Skip to main content

وَأَنِ ٱعْبُدُونِىۚ
இன்னும் என்னை வணங்குங்கள்
هَٰذَا
இதுதான்
صِرَٰطٌ
பாதையாகும்
مُّسْتَقِيمٌ
நேரான

Wa ani'budoonee; haazaa Siraatum Mustaqeem

நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழி (என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?)

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَضَلَّ
அவன் வழிகெடுத்துள்ளான்
مِنكُمْ
உங்களில்
جِبِلًّا
படைப்புகளை
كَثِيرًاۖ
அதிகமான
أَفَلَمْ تَكُونُوا۟
நீங்கள்இருக்கவில்லையா?
تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிகின்றவர்களாக

Wa laqad adalla minkum jibillan kaseeraa; afalam takoonoo ta'qiloon

(அவ்வாறிருந்தும்) உங்களில் பெரும் தொகையினரை அவன் நிச்சயமாக வழி கெடுத்துவிட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

Tafseer

هَٰذِهِۦ
இதுதான்
جَهَنَّمُ
நரகம்
ٱلَّتِى كُنتُمْ
நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த

Haazihee Jahannamul latee kuntum too'adoon

உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான்.

Tafseer

ٱصْلَوْهَا
அதில் நீங்கள் பொசுங்குங்கள்
ٱلْيَوْمَ
இன்று
بِمَا كُنتُمْ
நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்

Islawhal Yawma bimaa kuntum takfuroon

இதனை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்துவிடுங்கள்" (என்றும் கூறுவோம்).

Tafseer

ٱلْيَوْمَ
இன்று
نَخْتِمُ
முத்திரையிடுவோம்
عَلَىٰٓ أَفْوَٰهِهِمْ
அவர்களின் வாய்களின் மீது
وَتُكَلِّمُنَآ
இன்னும் நம்மிடம் பேசும்
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
وَتَشْهَدُ
இன்னும் சாட்சி சொல்லும்
أَرْجُلُهُم
அவர்களின் கால்கள்
بِمَا كَانُوا۟
அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு

Al-Yawma nakhtimu 'alaaa afwaahihim wa tukallimunaaa aideehim wa tashhadu arjuluhum bimaa kaanoo yaksiboon

அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிட்டு அவர்களுடைய கைகளைப் பேசும்படி செய்வோம். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.

Tafseer

وَلَوْ نَشَآءُ
நாம் நாடியிருந்தால்
لَطَمَسْنَا
குருடாக்கி இருப்போம்
عَلَىٰٓ أَعْيُنِهِمْ
அவர்களின் கண்களை
فَٱسْتَبَقُوا۟
தவறி இருப்பார்கள்
ٱلصِّرَٰطَ
பாதை
فَأَنَّىٰ
ஆக, எப்படி
يُبْصِرُونَ
பார்ப்பார்கள்

Wa law nashaaa'u lata masna 'alaaa aiyunihim fasta baqus-siraata fa-annaa yubsiroon

நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கி விடுவோம். (அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் எதைத்தான் பார்க்க முடியும்?

Tafseer

وَلَوْ نَشَآءُ
நாம் நாடியிருந்தால்
لَمَسَخْنَٰهُمْ
அவர்களை உட்கார வைத்திருப்போம்
عَلَىٰ مَكَانَتِهِمْ
அவர்களின் இடத்திலேயே
فَمَا ٱسْتَطَٰعُوا۟
ஆக, அவர்கள் ஆற்றல் பெறமாட்டார்கள்
مُضِيًّا
நடப்பதற்கு(ம்)
وَلَا يَرْجِعُونَ
திரும்பி வரவும் மாட்டார்கள்

Wa law nashaaa'u lamasakhnaahum 'alaa makaanatihim famas-tataa'oo mudiyyanw-wa laa yarji'oon

நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது.

Tafseer

وَمَن نُّعَمِّرْهُ
நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கின்றோமோ
نُنَكِّسْهُ
அவரை திருப்பி விடுவோம்
فِى ٱلْخَلْقِۖ
படைப்பில்
أَفَلَا يَعْقِلُونَ
அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?

Wa man nu 'ammirhu nunakkishu fil-khalq; afalaa ya'qiloon

நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகின்றோம். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer

وَمَا عَلَّمْنَٰهُ
நாம் அவருக்கு கற்றுத்தரவில்லை
ٱلشِّعْرَ
கவிதைகளை
وَمَا يَنۢبَغِى
தகுதியானதும் இல்லை
لَهُۥٓۚ
அவருக்கு
إِنْ هُوَ
இது இல்லை
إِلَّا ذِكْرٌ
அறிவுரை(யும்) அன்றி
وَقُرْءَانٌ
குர்ஆனும்
مُّبِينٌ
தெளிவான(து)

Wa maa 'allamnaahush shi'ra wa maa yambaghee lah; in huwa illaa zikrunw-wa Qur-aanum mubeen

(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசத்தையும் தவிர வேறில்லை.

Tafseer

لِّيُنذِرَ
அது எச்சரிப்பதற்காகவும்
مَن
எவர்
كَانَ
இருக்கின்றார்
حَيًّا
உயிருள்ளவராக
وَيَحِقَّ
உறுதியாகி விடுவதற்காகவும்
ٱلْقَوْلُ
வாக்கு
عَلَى
மீது
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்

Liyunzira man kaana haiyanw-wa yahiqqal qawlu 'alal-kaafireen

(அன்றி, இது) உயிரோடு இருப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்து (மரணித்தவர்களை போன்ற) நிராகரிப்பவர்கள் மீது தண்டனையை உறுதிப்படுத்துகின்றது.

Tafseer