Skip to main content

وَنُفِخَ
ஊதப்படும்
فِى ٱلصُّورِ
சூரில்
فَإِذَا هُم
அப்போது அவர்கள்
مِّنَ ٱلْأَجْدَاثِ
கப்ருகளில் இருந்து
إِلَىٰ رَبِّهِمْ
தங்கள் இறைவன் பக்கம்
يَنسِلُونَ
விரைவாக வெளியேறி வருவார்கள்

Wa nufikha fis-soori faizaa hum minal ajdaasi ilaa Rabbihim yansiloon

(மறுமுறை) "ஸூர்" ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக ஓடி வருவார்கள்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
يَٰوَيْلَنَا
எங்கள் நாசமே!
مَنۢ بَعَثَنَا
யார் எங்களை எழுப்பியது?
مِن مَّرْقَدِنَاۗۜ
எங்கள் தூங்குமிடத்தில் இருந்து
هَٰذَا
இது
مَا وَعَدَ
வாக்களித்தது(ம்)
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
وَصَدَقَ
உண்மையாகக் கூறியதும்
ٱلْمُرْسَلُونَ
தூதர்கள்

Qaaloo yaa wailanaa mam ba'asanaa mim marqadinaa; haaza maa wa'adar Rahmanu wa sadaqal mursaloon

அன்றி "எங்களுடைய துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர்கள் யார்?" என்று கேட்பார்கள். (அதற்கு மலக்குகள் அவர்களை நோக்கி) "ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்" (என்று கூறுவார்கள்).

Tafseer

إِن كَانَتْ
அது இருக்காது
إِلَّا
தவிர
صَيْحَةً
சப்தமே
وَٰحِدَةً
ஒரே ஒரு
فَإِذَا هُمْ
அப்போது அவர்கள்
جَمِيعٌ
அனைவரும்
لَّدَيْنَا
நம்மிடம்
مُحْضَرُونَ
ஆஜராக்கப்படுவார்கள்

In kaanat illaa saihatanw waahidatan fa-izaa hum jamee'ul ladainaa muhdaroon

அது ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது! அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டு வரப்பட்டு விடுவார்கள்.

Tafseer

فَٱلْيَوْمَ
இன்றைய தினம்
لَا تُظْلَمُ
அநீதி இழைக்கப்படாது/எந்த ஓர் ஆன்மாவும்
شَيْـًٔا وَلَا
சிறிதளவும்
تُجْزَوْنَ
கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்
إِلَّا مَا
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர

Fal-Yawma laa tuzlamu nafsun shai'anw-wa laa tujzawna illaa maa kuntum ta'maloon

அந்நாளில் யாதொரு ஆத்மாவுக்கும் (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. அவர்கள் செய்தவைகளுக்கன்றி அவர்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகள்
ٱلْيَوْمَ
இன்று
فِى شُغُلٍ
வேளையில் இருந்துகொண்டு
فَٰكِهُونَ
இன்பமனுபவிப்பார்கள்

Inna Ashaabal jannatil Yawma fee shughulin faakihoon

அந்நாளில் நிச்சயமாக சுவனவாசிகள் சந்தோஷமாக காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

Tafseer

هُمْ
அவர்களும்
وَأَزْوَٰجُهُمْ
அவர்களின் மனைவிகளும்
فِى ظِلَٰلٍ
நிழல்களில்
عَلَى ٱلْأَرَآئِكِ
கட்டில்கள் மீது
مُتَّكِـُٔونَ
சாய்ந்தவர்களாக

Hum wa azwaajuhum fee zilaalin 'alal araaa'iki muttaki'oon

அவர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் நிழலின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து (உட்கார்ந்து) கொண்டிருப்பார்கள்.

Tafseer

لَهُمْ
அவர்களுக்கு
فِيهَا
அதில் கிடைக்கும்
فَٰكِهَةٌ
கனிகள்
وَلَهُم
இன்னும் அவர்களுக்கு
مَّا يَدَّعُونَ
அவர்கள் ஆசைப்படுவதும்

Lahum feehaa faakiha tunw-wa lahum maa yadda'oon

அதில் அவர்களுக்குப் பலவகைக் கனி வர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும்.

Tafseer

سَلَٰمٌ
ஸலாம் உண்டாகட்டும்
قَوْلًا
கூறப்படும்
مِّن رَّبٍّ
இறைவன் புறத்தில்
رَّحِيمٍ
மகா கருணையாளன்

Salaamun qawlam mir Rabbir Raheem

நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) "ஈடேற்றம் உண்டாவதாகுக!" (என்று கூறப்படும்.)

Tafseer

وَٱمْتَٰزُوا۟
நீங்கள் பிரிந்து விடுங்கள்!
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
أَيُّهَا ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகளே!

Wamtaazul Yawma ayyuhal mujrimoon

(மற்ற பாவிகளை நோக்கி) "குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (நல்லவர்களிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்" (என்று கூறப்படும்).

Tafseer

أَلَمْ أَعْهَدْ
நான் கட்டளையிடவில்லையா?
إِلَيْكُمْ
உங்களுக்கு
يَٰبَنِىٓ ءَادَمَ
ஆதமின் மக்களே!
أَن لَّا
நீங்கள் வணங்காதீர்கள் என்று
ٱلشَّيْطَٰنَۖ
ஷைத்தானை
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَكُمْ
உங்களுக்கு
عَدُوٌّ
எதிரியாவான்
مُّبِينٌ
தெளிவான

Alam a'had ilaikum yaa Baneee Aadama al-laa ta'budush Shaitaana innahoo lakum 'aduwwum mubeen

"ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்க வில்லையா?

Tafseer