குவதற்காகவும்
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
لِّلنَّاسِ
மனிதர்களுக்கு
وَرَحْمَةً
ஓர் அருளாக
مِّنَّاۚ
நம்புறத்திலிருந்து
وَكَانَ
இது இருக்கிறது
أَمْرًا
ஒரு காரியமாக
مَّقْضِيًّا
முடிவுசெய்யப்பட்ட

Qaala kazaaliki qaala Rabbuki huwa 'alaiya yaiyimunw wa linaj 'alahooo Aayatal linnaasi wa rahmatam minnaa; wa kaana amram maqdiyyaa

அதற்கவர் "அவ்வாறே (நடைபெறும் என்று) உங்கள் இறைவன் கூறுகின்றான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாகவும், நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம் (என்றும்) இது முடிவாக உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம்" என்றும் கூறுகின்றான்.

Tafseer

فَحَمَلَتْهُ
பின்னர், அவர் அவரை கர்ப்பத்தில் சுமந்தாள்
فَٱنتَبَذَتْ بِهِۦ
அதனுடன் விலகிச் சென்றார்
مَكَانًا
இடத்திற்கு
قَصِيًّا
தூரமான

Fahamalat hu fantabazat bihee makaanan qasiyyaa

பின்னர், மர்யமுக்கு(த் தானாகவே) கர்ப்பமேற்பட்டு கர்ப்பத்துடன் (அவர் இருந்த இடத்திலேயே வெளியேறி) தூரத்திலுள்ள ஒரு இடத்தைச் சென்றடைந்தார்.

Tafseer

فَأَجَآءَهَا
கொண்டு சென்றது அவரை
ٱلْمَخَاضُ
பிரசவ வேதனை
إِلَىٰ جِذْعِ
மரத்தடிக்கு
ٱلنَّخْلَةِ
பேரிச்சமரம்
قَالَتْ
அவர் கூறினார்
يَٰلَيْتَنِى مِتُّ
நான் மரணிக்க வேண்டுமே
قَبْلَ
முன்னரே
هَٰذَا
இதற்கு
وَكُنتُ
இன்னும் நான் இருக்க வேண்டுமே
نَسْيًا مَّنسِيًّا
முற்றிலும் மறக்கப்பட்டவளாக

Fa ajaaa 'ahal makhaadu ilaa jiz'in nakhlati qaalat yaa laitanee mittu qabla haazaa wa kuntu nasyam mansiyyaa

பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு "இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என்னுடைய எண்ணமே(ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு)முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே" என்று (வேதனையுடன்) கூறினார்.

Tafseer

فَنَادَىٰهَا
அவரை அவர் கூவி அழைத்தார்
مِن تَحْتِهَآ
அதனுடைய அடிப்புறத்திலிருந்து
أَلَّا تَحْزَنِى
கவலைப்படாதீர்
قَدْ جَعَلَ
ஏற்படுத்தி இருக்கின்றான்
رَبُّكِ
உமது இறைவன்
تَحْتَكِ
உமக்குக் கீழ்
سَرِيًّا
ஓர் ஊற்றை

Fanaadaahaa min tahtihaan allaa tahzanee qad ja'ala Rabbuki tahtaki sariyyaa

(பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரீல்) சப்தமிட்டு "(மர்யமே!) நீங்கள் கவலைப்படாதீர்கள்! உங்களுக்குச் சமீபமாக உங்கள் இறைவன் ஓர் ஊற்று (உதித்து) ஓடச் செய்திருக்கிறான்.

Tafseer

وَهُزِّىٓ
இன்னும் அசைப்பீராக
إِلَيْكِ
உம் பக்கம்
بِجِذْعِ
நடுத்தண்டை
ٱلنَّخْلَةِ
பேரிச்ச மரத்தின்
تُسَٰقِطْ
கொட்டும்
عَلَيْكِ
உம்மீது
رُطَبًا
பழங்களை
جَنِيًّا
பழுத்த

Wa huzzeee ilaiki bijiz 'in nakhlati tusaaqit 'alaiki rutaban janiyyaa

இப்பேரீச்ச மரத்தின் கிளையை, நீங்கள் உங்கள் பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குங்கள். அது பழுத்த பழங்களை உங்கள் மீது சொரியும்.

Tafseer

فَكُلِى
இன்னும் நீர் புசிப்பீராக
وَٱشْرَبِى
பருகுவீராக
وَقَرِّى
குளிர்வீராக
عَيْنًاۖ
கண்
فَإِمَّا تَرَيِنَّ
ஆகவே நீர் பார்த்தால்
مِنَ ٱلْبَشَرِ
மனிதரில்
أَحَدًا
யாரையும்
فَقُولِىٓ
கூறுவீராக
إِنِّى نَذَرْتُ
நிச்சயமாக நான்/நேர்ச்சை செய்துள்ளேன்
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
صَوْمًا
நோன்பை
فَلَنْ أُكَلِّمَ
ஆகவே நான் அறவே பேசமாட்டேன்
ٱلْيَوْمَ
இன்று
إِنسِيًّا
எந்த மனிதனிடமும்

Fakulee washrabee wa qarree 'ainaa; fa immaa tarayinnna minal bashari ahadan faqooleee innee nazartu lir Rahmaani sawman falan ukallimal yawma insiyyaa

(அப்பழங்களை) நீங்கள் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) நீங்கள் (உங்கள்) கண் குளிர்ந்திருங்கள்! நீங்கள் மனிதரில் எவரைக் கண்டபோதிலும் "நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்கிறேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன்" என்று கூறிவிடுங்கள் என்றும் கூறினார்.

Tafseer

فَأَتَتْ
அவர் வந்தார்
بِهِۦ
அதைக் கொண்டு
قَوْمَهَا
தனது மக்களிடம்
تَحْمِلُهُۥۖ
அதைச் சுமந்தவராக
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
يَٰمَرْيَمُ
மர்யமே!
لَقَدْ جِئْتِ
நீ செய்து விட்டாய்
شَيْـًٔا
ஒரு காரியத்தை
فَرِيًّا
பெரிய

Fa atat bihee qawmahaa tahmiluhoo qaaloo yaa Maryamoo laqad ji'ti shai'an fariyyaa

பின்னர், (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்துகொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) "மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய்.

Tafseer

يَٰٓأُخْتَ
சகோதரியே
هَٰرُونَ
ஹாரூனுடைய
مَا كَانَ
இருக்கவில்லை
أَبُوكِ
உமது தந்தை
ٱمْرَأَ سَوْءٍ
கெட்டவராக
وَمَا كَانَتْ
இருக்கவில்லை
أُمُّكِ
உமது தாயும்
بَغِيًّا
நடத்தைகெட்டவளாக

Yaaa ukkhta Haaroona maa kaana abokim ra-a saw'inw wa maa kaanat ummuki baghiyyaa

ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்கவில்லை(யே); உன் தாயும் நடத்தைக்கெட்டவளாக இருக்கவில்லையே!" என்று கூறினார்கள்.

Tafseer

فَأَشَارَتْ
ஜாடை காண்பித்தார்
إِلَيْهِۖ
அதன் பக்கம்
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
كَيْفَ
எப்படி
نُكَلِّمُ
நாங்கள் பேசுவோம்
مَن كَانَ
இருக்கின்றவரிடம்
فِى ٱلْمَهْدِ
மடியில்
صَبِيًّا
குழந்தையாக

Fa ashaarat ilaih; qaaloo kaifa nukallimu man kaana fil mahdi sabiyyaa

(அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் "மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
إِنِّى
நிச்சயமாக நான்
عَبْدُ
அடிமை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ءَاتَىٰنِىَ
எனக்குக்கொடுப்பான்
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَجَعَلَنِى
என்னை ஆக்குவான்
نَبِيًّا
நபியாக

Qaala innee 'abdullaahi aataaniyal Kitaaba wa ja'alanee Nabiyyaa

(இதனைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய ஓர் அடிமை. அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான்.

Tafseer